Wednesday, 29 August 2012

ஸ்டெம் செல்கள்...


ஸ்டெம் செல்கள் உலகில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்றன. ஸ்டெம் செல் இல்லாமல் எந்த ஒரு உயிரும் இதுவரை வாழ்ந்ததில்லை. 

அதாவது, உடலின் எந்த ஒரு செல், தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, உடலில் இருக்கும் 200 - க்கும் மேற்பட்ட செல்களை தேவையான தருணத்தில் உருமாற்றிக் கொள்கிறதோ அந்த செல்லை, ஸ்டெம் செல் என்கிறது அறிவியல்.

நம் மனித உடலில் சுமார் 1 லட்சம் கோடி செல்கள் இருந்தாலும், அதற்கெல்லாம் ஸ்டெம் செல்களே அடிப்படையாக இருக்கின்றன. 
 
நம் உடலில் உள்ள எந்த ஒரு செல்லுக்கும் இல்லாத சிறப்பு ஸ்டெம் செல்களுக்கு மட்டுமே உண்டு.

ஸ்டெம் செல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வதோடு, வேறொரு பண்புடைய மற்றொரு செல்லையும் அது உருவாக்கும். மேலும், உடலில் உள்ள எல்லா வகையான செல்களாகவும் உருமாறிக் கொள்ளும்.

ஃபீடல் ஸ்டெம் செல், அடல்டு ஸ்டெம் செல், ஆம்னியாட்டில் ஸ்டெம் செல், இன்டியூஸ்டு ப்ளூரிபொடென்ட் ஸ்டெம் செல் என பல்வேறு வகையான ஸ்டெம் செல்கள் நம் உடலில் இருக்கின்றன.

மனிதனின் விந்தனுவிலும், கருமுட்டையிலும் இருப்பது தான் முதல் ஸ்டெம் செல்கள். இவைகள் கரு உருவாவதற்குப் பயன்படுகிறன. இரண்டும் இணைத்த பிறகு 4 அல்லது 5 தினங்களில் உருவெடுப்பது தான் embryonic stem cell கள். இது மனிதனின் முழு செல்களையும் உருவாக்க கூடிய ஸெடெம் செல்களாக இயங்குகின்றன.

மேலும் குழந்தை பிறந்த பின், தொப்புள் கொடியில் adult stem cellகள் வளர்கின்றன.

மனிதனின் முழு உடலையும் உருவாக்க கூடிய செல்கள் இல்லையெனிலும் அதிகப்படியான உறுப்புகளை உருவாக்க கூடிய செல்லாக மாறும் சக்தி adult stem cellகளுக்கு வாய்க்கப்ட்டிருக்கிறது.
 
வளர்ந்த மனிதனின் முதுகுத் தண்டில் அதிகப்படியான செல்களை உருவாக்க கூடிய stem cells உள்ளன. இது மட்டுமல்லாமல் உடம்பின் பல பாகங்களில் இந்த stem cell கள் இருக்கும்.

 
பொதுவாக ஸ்டெம் செல்கள், சிசுகளில் இருந்தும், உடலின் திசுக்களிலிருந்தும் எடுக்கப்படுகின்றன..

மேலும் இது மட்டும் இல்லாமல் செயற்கையான ஸ்டெம் செல்களும் உருவாக்கப்படுகின்றன. அவை, தூண்டப்பட்ட ஸ்டெம் செல்களாகும்.

நமது உடலில் தோல் ரோமத்தில் உள்ள செல்களை, மரபணுவியல் தொழில் நுட்பத்தின் மூலம் ஸ்டெம் செல்லாக மாற்றுகிறார்கள்.  இதுவே தூண்டப்பட்ட செல்களாகும்.

ஸ்டெம் செல்களின் ஆய்வுகள், வெறும் ஆய்வாக மட்டுமே இல்லாமல், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு சில உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து மனித இனத்தை காக்க முடியும் என்பதை 1975 ஆம் ஆண்டு மருத்துவர்கள் நிரூபித்தார்கள்.  

1970 களில் உடலில் ஏற்படும் எல்லாவகையான புற்று நோய்களுமே, சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் வளர்ந்துவிடும் தன்மையில் இருந்து வந்தன.

புற்று நோயில் உள்ள ஒரு குறிப்பிட்ட வகை செல்கள், ஸ்டெம் செல்களின் பிரத்தியேக குணங்களைக் கொண்டிருந்தது தான், இதற்கான அடிப்படைக் காரணம் என்பதைக் கண்டறிந்தார்கள்.

அதனால், சிகிச்சையாக வேறு ஒருவரின் எலும்பு மஞ்சையிலிருந்து, ஸ்டெம் செல்கள எடுத்து ஒரு நோயாளிக்கு செலுத்தும் போது,  அங்கு புதிய நோய் எதிர்ப்பு சக்திஏற்படுகிறது. 

எலும்பு மஞ்சையால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, நோயாளியின் புற்றுநோயை எதிர்த்து போராடி அழிக்கும் திறன் கொண்டதுஎன்பதை அறிஞர்கள் கண்டறிந்தார்கள்.
  
இதை 1975-ல், ரத்தப் புற்றுநோயாளி ஸ்டாலின் என்பவருக்கு உலகின் முதல் எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை செய்தார்கள்.

இச்சிகிச்சையில், அவர் சகோதரரின் எலும்பு மஜ்ஜையையும்கதிர்வீச்சு  மற்றும் மருந்து சிகிச்சையையும், சேர்த்து வெற்றிகரமாக செய்து முடித்ததார்கள். இதுவே உலகத்தின் முதல் stem cells  சிகிச்சை என்கிறார்கள்.

தூண்டப்பட்ட ஸெடம் செல்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, தோலில் இருக்கும் செல்களில் ரத்த அணுக்களை உருவாக்க முடியும் என்பதை கனாடா நாட்டு ஸ்டெம் செல் ஆய்வாளர் மிக் பாட்டியா நிரூபித்துள்ளார்.

தோல் செல்களிலிருந்து ரத்தத்தை உருவாக்கியிருக்கும் இந்தக் குழு, இனி அதே தோல் செல்களில் இருந்து உடலின் வேறுபகுதிகளின் செல்கள் பலவற்றையும் உரிவாக்க முடியுமா என்று ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

மூளையைப் பாதிக்கும் டிமென்ஷியா போன்ற பல்வேறு மூளைக் கோளாருகள் மூளையின் செல்களை அழித்து விடுவதால், மூளை செயலிழந்து விடுகிறது. இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தோல் செல்களிலிருந்து முளைசெல்களை உருவாக்க முடிந்தால் அவற்றை மூளைக்குள் செலுத்தி மூளையின் செயல்பாட்டை சீரமைத்து விட முடியும் என சொல்கிறார்கள்.  

இதனால், ஸ்டெம் செல்கள் மருத்துவத்துறைக்கு கிடைத்துள்ள ஒரு `அட்சயப் பாத்திரம்அல்லது `அமுதசுரபிஎன்றே சொல்லலாம்.

ஏனென்றால் மருத்துவத்துறை இதுநாள் வரையில் சந்தித்து வரும் எண்ணற்ற சவால்களை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டே வருகின்றது இந்த ஸ்டெம் செல்களில் கண்டுபிடிப்புகள்.

பால் பற்கள், மற்றும் கடைவாய் பற்களைப் பிடுங்க நேரும்போது அவற்றிலிருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. அதில் அண்மையில் ஜப்பானிய ஆய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

அதன்மூலம்ஸ்டெம் செல் வங்கிகள் உருவாக்கப்பட்டு, அவை ஜப்பானியர்களுக்கு ஒத்துப்போகிறதா என்றும் ஆராயந்தார்கள். ஏறக்குறைய 20 சதவீத ஜப்பானியர்களின் மரபியலில் இந்த ஸ்டெம் செல்கள் ஒத்துப்போவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

 யேல் பல்கலைகழக ஆய்வாளர்கள் முடி வளர தூண்டும் ஸ்டெம் செல்களைக் அணாமையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆதார செல் தோலின் கொழுப்பு அடுக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

இதன்மூலம், முடியின் வேர்ப் பகுதியில் உள்ள ஸ்டெம் செல்களைத் தூண்டி வழுக்கை தலை உள்ளவர்களுக்கு வேர்க்கால் பகுதியில் உள்ள முடியை சீக்கிரமாக வளரச் செய்தார்கள். 

இந்த வரிசையில் மேலும் ஒரு மைல்கல்லாக, உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஸ்டெம் செல்களில் இருந்து, இயற்கையான இதயத்தைப் போலவே துடிக்கும் திறனுள்ள புதிய இதய தசைகளை உருவாக்கினார்கள்.

வருடா வருடம் லட்சக் கணக்கான உயிர்களை பலிகொண்டு வரும் இதய நோய்களுக்கு ஸ்டெம் செல்கள் மூலம் தீர்வு உண்டு என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் நிரூப்பித்தார்கள்.
  
இந்த பிரத்தியேகமான இதய தசை உயிரணுக்களின் துடிக்கும் வேகம், ஓய்வாக உள்ள மனிதர்களின் இதய துடிப்பின் வேகத்தை ஒத்து இருக்கிறது.

அதாவது, ஒரு நிமிடத்துக்கு 60 துடிப்புகளாக இதயம் இயக்குவதாகும்.
 இதயத்தின் ரத்தத்தை வெளியேற்றும் திறனைப் பாதிக்கும் குறைபாடான `அரித்மியாநோயிற்கு தீர்வு கிடைக்கவே இந்த ஸ்டெம் செல் ஆய்வு, மேற்கொள்ளபட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்தும் ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்பட்டு, அதற்கென உள்ள வங்கிகளில் 0 டிகிரிக்கும் குறைவான தட்ப வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட நபருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படும்போது, இந்த ஸ்டெம்செல்கள் மூலம் நோயைக் குணப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களையும் ஸ்டெம்செல்கள் குணப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஸ்டெம்செல்களை இதய நோயாளியின் உடலில் செலுத்தப்பட்டு ஒரே நாளில், ரத்தக்குழாயில் உள்ள கோளாறுகளைக் குணப்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெம் செல்களை வைத்து, எலும்பு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளுக்கும் தற்போது செயற்கையாக தயாரிக்கப்பட்ட எலும்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்க்கான பரிசோதனையில் இஸ்ரேல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு புதிய செல்களை அகற்றி விட்டு புதிய செல்களை மனித உடலில் உருவாக்கும் முயற்சியே ஸ்செம் செல் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இனி மனித உதிரி பாகங்கள் உண்டாக்க எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. தன் கையே தனக்குதவி என்று நம்மை நாமே மருத்துவர்கள் உதவி கொண்டு காப்பாற்றிக் கொள்ள முடியும். 

ஸ்டெம் செல்கள் வழியாக அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணமுடியும் என்று திட்டவட்டமான அறிக்கை இன்னும் வரவில்லை என்றாலும, இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் நிலமை மாறும்.

மருத்துவத்தில் புதுபுது கண்டுபிடிப்புகள் வரும் போதெல்லாம் புதுபுது நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன.

உலகத்தில் கடைசி மனிதன் இருக்கும் வரை, கண்டுபிடிப்புகள் தொடந்து கொண்டே இருக்கும்.

அதோடு, ஸ்டெம் செல்கள் உலக மருத்துவத்தில் மாபெரும் மாற்றமாக இருக்கும்.

மெட்ரோ ரயில்...



கண்டுபிடிப்புகளின் யுகப்புரட்சி தான் இந்த யுகம்.
இன்றைய மனிதர்களின் தேடுதல் முழுக்க முழுக்க யந்திரமாக்கப்பட்டு விட்டது.
அந்த வகையில், அச்சு யந்திரமும், போக்குவரத்தும் உலகத்தில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறன.
சமீப காலத்தில் தான், அச்சுக் கலைக் கண்காட்சியின் பிரமாண்டத்தை ஜெர்மன் நாட்டில் ட்ரூபா என்ற இடத்தில் நடத்திக் காட்டினார்கள்.
போக்குவரத்தில், பால் வெளி அண்டம் வரை தொட்டு விட்டார்கள்.
பூமி தாண்டிப் பறக்கும் நாம், மண்ணைக் குடைந்து குகை வழிப்பாதைகள் அமைத்து, புகைவண்டிப் பயணத்தில் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்தச் சுரங்க வழிப்பாதைகளை நமது தமிழ் மன்னர்கள் ரகசிய வழித் தடங்களுக்காகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.
குகைவழிப் பயணத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்.....
 1670 களில்... போக்குவரத்தில் மௌவுண் பேட்டன் என்ற மாமனிதனால் சென்னையின் கோட்டையிலிருந்து பரங்கி மலை வரைக்கும் தார்ச் சாலைகள் போடப்பட்டது.
 1856 களில்... ராயபுரத்துக்கும் ஆர்க்காட்டுக்கும் இடையில் ரயில் பயணங்கள் தொடங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இந்த மக்கள் தொகை பெருக்கத்தைச் சமாளிக்க சென்னையிலும் பூமியைக் குடைந்து காலுக்கடியில் ஓடப்போகிறது, மெடரோ ரயில் பயணம்.
மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்தும் சென்னையில் மெட்ரோ ரயில் பயணத்தைக் கொண்டு வர, ஒப்பந்தகள் முடிந்து செயலில் இறங்கி விட்டார்கள்.
16 நகராட்சிகள், 20 நகரப்பஞ்சாயத்துகள், 214 கிராமங்கள் என்று 1,189 சதுர கிலோ மீட்டர் சுற்றவு கொண்ட சென்னையில், 723 வழித்தடங்களில் 3500 பேருந்துகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
இதோடு 450 ரயில்கள் சென்னையில் இயங்கினாலும் போக்குவரத்தின் நெருக்கடியில் எறும்பு புற்றை இடித்தது போல மக்கள் பொங்கி வழிகிறார்கள்.
கார்களும், டூவிலர்களும் இருமிக்கொண்டே சாலை நிறைக்கும் இந்தக் காலத்தில், ச்ஷேர் ஆட்டேக்களே பெரும்பாலும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறன.
தரைக்கு அடியிலும், ராசசத் தூண்கள் தாங்கும் பாலங்களிலும் மெட்ரோல் ரயில் அமைக்க சென்னையில் பெரும் வேலைப்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறதன.
தரையைக் குடைந்து ரயில் பாதை அமைக்க மண்ணியல் நிபுணர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
பாறைகளும், சேற்றுப் பகுதிகளும் ஆராய்ந்து தகுந்த முறையில் வழித் தடம் அமைத்துக் கொண்டியிருக்கிறார்கள்.
டனல் போரிங் மிஷின் என்ற மிகப் பெரிய யந்திரத்தில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மண்ணைக் குடைய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
24 மணி நேரத்தில் 8 லிருந்து 10 மீட்டர் வரை டனல் போரிங் மிஷினால் சுரங்கப் பாதை அமைக்கிறார்கள்.
டனல் மிஷினின் முகப்பு எடை 170 டன் என்று சொல்கிறார்கள்.
கடினமான பாறைகளையும் அறுத்து எடுக்கும் வகையில், புள்ளி புள்ளியாகத் தெரியும் 60 பிளேடுகள், மிஷினின் வெவ்வேறு திசையில் பொருத்தப்பட்டுள்ளன. 
ஜெனரேட்டர், கம்பியூட்டர் அறை, கேண்டின், ஓய்வு அறை என்று 100 பேர் வேளை செய்யும் ஒரு அலுவலகம் போல டனல் மிஷின் இருக்கிறது.
மணல், பாறைத் துகள்கள், சகதி போன்றவைகள் கன்வேயர் பெல்ட் மூலம் வெளியேற்றப்படுகிறன.
ஒரு கி.மீட்டருக்கு மேல் தோண்டும் போது குழாய்களின் வழி ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.
நூற்றுக்கும் மேல் வேளை செய்யும் இடத்தில், ஆட்களைக் கொண்டு செல்லவும், உணவு இடைவேளைக்கு மாற்றவும் தற்காலிக மினி ரயில் ஒன்று அஙகு இயங்கும்.
மோனோ ரயிலுக்கு பராமரிப்புச் செலவு அதிகமாக இருப்பதால் மெட்ரோ ரயில் உகந்ததாக சொல்கிறார்கள்.
மெட்ரோ ரயில் பெட்டிகள் பிரேசில் நாட்டிலிருந்து கொண்டு வந்து இயக்கப்படுவதாக, இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஒரு மெட்ரோ ரயிலுக்கு 4 பெட்டிகள் பொருத்தப்பட்டு ஒரே நேரத்தில் 1200 பயணிகள் பயணிக்க முடியும் என்கிறார்கள்.
மெட்ரோ ரயிலின் அதிக பட்ச வேகம் 80 கி.மீட்டராகவும், சரசரி வேகம் 35 கி.மீட்டராகவும் இருக்கிறது.
நிறுத்தத்தில் 5 நிமிட இடைவெளிக்குப் பிறகு, அடுத்தடுத்து வருவதாக இயக்கப்படுகிறது, இந்த மெட்ரோல் ரயில்.
டிக்கட் வாங்க தானியங்கி வசதியும், செல் மற்றும் லேப்டாப் சார்ஜ் ஏற்றும் வசதியும் இந்த மெட்ரோ ரயிலில் இணைக்கப்பட இருக்கிறது.
மெட்ரோல் ரயில் பற்றிய படிப்புகள் சென்னைலும் இப்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறன.
சிவில். மெக்கானிக்கல், ஆர்க்கிடெக்சர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ரானிக்ஸ், எலக்ரானிக்கஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் போன்ற பாடத்திட்டங்களில், 70 / சதவிதம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மெட்ரோ ரயில் டெக்னாலஜி அண்ட் மேனேஜ் மெண்ட் என்ற படிப்புக்கு 13 மாணவர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப் படுவதாக சொல்கிறார்கள்.
மெட்ரோ ரயில் படிப்புக்காக ஒவ்வொரு மாதமும் 20000 ரூபாய் மெட்ரோல் ரயில் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் அமைக்க தோண்டும் இடத்தில் பாரம்பரியச் சின்னங்களும், புரதான நினைவிடங்களும் இருப்பதால் அது குறித்த அமைப்புகள் மெட்ரோ ரயிலுக்கு தடை விதிக்கின்றன.
மெட்ரோல் ரயிலின் முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமைக்குறியவர் பிரியங்கா என்பவர்தான்.
உலகத்திலே மிக நீளமான மெட்ரோ ரயிலை சீனாவின் தலைநகரான பெய்ஜிகில் அமைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
தரைக்கு மேலே 19 பாதைகள் ஏற்படுத்தி 516 கி. மீட்டர் நீளத்தில் மெட்ரோ ரயில் அமைக்கப் போவதாக இருக்கிறது.

பிச்சைக்காரர்கள்


யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத வரை நமக்குத் தோல்வியில்லை.

ஆனால், நடைமுறையில் யாரையாவது - எதையாவது சார்ந்து தானே வாழக்கையை நகர்த்த வேண்டியிருக்கிறது.

பணம் பதவி காதல் கண்ணீர் - பழங்கதை என்று கடந்து போன வாழ்க்கையிலும் கடக்க முடியாமல் அந்தந்த சூழலுக்குத் தக்கவாறு ஏதோ ஒரு எதிர்பார்பிலே கடைசி நிமிடம் வரை காத்துக் கிடக்கிறோம்.

பிச்சையெடுப்பது என்பது, பணமாகவும் - உணவாகவும் பொருளாகவும் பதவியாகவும் இருக்கும் கால ஓட்டத்தில், இன்னொரு மனிதனினை நம்பி பிழைப்பு நடத்தும் வாழ்க்கையை நாம் உணர முடியும். 

கோடியிலும் லட்சத்திலும் புரண்டு கொண்டு இருப்பவர்கள் மறைமுகமாக பிச்சையெடுக்கிறார்கள்.

அடுத்த நேர சோற்றுக்கே வக்கில்லாதவர்கள் தெருவில் வந்து திறந்தவெளியில் கையேந்தி விடுகிறார்கள்.

ஊனமுற்றவர்கள் மாற்றுத் திறனாளிகளாக உலகத்தைக் கலக்கிய எத்தனையோ சாகசஙகள் இருக்கின்றன.

ஆனால், பெரும்பாலும் ஊனத்தை மட்டுமே காட்டி குரல் தாழ்த்தும் பிச்சைக்கார்களை எந்தப் பேருந்து நிலையத்திலும் பார்க்கலாம்.

கலைக் கூத்தாடிகளின் வடிவத்தில் சாட்டையை முதுகில் மாறி மாறி அடித்துக் கொண்டும் பாட்டுப் பாடி, உடுக்கடித்துக் கொண்டும் பிச்சையெடுக்கிறார்கள்.

கையில் இரும்பு கம்பியைச் சுற்றிக் கொண்டு ரத்தத்தைப் பிழிந்து தன் குழந்தையின் வயிற்றில் சொட்டுச் சொட்டாய் வடியவிட்டு எல்லோரையும் அதைப் பார்க்க வைத்தும் பிச்சையெடுக்கிறார்கள்.

பூகம்பம்பத்தால் பாதிக்கப்பட்ட வடமாநிலத்து மக்கள் தங்கள் சோகத்தைத துண்டுச் சீட்டாக தமிழில் எழுதி வைத்துக் கொண்டு பிச்சையெடுக்கிறார்கள்.

குழந்தையைச் சுமந்து கொண்டு பரிதாபத்தோடு பெண்கள் கெஞ்சுகிறார்கள்.

அழுக்குக் குழந்தைகள் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டே காலில் விழுந்து கட்டிக்கொண்டு நம் ஒதுங்கினாலும் விடாமல் விரட்டுகிறார்கள்.

பணத்தையும் பெட்டியையும் தொலைத்து விட்டதாகவும் திரும்ப ஊருக்குப் போகக் கூட காசு இல்லையென்று இளைய வயது கொண்டவர்கள் 50 ரூபாயில் இருந்து 100, 200 வரை கேட்டு வாங்கி, பக்கத்துக் கடையில் சிகரட் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பேருந்து நிறுத்தத்திலோ அல்லது பூங்காக்களிலோ காதலரிடம் பிடிவாதமாக பிச்சை கேட்டு எப்டியும் காசு வாங்கிவிடுவார்கள்.

தெருக்களில் தினமும் வந்து பழக்கமானவர்களாக வீடு வீடாகச் சென்று உணவு வாங்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

திருநங்கைகள் என்றழைக்கப்படும் மூன்றாம் பாலின மனிதர்கள் பல இடங்களில் தனியுரிமை கேட்டுப் போராடி வருகிறார்கள்.

பல சமூக முற்போக்கான செயல்பாடுகளையும் நிகழ்த்துக் கலைகளையும் நடத்துகிறார்கள்.

அதே நேரத்தில் திருநங்கைகளில் சிலர், பெரும் அமைப்புகளிலும் ஹோட்டல் மற்றும் நகைக் கடைகளிலும், அடாவடியாக பிச்சை கேட்டு மிரட்டவும் செய்கிறார்கள். பிச்சை கேட்டு தராதவர்களுக்கு சாபமிடுகிறார்கள்.

*அழுக்குத் துணியைக் கிழித்துக் கட்டிக் கொண்டு பல நாட்களாக வெட்படாமல் சிக்கு பிடித்த தலை முடியோடும், சவரம் செய்யப்படாத தாடியோடும் பைத்தியக்காரர்கள் பஸ் டாப்பின் கம்பத்தில் சாய்ந்து கொண்டு பொல்லாத வார்த்தைகளில் புலம்பிக் கொண்டு இருப்பார்கள்.

*இந்தப் பைத்தியக்கார்கள் டீக்கடைகயின் முன்னால் சென்று நின்றாலே கையில் டீ ஆற்றிக் கொடுப்பதை நாம் பார்க்க முடியும்.

வயதானவர்கள் ஊனமுற்றவர்கள் பார்வையற்றவர்கள் சாலையோரங்களில் சுறுண்டு படுத்திருக்கும் போது சில அறக்கட்டளைகளும், சுய உதவிக் குழுக்களும் உணவுப் பொட்டலங்களை அவர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தின், கோயமுத்தூர் மாவட்டத்தில் ஏற்படுத்தப்ட்ட பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு சங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்தது.


இச்சஙகத்தின் மூலமாக, பிச்சைக்காரர்கள் மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு முடி வெட்டி சவரம் செய்யப்பட்டது. சோப்பு ஷாம்பூ அளிக்கப்பட்டு குளிக்க செய்து புத்தாடைகள் அளிக்கப்பட்டது. சுட சுட உணவு அளிக்கப்பட்டு, மன நல கவுன்சல்லிங் அளிக்கப்பட்டது.

அதன்படி ஒவ்வொருவருக்கும் பிச்சை எடுக்காமல் உழைத்து வாழ வழி செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டன.

அரசு நாடளுமன்றங்களின் சட்டத்திலும் திட்டத்திலும் பிச்சைக்காரர்களுக்கென்று ஏதாவது வகுக்க வேண்டும்.

உழைக்கத் தெம்பு இருந்தும் பிச்சையெடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

மனநோயாளிக்கு எந்தக் காப்பகம் எங்கிருக்கிறதென்று எப்படித் தெரியும்…?

மருத்துவ மனைகளுக்கு தெருப்புழுதியில் மணல் அள்ளித் திண்ணும் பைத்தியக்காரர்கள் தங்களாக எப்படி போக முடியும்....?

அதிகாரத்தில் இருப்பவர்கள் பணத்தில் மிதப்பவர்கள் மனிதர்களில் இப்படி வாழ்வின் கடை நிலையில் இருப்பவர்களுக்கு உதவினால் நாளைய சமூகம் நலமாக இருக்கும்.









பர்மா பஜார்


சென்னை நகரின் கிழக்கு கடற்கரையில்... உலக பொருட்கள் அடங்கிய நூற்றுக் கணக்கான கடைகளின் தொகுப்புதான் பர்மா பஜார்.

சில்லரை வருமானமாகவும், மொத்த வருமானமாகவும் விற்பனை செய்யும் இந்தக் கடைகள் 3 க்கு 3 அடியாக மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறன.

பர்மா பஜார் அருகில் உயர்நீதிமன்றம், பூக்கடை, பீச் ஸ்டேஷன், குறளகம் போன்ற பிரபல இடங்கள் இருக்கின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாக்கபடுவதற்கு முன்பு, பாரிஸ்தான் சென்னையின்  பிரதான பேருந்து நிலையமாக  இருந்தது.

இந்த பஜாரில் கிடைக்காத பொருளே இருக்காது என்பதைச்
சென்னைவாசிகள் அறிந்திருப்பார்கள்.
    

1960 ஆம் ஆண்டு வாக்கில் பர்மாவிலிருந்து திரும்பிய தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவேண்டி அன்றைய அரசால் அவர்களுக்காக  ஒதுக்கபட்டதுதான் இன்றைய பர்மா பஜாரின் பகுதிகள். 

1966 ஆம் ஆண்டு வாக்கில் இங்கு தொழில் செய்பவர்களுக்காக, பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டு முதல் பர்மா பஜாரில் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பிறகு இதன் வளர்ச்சி எவரெஸ்ட் சிகரத்தைப் போலத்தான்...
மற்ற மாநிலத்தில் உள்ளவர்களையும் வாடிக்கையாளர் வெகுவாக ஈர்த்துள்ளது.

 
கடல் கடந்து வந்த மேலை நாடுகளின் பலவகையான மின்சாதனப் பொருட்கள் பர்மா பஜாரில் வந்து குவிந்து கிடக்கின்றன.

பாப்புலரான பெரும் நிறுவனங்களின் பொருட்கள் விலை உயர்வாக இந்தாலும், அதே மாதிரியில் பிற கம்பெனிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் பர்மா பஜாரில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

இதனால், நடுத்தர மக்களும், சிறுவர்களும் தங்களுக்குத்  தேவையான பொருட்களை வாஙகிச் செல்கிறார்கள்.

இங்கே சென்றால் நமக்கு தேவையான பொருள்களை ஒரே இடத்திலேயே வாங்கி விடலாம் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

துணி வகைகளாகட்டும் செல்போன்களாகட்டும் அழகு சாதன பொருளாகட்டும்...கம்ப்யூட்டர் முதல் ஹைஹீல்ஸ் வரை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான் அதற்கு காரணம்.

ஒரு காலத்தில் பர்மாவிலிருந்து திரும்பிய தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி என்றாலும் கூட இன்றளவில் இந்த பகுதியில் பர்மா தமிழர்கள் இருப்பது குறைவுதான்.

பொருளாதாரத்தை உயர்த்திகொள்ளும் நோக்கத்தில் பல கடைகள் இங்கு வாடகைக்குக் கொடுக்கப்படுவதும், பணத்தேவைக்காகவும் சரியாக நடத்த முடியாத பட்சத்தில், கடையை விற்றுவிடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

 
இங்கே பலர் தின கூளிக்காகவே வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் நெறுக்கமான உறவினர்களாக இருக்கிறார்கள்.

 
வயது முதிர்ந்தவர்கள், இங்கு பல ஆண்டுகளாகவே தொழில் செய்துவருவதாகக் கூறுகிறார்கள்.
 
பல வண்ணங்களில் விதவிதமான பொம்மைகள் ரோட்டோரத்தில் விற்பனைக்காக அடுக்கி வைக்கபட்டிருக்கிறார்கள்.

 
டிவிக்களும், கீ போர்ட் வகைகளும் , செல், வாக்மேன் மற்றும் ஐ பாட் போன்ற பொருட்களும் பல மாடல்களில் பர்மா பஜாரின் விற்பனையில் முதல் வரிசையில் வந்து நிற்கின்றன.


ஆண்களுக்கான பெல்ட் வகைகளும், பெண்களுக்கான லிப்ஸ்டிக் வகைகளும், மற்றும் கைக்கடிகாரங்கள் முக கண்ணாடிகள் என்று பணத்துக்கேற்ற பொருட்கள் பர்மாபஜாரில் ஏராளம் இருக்கின்றன.

கடைகளின் நடை பாதையில் நடந்து போனால் போதும், அந்தந்த கடைகளின் இடைத்தரகர்கள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டே இருப்பார்கள்.

வாங்கும் பொருள்களைப் பற்றி ஒரு பேச்சுக் கொடுத்தால் போதும்...
பொருளைக் காட்டி பேச ஆரம்பித்து விடுவார்கள்.

வாங்குபவர்கள் ஒரு கடையில் நின்று பேசினால் பக்கத்தில் நிற்கும் மற்ற கடைக்காரர்கள் விலகிக் கொள்வார்கள்.

பேரம் பேசுவதில் கெட்டிக்காரர்கள், இந்த பர்மா பஜாரில் கடை நடத்துபவர்கள்.

தங்களுக்கு மட்டும் புரியும் தொழில் மொழியில் ஒரு பொருளை எந்த விலைக்கு விற்கலாம் என பேசிக் கொள்கிறார்கள்.

வாங்குபவர்களின் எண்ணம் திசை மாறாமல் பார்த்துக் கொள்வதை தொழில் உத்தியாக வைத்திருக்கிறார்கள்.

சில நேரங்களில் அதிக நேரம் பேரம் பேசி, எந்தப் பொருளும் வாங்கவில்லையென்றால் பார்மா பஜாரின் கடைக்காரர்கள் வெறுப்படைந்து விடுகிறார்கள். இதைக் கடந்து, கடையை விட்டு விலகி வருவதே பெரும் சிரமாக இருக்கும்.

இங்கு எந்த நாட்டு திரைப்பட சீடிக்களும் எளிதில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.               

ஒரு படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில், பர்மா பஜார் சீடி வியாபாரிகளிடம் அதன் சிடி கிடைத்து விடும். அந்த அளவுக்கு படு வேகமானவர்கள் இவர்கள்.

பொதுவாக உலக சினிமாக்களை வாங்குவதற்கு, விசுவல் கம்யூனிகேசன் படிப்பவர்கள், துணை இயக்குனர்கள் போன்றவர்களின்  வாடிக்கையில் பர்மா பஜாரில் நல்ல வரேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஈரான், பிரெஞ்ச்,ஜப்பான், கொரியன், லத்தின், ஆகிய வெளிநாட்டுப் படங்கள் அதிக விற்பனையாகின்றன.

தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் எடுக்கப்படும் ஆவணப்படங்களும், குறும்படங்களும் அதிக லாபம் ஏற்படுத்துவதில்லை என்கிறார்கள்.

உலக சினிமாக்ளை தவிர தியாகராஜ பாகவேதர், சந்திரபாபு, டி.எம். சௌந்திர ராஜன், சுசிலா, ஹிந்தியில் முகம்மது ரஃபி, கிஷோர் குமார், லதா மங்கேஸ்கர் ஆகியோர் பழைய படப்பாடல்களையும் பொதுவாக வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இது தவிர சீசனுக்கு ஏற்றபடி ஐய்யப்பன் பாடல்கள் போன்ற பக்தி பாடல்களும் விற்பனையாகின்றன.

சிறுவர்களுக்கா கார்ட்டூன், விளையாட்டு சீடிகள் அதிகமாக பர்மா பஜாரில் வாங்கிச் செல்கிறார்கள்.

அடிக்கடி சீடிக்கடைகளுக்கு வரும் காவல் துறையின் கண்காணிப்பை பர்மா பஜாரில் கடை நடத்துபவர்கள் சமாளித்துக் கொள்கிறார்கள்.

விற்பனையாகும் திருட்டு வீசீடிகளால் பர்மா பஜார் மீது படத் தயாரிப்பளர்கள் எரிச்சலடைகிறார்கள்.

நெறுக்கமான சொந்தக்காரர்களாக இருந்தாலும் வியாபாரம் பார்க்கும் போட்டியில் பல குழப்பங்களோடும் சர்ச்சைகளோடும்  பர்மா பஜாரில் ஒவ்வொரு நாளும் கடந்து போகிறது.






Wednesday, 15 August 2012

முதல் தலைமுறை



அகதிகளுக்கும் அனாதைகளுக்கும் அதிகமான வித்தியாசம் இருப்பதில்லை.

இரண்டும் ஓரளவில் ஒன்றுதான்.

சூழல் எதுவாக இருந்தாலும் வலி என்பது ஒன்றுதான்.

தனிமையும் வெறுமையும் சேர்ந்து கொண்டு ஒரு மனிதனுக்கான  தேடலைத் தொடங்கி வைக்கிறது.

பிறவிக்கோளாறுகளில் உறவுகள் அறுந்து தொங்கவிடப்பட்ட மனிதர்களே அகதிகளாகவும் அனாதைகளாகவும் வந்து விடுகிறார்கள்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனிமைப்பட்டவர்கள் எழுதும் சாகசங்கள் தொடர்ந்து வரலாற்றின் பக்கங்களில் கவனமாக பதிவு செய்யப்படுகிறன.

ஒரு சமூதாயத்தை மாற்றிப்போட்டவர்கள், சாதாரண மனிதர்களிடமிருந்து விலகிக் கொண்டு தங்களுக்குத் தேவையான தனிமையை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

நிலக்கரி இறுகி இறுகி வைரமாவது போல, மனிதர்களின் உணர்வுகள் பதப்படுத்தபடுகிறன.

இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கையில் முதல் தலைமுறை மனிதர்கள் முரண்படும் போதெல்லாம், அங்கு ஒரு யுகப் புரட்சி நிகழும்.

முதல் தலைமுறை ....

இந்த வார்த்தையின் அர்த்தம் விளங்குவதற்குள் வாழ்க்கையில் பாதி முடிந்து விடுகிறது.

ஒரு சந்ததி இடைவெளியின் நெருக்கடியில் விழுந்து விழுந்து நடக்கிறது இந்த முதல் தலைமுறை. 

கரட்டுக் காடுகளிலும், பெயர்சொல்லவே கூச்சப்படும் கிராமங்களிலும் பிறந்துவிட்டதால்,  இந்த மாடனிஸத்தில் சேர்ந்து ஓட முடியாமல் தேங்கிவிடுகிறார்கள்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்பதற்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் சில தட்டுச் சிட்டுகள் தடம் மாறிச் சென்று விடுகிறன.

கனவுகளையும், ஆசைகளையும் வெளிப்படுத்த முடியாமல் போன இந்தக் கால ஓட்டத்தை, ஊடகங்கள் படம் போட்டு காட்டும் போதெல்லாம், சில நிமிடங்கள் மட்டும் அதற்காக இரக்கப்பட்டுக் கொள்கிறோம். 

மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களாக, ஏதோ ஒரு மூலையில், அடிதட்டு நிலையிலிருந்து தடைகளை உடைத்து சாதிக்கும் சாதனையாளர்களின் பெருமை சுய குறிப்புகளாக வரும்போது அதை வாங்கி ஆர்வமாகப் படிக்கிறோம்.

செருப்புக் கடைகள், ஹோட்டல்கள், கட்டட வேலை, என்று கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டே ஒரு குறிப்பிட்ட சமூகம் படித்து பட்டம் வாங்குகிறது.

அம்மணச் சிறுவர்களையும் - அழுக்குச் சிறுமிகளையும் எந்தச் சாலை ஓரத்திலும் நீங்கள் பார்க்க முடியும்.

தூக்கி எறியப்பட்ட சோளிகளைப் போல சாவடிகளில், சொல்லக் கூடாத வார்த்தைகளைத் உளறிக் கொண்டிருக்கும் லுங்கி இளைஞர்களை நீங்கள் பார்க்க முடியும்.

காலமாற்றத்துகேற்ப மாற முடியாமல், தான் பெற்ற பிள்ளைகளுக்கு உரிய வயதில் உரிய தேவையை நிறைவேற்ற தெரியாமல், பிள்ளைகளைக் கொள்ளும் பெற்றோர்கள் நம் நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள்.

படித்த படிப்புக்கும், தகுதிக்கும் எந்த இடத்தில் எந்த வாய்ப்பு இருக்கும் என்பது அனேக இளைஞர்களுக்கு இன்னும் சரிவர விளங்கவில்லை.

இதற்கெல்லாம் காரணம் சுறுங்கிப் போன மனநிலை. அதற்கு துணையாக இருக்கிறது, இந்தப் பழமைவாதச் சமூகம்.

இந்தியாவின் எலும்புக் கூடுகளான பட்டிக்காடுகளில் வாழும் மக்களிடம், சிந்தனையில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.

நொடிக்கும் நேரத்தில் முடித்து விடும் தகவல் தொடர்புகள் இருந்தும், இன்னும் ஏன் பரம்பரைக்கூலிகள் இருக்கிறார்கள்.

மருத்துவத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வரும்போதெல்லாம் புது புது நோய்களும் வருவது போல, தொழில் நுட்பம் வளர்ந்த போதெல்லாம் முதல் தலைமுறை மனிதர்கள் அதற்கு ஈடு கொடுக்க முடியாவில்லை.

தந்தைக்கும் மகனுக்கும் இருக்கின்ற உறவு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இருக்கின்ற உறவாக இருப்பதை உங்களால் உணரமுடியுமா....

அதை, பரம்பரை இடைவெளி அல்லது சந்தததி இடைவெளி என்று சொல்லலாம்.

தந்தை வாழ்ந்த காலத்தின் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையை பிள்ளைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெற்றோர்கள், தான் வாழ்ந்த அதே சூழலில் பிள்ளைகளையும் நிற்க வைத்து கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பிள்ளைகளைத் தண்டித்து விடுகிறார்கள். 

இதைச் சொல்லித் திருத்த முடியாது.
முதல் தலைமுறைகள் தெறித்து வந்து விழுந்த தனக்கான இருப்பிலைத் தக்கவைப்பதற்குள் வாழ்க்கையில் பாதி முடிந்து விடுகிறது....    


எது சுதந்திரம்




உலகம் மாறிவிட்டது.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சுதந்திரம் இருக்கிறது...

ஆனால் அதிகாரம் என்பது, யாருக்கு எவ்வளவு சுதந்திரம் தர வேண்டும் என்பதை அளந்து வைத்திருக்கிறது...

உலகத்தில் எது ஒன்று நடக்க வேண்டுமென்றாலும் அது அதிகாரத்தின் வழி தான் நடக்கிறது...

ஒரு அதிகாரத்துக்கு எந்த அளவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு தகுந்த செயல் தான் நடக்கும்...

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை கொடுக்கிறார்கள்.

கேட்ட விலையைக் கொடுக்க முடியவில்லையென்றால், பின் தள்ளி விடுகிறார்கள்...

பின்தள்ளப் பட்டவர்கள் அப்படியே இருந்து விட்டால் அவர்கள் காலாவதியாகி விடுகிறார்கள்...

நாமெல்லாம் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்...
உண்மையில் சுதந்திரம் கொண்டாடுவதற்கு மட்டும் தானா...?

வாழ்த்துக்களே ஒருவனை வாழ வைத்து விடுவதில்லை...

அவன் வாழ்ந்து காட்டினால் தான் உலகம் எழுந்து நின்று அவனுக்காக் கைதட்டும்...

விழுந்து கிடந்தால் வேடிக்கைப் பார்க்கக் கூட யாருக்கும்
நேரமிருக்காது...

இந்த மின்னணு உலகத்தில் தனக்கான இடம் என்னவென்று தேர்ந்தெடுப்பதில் நாம் தெளிய வேண்டும்...

அதற்கான சுதந்திரத்தை நமக்கு நாமே வழங்க வேண்டும்...
நாளுக்கு நாள் கட்டிச் சுமந்த திறமைக்கு, வாகை சூடும் போது உலகத்தில் நமக்கான சுதந்திரம் நிச்சயம் கிடைக்கும்...

வையத் தலைமை எனக்குத் தா என்று கேட்டான் மகாகவி பாரதீ.அதற்கு தகுதியாகவும் இருந்தான்...
இந்த சுதந்திர தினத்தில், சுதந்திரத்துக்கு நாம் தகுதியானவர்தானா  என்று ஆளுக்கொருமுறை கேட்டுக்கொள்ளலாம்...

எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்...




















தாய்ப்பால்



தாய்ப்பால் என்பது, பாலூட்டிகள் உயிர் நனைக்கும்
வெள்ளை பந்தம்.

செழித்து வளர குழந்தைக்குப் ஸ்பரிஸித்து ஊட்டும் அடி உரம்.
பிள்ளை, தாய்பால் குடிக்கும் சப்தம் பெற்றவளுக்கு இனம் புரிந்த சந்தோஷம்.

தாய்பால் பசிக்கு மட்டும் கொடுப்பதல்ல.
தாய்ப்பால் மட்டுமே சிறந்த வயித்தியம்.

தானாக எழுந்து நடந்து, உணவு செரிக்கும் வரை,
தாயின் கதகதப்பும் அரவணைப்பும் சேர்ந்துதான் தாய்ப்பால்.

உயிர்களில் மனிதர்களைத் தவிர எல்லா உயிரினங்களும், தானாக தான் தாயிடம் சென்று பால் குடிக்கின்றன.மனிதனுக்கு மட்டும் அடுத்தவன் உதவி தேவைப்படுகிறது.

மாடல் அழகிகளுக்கு மத்தியில், தாய்ப்பாலுக்கும் நல்ல விலை கிடைக்கிறது.

பாலூட்டுவதைச் சலிப்பாக நினைத்து, அதற்கு நேரமில்லை என்று ஓடிக் கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் எதைத் தேடுகிறார்கள் என்பது விளங்கவில்ல.

வேலை சம்பளம் என்று ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் பிள்ளைகளுக்கு சீக்கீரமே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள். வேலைக்காரப் பெண்களிடமும், வாடகைத் தாய்களிடமும் பெற்ற பிள்ளைகளை ஒப்படைத்து விடுகிறார்கள்...

வசதி குறைந்த பெண்களை விட, சொகுசான வசதி வாய்ப்புடைய  தாய்களே பிள்ளைகளுக்குப் புட்டிப் பால் கொடுக்கிறார்கள்.

தாய்ப்பால் கொடுப்பதால் தங்கள் அழகு கெட்டு விடுகிறார்கள்.
தாய்ப்பால் ஊட்டுதில் குழந்தை மட்டும் பயனடைவதில்லை. தாயும் சேர்ந்து தான் பயனடைகிறாள்.

தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு, மார்பக புற்று நோய் வருவாத மருத்துவர்கள் கணித்திருக்கிறார்கள்.  

அதுமட்டும் அல்ல தாய்ப்பால் குடிக்கும் குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால் பிற்காலத்தில் அந்தக் குழந்தைக்கும் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்கலாம். குழந்தையின் இரத்த சக்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் தாய்ப்பால் ஆரஞ்சும் -  மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும். இதனை நீர்ம கங்தங்கம் என்று அழைக்கின்றனர். 

இதில் ஊட்டச் சத்துக்கள் பெருமளவில் இருக்கின்றன. இதனால் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்திகள் அதிகம் கிடைக்கின்றன. 

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகிவிடும். இதனால், குழந்தைக்கு ஏற்பபடும் ஆஸ்துமா, ஒவ்வாமை, டைப்பாய்டு, உடல் பருமன் இழப்பு போன்ற நோய்கள் எதும் வராமல் தடுக்கப்படுகிறது.

குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பதற்காக அந்தப் பெண் தினமும் 600 கலோரியை கூடுதலாக இழக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவுப் பொருள்கள், நீர் போன்றவை சரியான விகித்ததில் அந்த தாய் எடுத்து வந்தால் தான், அவள் தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால்,அவளது உடல் திறன் பாதிக்கப்படு்ம். தாய்ப்பால் சுரப்பு குறைந்து விடும். 

தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை.
சில பெண்களுக்கு மார்பகம் பெரிதாக இருக்கும். ஆனால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறிதாக இருக்கும். அதே நேரம் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டும் விதத்தையும், பொறுத்து தான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களைத் தூண்டிவிடும்.

சில தாய்மார்புகளுக்கு சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாகக் குறைந்து விடும். இதற்கு காரணம் அவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாததும், ஹார்மோன் சுரப்புக் குறைபாடும் தான்.

பல இளந்தாய்கள் அலுவலகத்தில் பாலூட்ட சரியான இடம் இல்லாததால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.

மேல் நாட்டில் தாய்ப்பால் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்த தானத்தைப் போல தாய்ப்பால் தானமும், உயிர்காக்கும் செயலாகக் கருதப்படுகிறது.

சேமிக்கப்பட்ட தாய்ப்பால், அநாதைக் குழந்தைகளுக்கும், எயிட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் வழங்குகிறார்கள்.
  
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வோரு ஆண்டும் தாய்ப்பால் வாரமாக ஆகஸ்ட் முதல் வாரம்  கொண்டாடப்படுகிறது.

இவ்வாறாக, இன்றைய பெண்கள், தங்களும் - தங்கள் பிள்ளைகளும் நலமுடன் வாழ  தாய்ப்பாலின் முக்கத்துவத்தை உணர வேண்டும்.