Wednesday, 14 November 2012

107 வயதில் பகரீத் கொண்டாடிய மூதாட்டி..



இஸ்லாமியர்களின் புனிதத் திருநாளான பக்ரீத் பண்டிகையை 107 ஆம் வயதில் ஜெஹராவி என்ற மூதாட்டி கொண்டாடியிறுக்கிறார்.

திருப்பூர் மாவட்டத்தில், மூன்று தலைமுறைக்கு மேல் கடந்து வந்த ஜெஹராவி என்ற இஸ்லாமிய மூதாட்டிக்கு இப்போது வயது 107 ஆகிறது.

1905 ஆம் ஆண்டுகளில் பிறந்த, இந்த முதுமகளுக்கு 1 மகனும் 3 மகள்களும்,  39 பேரன் பேத்திகளும், 71 கொள்ளுப்பேரன் பேத்திகளும் உட்பட மனைவிமார்களோடு அடங்கிய 189 பேர்கள் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைப் பூர்வீகமாக் கொண்டவர் ஆர். சையத் அப்துல் லத்தீப்.

1950 களில்... தன் மனைவி ஜெஹாவியுடன் அப்துல் லத்தீப் திருப்பூரில் பனியன் நூல் பிரிக்கும் தொழிலைச் செய்து தன் பிள்ளைகளை வளர்த்து வந்தார்.

இப்போது அப்துல் லத்தீப் இறந்து 40 ஆண்டுகள் கடந்த நிலையில், தான் பெற்ற விழுதுகளின் தயவில் 107 வயதிலும் பூரண நலமுடன் ஜெஹராவி வாழ்ந்து வருகிறார்.

பனியன் தொழிலையே நம்பி பணியாற்றி வரும் ஜெஹராவி பாட்டியின் வாரிசுகள், திருப்பூரில் வாடகை வீடுகளில் தான் தனித் தனியாக்க் குடித்தனம் நடத்தினார்கள்.

உறவினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வசிக்க வேண்டுமென்று திருப்பூரில் உள்ள நல்லூர் பகுதியில், 2005 ஆம் ஆண்டு 1 ஏக்கர் நிலம் வாங்கி வீடுகள் கட்டி ஒரு கூட்டுப் பறவைகளாக வசித்து வருகின்றனர்.

இந்த வாரிகள் அனைவரும் தங்கள் பக்ரீத் பண்டிகையை மூதாட்டின் கௌரவ விழாவாகவும் பெரும் குடும்ப விழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பத்திரிகை அடித்து உறவினர்களை அழைத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் தடபுடலாக மூதாட்டி ஜெஹராவியுடன் பக்ரீத்தை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.

விழாவில் பங்கேற்ற அனைவரும், பாட்டி ஜெஹராவியிடம் ஆசி பெற்று மகிழ்ந்தனர்.

மூதாட்டியின் 1 மகனும் 3 மகள்களும் உயிருடன் உள்ள நிலையில் மூதாட்டி ஜெஹராவி, உறவுகளின் அரவணைப்பில் நலமுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

மூதாட்டி ஜெஹராவி 100 வருடங்களுக்கு மேல் நலமுடன் இருக்கக் காரணம் என்னவாக இருக்கும்...?

உணவு முறையில் சீரான கட்டுப்பாடும், இறை நம்பிக்கையும் – இடை விடாத தொழுகையும் நற்பண்புகளும் சேர்ந்தால் மனித ஆயுள் நீடிக்கும் என்பதை மூதாட்டி ஜெஹராவியின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.












பிரதிபா காவேரி



அதோ நீங்கள் பார்க்கும் கப்பல் எவ்வளவு அழகாக இருக்கிறது ….!
தினம் தினம் சுற்றலா போல சென்னை வாசிகள்  வேடிக்கை பார்க்க குவிந்து நிற்பதைப் பாருங்ககள் .

கண்களுக்கு அருகில் இவ்வளவு பெரிய கப்பலை பார்பது பாக்கியம் தான் .
ஆனால், சென்ற வாரம் கரை ஒதுங்கிய இந்தக் கப்பலில் இருந்து 6 நபர்கள் கடல் குடித்துச் செத்தார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ….

நிலம் புயலில் நிற்க முடியாமல் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், கடந்த ஆகஸ்ட் 31 நாள் சுழல் காற்றில் சுழற்றியடிக்கப்பட்டன .

2 லட்சம் ஹெக்டர் பரப்பளவுக்கு மேல் நெற்பயிற்கள் நிலம் புயலால் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன . பணப்பயிற்கள் பாதிக்கப்பட்டன .

எண்ணிக்கையில் அடங்காத ஏராளமான வீடுகள் அடியோடும், பகுதி பகுதியாகவும் ஒடிந்து விழுந்தன .ஒரு சில மக்களும் இப்புயல் மழையில் இறந்திருக்கிறார்கள் .

தண்ணீர் தேங்கிய தார்சாலைகள் சீரழிந்து, சாலையில் ஒதுங்கி வளர்ந்த மரங்கள் முறிந்து விழுந்தைப் பத்திரிகைகளும், தொகைக்காட்சிகளும் படம் பிடித்துக் காட்டின.

ஒரு வழியாக ,நிலம் புயல்  மாமல்லபுரத்தைக் கடந்து விட்டது என்று, பெருமூச்சு விட்டபோது, புயலால் அடித்து வரப்பட்ட பிரதிபா காவேரி என்ற கப்பல், சென்னை பட்டின பாக்கத்தில் தரை தட்டி நின்றது.

அந்தக் கப்பலில் இருந்து தப்ப முயன்ற போது,31 பேரில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தக் கப்பல் எங்கிருந்து வந்தது …? எதற்காக வந்தது ….? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடினால் பல மர்மங்களை அது உணர்த்துகிறது .

31 வயதுடைய இந்தக் கப்பல் பிரதிபா காவேரி என்ற பெயர் கொண்டாச் சொல்கிறார்கள் .

கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி சென்னைத் துறைமுகத்தை விட்டு கிளம்பிய, இந்தக்  கப்பல் அக்டோபர் 8 தேதியன்று மீண்டும் சென்னைத் துறைமுகம் நோக்கி வந்ததற்கான காரணம் என்ன ….?

31 வருடங்களு்ககுப் பிறகு , அக்டோபர் 2 முதல் கடலை எதிர் கொள்ளும் ஆற்றலை இக்கப்பல் இழந்து விட்டாதால், சென்னத்  துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதென்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் தெரிய வந்துள்ளது .

கிட்டத்தட்ட 1 மாத காலமாக துறைமுகத்துக்கு வெளியே இந்தக் கப்பல் ஏன் நிறுத்தப்பட்டது …..?

இதைக் கண்காணிக்கும் துறைமுக அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் …?

இந்தக் கப்பலில் வேலை செய்த  ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை என்பதும் , கப்பலை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் இல்லையென்பதும் , இந்த பரிதாப விபத்திலிருந்து தெரியவந்துள்ளது .

கப்பலில்  சரியாக உணவு கூட இல்லாமல் , ஊழியர்கள் ஒரு மாத காலம் கப்பில்  தங்கியிருந்ததற்குக் காரணம் என்னவாக இருக்கும் … ?
சரக்கை இறக்கி விட்டு மும்பை சென்ற கப்பல் ஏன் திரும்பி வர வேண்டும் ….?

திரும்பி வந்த கப்பலில் இன்னும் எப்படி எண்ணெய் இருக்கிறது…?

கப்பலை இயக்குவதற்கான டீசல் இல்லை என்ற நிலை ஏன் ஏற்பட்டது…?

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை  இயக்ககுனர் கவுதம் சட்டர்ஜி   
தலைமையிலான அதிகாரிகள் , 6 பேர் கடலில் விழுந்து செத்துப் போனதற்குப் பிறகு , இந்தக் கேளவிகளுக்கெல்லாம் விசாரணை நடத்தி விடை தேடுகிறார்கள் .

தரை தட்டிய கப்பலிலிருந்து உயிர் தப்பிய கேப்டன் உட்பட அனைவரும் நடந்த சம்பவங்கள் பற்றித் தெரிவித்து வருகின்றனர் . சென்னை துறைமுக அதிகாரிகள் – கடலோர காவல் படையினர் என கப்பல் நிர்வாகத்தினர் மற்றும் கப்பல் ஏஜன்ட்கள் முதல் , அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் .

இந்த பிரதிபா காவேரி கப்பலைக் கடலுக்குள் இழுத்துச் செல்ல, சிங்கப்பூர் மற்றும் மும்பையிலிருந்து கப்பல் தொழில் நுட்பப் பிரிவிலுள்ள அதிகாரிகள் , ஆரம்பகட்ட மிட்புப் பணிகளை இரண்டு மூன்று நாட்களாக செய்து வருகின்றனர்.

கடற்கரைக்கும், கப்பலுக்குமுள்ள தூரம் எவ்வளவு என்றும் , கடலையின் வேகம் எவ்வளவு என்றும் ,ஆய்வு செய்து வருகின்றர் .

தற்போது தரை தட்டி நிற்கும் கப்பலை நடுக்கடலுக்கு இழுத்துச் செல்ல , ஆந்திர மாநிலம் – காக்கி நாடவிலிருந்து மாளவிகா என்ற இழுவைக் கப்பல் சென்னைக்கு வந்துள்ளது .இந்த ஒரு கப்பல் மட்டும் போதாது என்பதால் , மும்பையிலுருந்து மற்றுமொரு இழுவை கப்பல் வர இருக்கும்  இந்நிலையில் ,

கப்பலை இழுத்துச் செல்ல உயர் நீதி மன்றம் இடைக் காலத் தடை உத்தரவு விதித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ,வானூரைச் சேர்ந்த சங்கர நாராயணன் தாக்கல் செய்த மனுவில் , அவர் சகோதரர் ஆனந்த் என்பவர் ,பிரதிபா காவேரி கப்பலில் பொரியாளராகப் பணியாற்றினார் என்பது தெரிகிறது .

பலியான 6 பேர்களில் ஒருவரான ஆனந்த் , இறப்பதற்கு முன்பு கப்பல் நிறுவனத்துக்கும் கடல் சார் வணிகத்துறை அதிகாரிக்கும் பல முறை மின் அஞ்சல் அனுப்பியுள்ளார் .

ஆனால் இதை கடல்சார் வணிக அதிகாரிகள் ஏற்று கொள்ளமால் இருந்திருக்கிறார்கள் .

ஆனந்தின் வேலைக்கான ஒப்பந்தக் கெடு செப் 17 தேதியில் முடிந்த நிலையில் , சம்பளம் ஏதும் தராமலும் , வெளியே அனுப்பாலும் கப்பல் நிறுவனம் அலட்சியம் காட்டியிறுக்கிறது .

அடிப்படை வசதிகள் கூட இலலாமல் ஒருமாத காலம் இருந்தவர்கள் ,தீடீரென்று ஏற்பட்ட நிலம் புயலால் தப்பிக்க முயன்று அதில் 6 பேர் இறந்திருக்கிறார்கள் .

இதில் இறந்த 6 பேரில் ஒருவரான ஆனந்த்க்கு  25 லட்சம் இடைக்கால இழப்பீடாக பிரதிபா கப்பல் நிறுவனம் வழங்க வேண்டுமென்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

புயல் சம்பவத்தின் போது , பிரதிபா காவேரி கப்பலின் கேப்டன் , சென்னைத் துறைமுக கப்பல் படைக்கு வயர்லஸ் மூலம் பாதுகாப்பு கேட்டிருக்கிறார் பதிவாகிய ஆதாரங்களின் மூலம் தெரிவந்துள்ளது .

ஆனால் , புயல் விபத்தின் போது ,சென்னை கப்பல் படை இதற்கான பாதுகாப்பு முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை என்று பிரதிபா கப்பலின்  கேட்பன் , விசாரணையின் போது கூறியுள்ளார் .

தமிழகத்துக்கே தலைமையிடமாக இருக்கும் சென்னை கப்பல் படையால் செய்ய முடியாத காரியத்தைக் கரையோர மீனவர்கள் செய்திருக்கிறார்கள் .
உயிரை பணையம் வைத்து ராஸஷ அலைகளில் 31 பேரை நவீன வசதிகள் எதுவும் இல்லாமல் காப்பாற்றியுள்ளானர் .

புயலில் இறந்து போன குடும்பங்களுக்குத் தமிழக அரசு என்ன செய்யும் …?
விபத்து ஏற்பட்டதற்குத்  துணைக்கு நின்ற , காரண கர்த்தாக்களை என்ன செய்யும் ….?

விபத்தில் களம் இறங்கிக் காப்பாற்றிய மீனவர்களுக்கு எந்த விதத்தில் மரியாதை செய்யும் …?
வழக்குகள் தொடரும் ….
 




டாஸ்மாக்



டாஸ்மாக் கடைகளில் குப்புற விழுந்து கிடக்கும் குடிமகன்கள்  நினைத்ததை வாங்கிக் குடிக்க முடிவில்லையென ஏங்குக்கிறார்கள் .

பொழுது சாய்ந்ததும் ஊரு ஊருக்கு ஆரம்பிக்கப்பட்ட அரசு பார்களுக்குச் சென்று , தினக்கூலி என்றாலும் , பெரும்பாலும் ,முதல் செலவு செய்வது ஒரு விஸ்கிக்கோ அல்லது பிராந்திக்கோ தான் .

கேட்ட சரக்கு கிடைக்காமல் டூப்பிலிகட் சரக்கை எடுத்து நீட்டும் போது …. “இன்று குடிக்க வேண்டாம் கச்சேரியை நாளை வைத்துக் கொள்ளலாம்” என்று திரும்பிப் போக முடியுமா என்ன …!

டூப்பிலிகட் சரக்காக இருந்தாலும் , கிடைத்தத சரக்கை வாங்கிக் கொண்டு போகிற பெருந்தன்மையாவர்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள் .

வேலை நிறுத்தம் மற்றும் டாஸ்மார்க் விடுமுறை நாட்களில் … கள்ளத்தனமாக விற்கும் பாட்டில்களுக்கு 
நல்ல வருமானம் கிடைக்கிறது .

டாஸ்மார்க் கடைகளில் விற்கும் சிகரட்டிலிருந்து , வறுத்த கரிமசால் தொடங்கி தண்ணீர் பாக்கட் வரைக்கும் சாதாரண கடையில் விற்கும் விலையை விட நான்கைந்து மடங்கு அதிகமாக இருக்கிறது .

இந்தக் குடிகார தேசத்தில் … டாஸ்மார்க் கடைகள் ஏழம் எடுக்க வாய்த்தால் பொருளாதாரத்தில் பெரும் புள்ளியாகி விடுகிறார்கள் .

மதுக் கடைகளின் வருமானம் இந்த மாதம் எத்தனை கோடி என்று, அரசு எண்ணிக் கொண்டு இருக்கும் போது , குடிகாரப் புருஷனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் , ஒரு பொன்னமாளோ – அல்லது முனியம்மாளோ , தெரு மொக்கில் நின்று தலைதலையாய் அடித்துக் கொள்வதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும் .

விடிய விடிய தூங்க முடியாமல் குடிகார அப்பனை தாமறிக்க பிள்ளைகள் புலம்பவதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பிருக்கும் .

ஒரு டம்ளர் உள்ளே போனதும் இலவசமாகத் தத்துவம் பேசும் இளவட்டங்களைப் பார்ப்பதில் வியப்பில்லை .
உலகம் முழுக்க குடிகாரர்கள் இருக்கிறார்கள் . ஆனால் கட்டிங் சரக்கை அடித்து விட்டு கட்டிப் பிடித்து உருளும் வித்தகர்கள் நம்மவர்கள் மட்டும் தான் .

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகிறார்கள் என்று மது விலக்கு கோரி , எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் , உண்ணா விரதங்களையும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

போதையில் இல்லாமல் தெளிவில் இருக்கும் போது, ஒரு தவறை செய்யலாமா செய்யக் கூடதா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த நாள் ஓடி விடும் .

ஆனால் , போதையின் உச்சத்தில் இருக்கும் போது , எடுக்கும் முடிவுகள் வேதனையாக இருக்கின்றது .
மது குடித்து விட்டு வண்டி ஓட்டினால் , பிடித்த இடத்திலே ஆயிரக்கணக்கில் அபராதம் போடும் பிரமாதமான சட்டம் ஒழுங்கை கொண்டது நம் அரசியல் சாசனம் .

மதுக்கடைகளின் வாசலில், அத்தனை வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றதே ... அவர்கெல்லாம் குடித்து விட்டு வாகனங்களைத் தள்ளிக் கொண்டா போவார்கள் ... ?போதையில் தள்ளாடிக் கொண்டு தானே போவார்கள் .

அரசு மதுக் கடைகளில் குடித்த மிச்சத்தை அங்கே வாத்தியெடுத்துக் கொள்ளவும் வசதியாக பார்கள் இருக்கும் போது , வீட்டில் சென்று குடிக்க முடியாதவர்கள் பார்களில்  குடித்து விட்டு வண்டியில் போகாமல் பறந்தா… போக முடியும் .

சமீப காலமாகக் குடிப்பழக்கத்திலும் மற்ற போதை பழக்கத்திலும் அடிமையானவர்களுக்கு மாறுவாழ்வு மையங்களில் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்  . அங்கு குழந்தைகள் போல குடிகார்ரகள் சென்று வருகிறார்கள் .

இந்த நிலையில் கேட்ட சரக்கு கிடைக்க வில்லையென்றும் தாறுமாறாக நிலைமைக்கு தக்கபடி விலை ஏறுகிறதென்றும் குடிகாரர்கள் வருத்தப்படுகிறார்கள் .

குடும்ப நலனுக்காகவும் , ஆதரவற்றோருக்காகவும் ஏதோ ஏதேதோ திட்டம் வகுக்கும் அரசு ஒரு சமூதாயமே போதையில் தள்ளாடுவதை உடனடியாக தடுக்க முடியா விட்டாலும் …. படிப்படியாகத்  
தடுக்கலாமே ….

சத்தியம் செய்திகளுக்காக விஜய் முத்துசாமியுடன் சந்திரபால் .