களைத்துப் போட்ட சோழிகளைப்
போல ,ஒருசமூதாயத்தின் முதல் தலைமுறை இளைஞர்கள், தங்கள் சொந்தக் காலில்
நிற்பதற்குள் , மிகச் சாதாரணமாக 30 வருடங்கள் கடந்தோடிவிடுகின்றன .
மாதச் சம்பளத்தில்
கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே வேலை செய்யும் இளைஞர்கள் தங்கள், அடிப்படைத்
தேவைகளைக் கூட சம்பளத் தேதிக்கு தான் ஒத்தி வைக்க வேண்டியிருக்கிறது.
இன்னும் எத்தனை காலம் இந்த
பேஜ்சுலர் லைப் என்று அலுத்து கொண்டே எங்கோ ஓரிடத்தில் பெற்றவர்களை விட்டு
பிரிந்து வேலை செய்யும் இளைஞர் நம் நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள் .
நண்பர்களின் பேண்ட்
,சர்ட்களை மாற்றி மாற்றி உடுத்திக் கொண்டும் ,வாரம் ஒரு நாள் டாஸ்மாக்கில் சென்று
கொண்டும் மாதக் கடைசியில் , ஒரு நேர சாப்பட்டோடு உறங்கும் இளைஞர்கள், சென்னை
கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரங்களில் நிச்சயம் இருப்பார்கள் .
இன்னும் 5 வருடங்களில்
செட்டிலாக வேண்டும் – 2 வருடங்களில் செட்டிலாக வேண்டும் – என்று கனவுகளையும்,
ஆசைகளையும் தேக்கி வைத்து, விரட்டியடிக்கும் வாழ்க்கையின் கடைசி வரைக்கும் செல்ல
துணியும் ஒவ்வொரு இளைஞர்களும் பல திரைக்கதைகள் இருக்கும்.
உலக ரெஸ்டாரன்களை விட
சுவையான சாப்பாடு எது என்றால் , அது அம்மா கையில் சாப்பிடுவது தான் , என்று
சொல்லும் இளைஞர்கள் கையேந்து பவன்களில் சலித்துக் கொண்டே சாப்பிட வேண்டிருக்கிறது
.
வீட்டில் உள்ள அக்காக்கள்–அல்லது
தங்கைகளைக் கரை சேர்க்கும் வரைக்கும் முதல்தலைமுறையில் பிறந்த
வாலிபர்கள்,வயிற்றையும் வாயையும் மட்டுமல்ல ஆண்மையும் கட்டிப்
போராடவேண்டியிருக்கிறது.
30 வயதைக் கடந்தும்,
திருமணம் ஆகாத இளைஞர்களை நடைமுறை வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக பார்க்க முடியும் .
உடம்பின் ஒவ்வொரு அணுவிலும்
கலந்த பாலியல் தேவையை அவர்கள் எப்படி நிறைவேற்றுவார்கள் ....?
மனித உளவியலின்
அடிப்படையில் …. ஏற்படுகின்ற பிரச்னைகளுக்கு பெரும்பாலும் பாலியலே மையக் காரணமாக
இருப்பதாகச் சொல்வார்கள் .
ஒரு தனிமனிதன் தடுமாறும்
போது , அவனைச் சுற்றிய பின்னிக்கிடக்கும் சமூகமும் தடம் மாறும் என்பதே எதார்த்தம்
.
குடும்பத்தில் முதல் ஆளாக
படித்து வெளியேறும் முதல் தலைமுறை இளைஞன் , தன் வாழ்க்கையின் பெருவெளியில்
நடக்கும் போது எதிர் கொள்ளும் பிரச்னையில் … தன்னுடைய முந்தைய தலைமுறைக்கும் , தன்
தலைமுறைக்கும் , இனிவரும் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து மூன்று தலைமுறைக்கும்
தானே போராட வேண்டியிருக்கிறது .
வாங்கிய சம்பளம் வாடகைக்கே
சரியாக இருக்கும் போது , நிறைவேறாத ஆசைகளோடும் , தீராத ஏக்கங்களோடும் - இந்த
பேஜ்சுலர்கள் உலகத்தை வெறித்துக் கொண்டே வேடிக்கை பார்க்கிறார்கள் .
மொழி – கலாச்சாரம் –
பொருளாதாரம் என்று ,சமூகம் பின்னிய வலைகளில் சிக்கிக் கொண்டே நடுத்தர இளைஞர்கள்
நிற்காமல் நீந்த வேண்டியுள்ளது .
வெளிநாடுகளிலோ அல்லது
வெளியூர்களிலோ 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில்,
வேலையென்ற பெயரில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களை நீங்கள் பார்த்திருக்கூடும் .
ஒரு நேர சாப்பாட்டுக்குக்
கூட வழியில்லாமல் நம்பிக்கையும் - தைரியத்தையும் பலமாக வைத்துக்கொண்டு , விழுந்து
விழுந்து எழுந்த முதல் தலை முறை மனிதர்கள் ஜாம்பவான்களாக , பேராடாக , கலை உலக
நாயகர்களாக ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் .
வெள்ளத்தில் நீச்சல்
பழகியவர்கள் பள்ளத்தைக் கண்டு நீந்தாமலா நின்று விடுவார்கள்.
இளைஞர்களே நிராகரிக்கப்பட்ட
வாழ்க்கையைச் சாதகமாக்குங்கள் …..!
இளைஞர்களே நிராகரிக்கப்பட்ட வாழ்க்கையைச் சாதகமாக்குங்கள்
– சந்திரபால் .
புதிய இயக்குநர்களுக்கு ,
அவர்கள் எடுக்கும் குறும்படங்கள் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றன .
இரண்டரை
மணிநேரத் திரைப்படத்திற்கு , ஒரு முன்னோட்டமாகவே வளர்ந்து வரும் இயக்குநர்கள் ,
குறும்படங்களை இயக்குகிறார்கள் .
திரைப்பட உலகில் இயக்குநராக
வலம் வர துடிக்கும் இளைய தலைமுறைகள் தாங்களாகவே முயன்று அத்தனை செலவுகளையும்
சமாளிகத்துக் கொண்டு, 10 நிமிடத்திலிருந்து 15 நிமிடங்கள் வரை குறும்படங்களை
எடுக்கிறார்கள் .அதனால் குறும்படத்தின் திரைக்கதையில், கதை - மையம் – சூழல் என்று
, எல்லாம் ‘பட்ஜெட்டுக்கு’ ஏற்ற வகையில் வடிவமைக்க வேண்டியது
அவசியமானதாக இருக்கிறது .
ஒரே ஒரு மையத்தை வைத்துக்
கொண்டு , தொடக்கம் – முடிவு –உச்சம் என்று குறும்படங்கள் அழுத்தமான பதிவுகளோடு
செய்தி சொல்கின்றன. திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போதே , பாடத்திட்ட
ஆய்விற்காக மாணவர்கள் குறும்படங்களை எடுத்துக்காட்டுகிறார்கள் . அதில் வியக்கதக்க
பரிசோதனை முயற்சிகளில் இறங்குவது , ஒரு பக்கம் இருந்தாலும் , விளையாட்டுத் தனமாக
சாதாரணக் காமிராக்களை வைத்துக் கொண்டு , கேலிக்கூத்தாகவும் குறும்படங்கள் என்ற
பேரில் மாணவர்கள் எடுக்கிறார்கள் .
100 குறும்படங்களில் 10
லிருந்து 15 குறும்படங்களே வெற்றி பெறுகின்றன .
இதிலிருந்தே , திறமையான
இயக்குநர்களை யாரென எளிதில் தெரிய வருகிறது . குறும்படங்களை ஊக்கப்படுத்துவதற்காக
தமிழ் நாட்டில் இயங்கி வரும் பயிற்சிப் பட்டரைகளில் , நிகழ் மற்றும் நிழல் ,
காட்சிப்பிழை போன்ற திரைப்படம் சம்பந்தமான பத்திரிகைகள் உலக சினிமாக்களைப்
பற்றியும் குறும்படப் போட்டிகளைப் பற்றியும் விவாதித்து வருகின்றன . தொடர்ந்து
மாதத்தில் ஒரு முறையோ , அல்லது இருமுறையோ நாடகம் மற்றும் சினிமா குறித்த திரை
மேதைகளை அழைத்து விவாதங்கள் நடத்தி வருகிறார்கள் .
“நாளைய இயக்குநர்” என்ற தலைப்பில் கலைஞர் தொலைக்காட்சி
நடத்தி வருகின்ற குறும்படப் போட்டி , வாரம் ஒருமுறை நல்ல வரவேற்பைப் பெற்று
வருகிறது . இம்மாதிரியான வாய்ப்புகளின் மூலம் திறமையான - வளரும் இயக்குநர்கள்
வெகுஜன உலகில் தங்களுக்கான இடத்தை தேர்தெடுத்துக் கொள்கிறார்கள் . மேலும் ,
கல்லூரி மற்றும் ஊடகவியல் வட்டாரங்களால் நடத்தப்படும் கலை விழாப் போட்டிகளில் ரூ .
250 வரை முன்பதிவாகச் செலுத்திக் கலந்து கொள்கிறார்கள் .
சிறந்த
குறும்படங்களுக்குப் பிரமாதமான விருதுகளைக் கொடுத்து குறும்பட இயக்குநர்களைக்
கௌவரப்படுத்துகிறார்கள் .
வளரும் இயக்குநர்கள் ,
தங்கள் முதல் இரண்டு மூன்று படங்களை வெற்றிப்படங்களாகக் கொடுத்து விட்டு அதன்
பிறகு வரும் படங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறார்கள் . அதற்குக் காரணம் பல நாள்
உழைத்து முழு திறமையும் போட்டு எடுத்த தொடக்க கால படங்களைப் போல , வளரந்த பிறகு
எடுத்த திரைப்படங்களை அமைந்து விடுவதில்லை .
பசியில் இருக்கும்
பார்வையாளன் , கிடைத்ததைச் சாப்பிட நினைக்கும் தருணங்ரகளில் சுவையற்ற சில
படங்களும் வெற்றிப்படங்களாகப் பார்க்கப்படுகின்றன .
இந்தக் குறும்படங்களின்
மூலம் திரை உலகில் அடியெடுத்து வைக்கும் இயக்குநர்களுக்கு நல்ல எதிர்காலம்
இருக்கின்றது . மேலும் "எதார்த்த மீறல்கள்" கொண்ட படங்கள் தோலிவியைத்
தழுவி நிற்கின்றன .
வெறும் நடப்பிலை மட்டுமே
மையப்படுத்தி இயக்கப்படும் படங்களும் , முழு நேரப் படங்களாக
எடுப்பட்டுத் தோல்வியடைகின்றன .
மேற்கத்திய மரபைத் தழுவி
முழுக்க முழுக்க கற்பனையில் படமெடுக்க இங்க முதற்கட்ட முயற்சிகள் கூட இன்னும்
எடுக்காதது தான் வருத்தம் .
குறும்படங்கள் இயக்குநராக
வருவதற்கு ஒரு சாட்சி சொல்கின்றன , அதுவே நிரந்தரத் தீர்வாகவாகிவிடாது .
– சந்திரபால் .