நீங்கள் விரும்பினால் என் பட்டாம் பூச்சிகளை உங்களுக்குப் பரிசளிப்பேன். ஆனால், அதைத் தொட்டுப்பார்க்க அனுமதிக்கமாட்டேன் .
Tuesday, 16 July 2013
Monday, 15 July 2013
நிலப்புத்தகம் அவள் .
ஒப்பணைகாரன்
தன் கடும் யோசனையில்
நொடிகளைச்
சுமந்து கொண்டிருந்தான் .
நாடகச்சுருளில்
கல்பறவைகளின் உடல் வழி
தன்
கனவுகளையும் வெறுமையின் பெரும் பரப்பில்
வைத்து கூச்சலிடும்
விற்பனைகாரி அல்ல இவள் .
பிணத்தின்
உறக்கத்தை சபித்து விட்டு
குற்றத்தின்
எலும்புகளை சுமக்கும் அவசியத்தில்
வனமந்திரத்தின்
அதிகாலை விழிப்பில்
கண்களை
சுற்றி முற்றுகையிடும்
நொடிகளை
வாங்கிக் கொண்டு
காலமும் கடன்காரியாக
என்னால் வாழமுடியாதென்றும் சொன்னாள் .
“ மிருகங்கள்
அத்தனையும்
அம்மணத்தின்
அழகை மறைத்துக் கொண்டு
தெருவில்
அலைகின்றன .
ஆண்களுக்குப்
பெண்களாகவும்
பெண்களும்
ஆண்களாகவும்
இரட்டை
வேடமணிந்து உறங்குகிறார்கள்.
சில்லரைகளின்
சத்தத்தைச் சங்கதிகளாக எழுதிக் கொண்டு
அடிமைகளின்
ஒழுக்கத்தை மனப்பாடம் செய்கிறார்கள் .
சமூகவியலின்
கண்ணாடி வயலில்
நீச்சல் தெரிந்திருந்தும்
எல்லோரும்
ஒரு
கருங்கல்லை எடுத்துக் கழுத்தில் கட்டிக் கொண்டார்கள் .
யார் யாரோ
வந்து போகிறார்கள் .
இலவசமாய்
தத்துவம் பேசுகிறார்கள் .
யாருடைய
கனவிலோ நிற்கிறார்கள் : நடக்கிறார்கள் .
இந்தப்
பகுத்தறியும் பாவிகள் . ”
கோதுமைநிறச்
சிரிப்பில் ஒரு தானியமாக முளைத்தவள்
அரங்கம்
அதிரச் சிரிக்கிறாள்
ஒப்பணைகாரன்
தன் கடும் யோசனையில்
நொடிகளைச்
சுமந்து கொண்டிருந்தான் .
“ முளைகள்
கொரித்து
எறும்புகள்
சுமந்து போகும்
விதைகள்
அல்ல நான் .
நிறுவனத்தில்
சிக்கிக் கொண்டு
பூச்சியினமாக
என்னால் ஒருபோதும் வாழ இயலாது .
என்
வார்த்தைகள் எங்கும் கூன்முதுகில்லை .
சமணன் உளியெடுத்து
புடைக்கும் என் அதிரல் . ”
அரங்கம்
அதிரச் சிரிக்கிறாள்
ஒப்பணைகாரன்
தன் கடும் யோசனையில்
நொடிகளைச்
சுமந்து கொண்டிருந்தான் .
- சந்திரபால்
.
Saturday, 13 July 2013
என்.எல்.சி. போராட்டம் தேவைதானா ?
இன்று முதல்
உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழக அரசின் வேண்டுகோளை எற்று
மத்திய அரசு தமிழக அரசிற்கு பங்குகளை விற்க ஒப்புக்கொண்டுள்ளது.
இது
பொதுமக்களுக்கு விற்பதாகத்தான் அர்த்தம் என்று விளக்கமும் சொல்லிவிட்டது. இதன்
பின்னரும் என்.எல்.சி ஊழியர்கள் போராட்டம் நடத்துவது அவசியமா என பொதுமக்கள்
சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். தற்பொழுது 8 மணிநேரம் மின்வெட்டு நிலவி வரும் நிலையில்
இந்த போராட்டம் அவசியமா ? என கேட்கின்றனர்.
மக்களின் அத்தியாவசிய
தேவைகளில் பணிபுரியும் அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது எனும்
சட்டத்தை இயற்றி இது போன்றபோராட்டங்களை தடுக்கவேண்டும்.
மின்சாரம்,
பால் மற்றும் போக்குவரத்து போன்ற மக்களின் அடிப்படை பிரச்னைகளில் பணி புரியும்
ஊழியர்கள் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்.
11 நாட்களாக
மின்உற்பத்தி தடைபட்டுள்ள நிலையில் நாட்டு மக்களின் நலனில் அவர்களது அக்கரை இன்மையையே
காட்டுகிறது. அரசியல் எல்லா இடத்திலும் புகுந்துவிட்டது. வாக்களித்த மக்கள்தான்
வானத்தை பார்த்த வண்ணம் உள்ளனர்.
Friday, 12 July 2013
இளவரசனின் மர்ம மரணம் கொலையா ? தற்கொலையா ?
சத்தியம் டி. வி.க்காக எழுதியது ....
இன்று
நடக்கும் இந்த 2 ஆம் பிரேத பரிசோதனையில் , இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலை? என்பது
முடிவுக்கு வரும் . ஆனால் இது முடிவு மட்டும் தான் . தீர்வு அல்ல . எதுவானாலும்
பாதிப்பு உருவாகும் . அது பற்றி ……..
இன்று
இளவரசனின் உடல் 2 ஆம் முறை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது . அதற்கு தமிழ் நாட்டு
மருத்துவர்களின் மீது நம்பிக்கை வைக்காமல் , டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவர்களை வரவழைத்திருக்கிறார்கள்.
காதல்
தோல்வியில் மரணமடைந்த இளவரசனின் உடல் இன்று மறு பிரேத பரிசேதனை செய்யப்படுகிறது .
இதற்கு முன் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் , அறிக்கை சமர்ப்பித்த 2 டாக்டர்களும்
இருவேறு கருத்துக்களைத் தெரிவித்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர்களை
வைத்து இன்று பிரேத பரிசோதனை நடக்கப்போகிறது .
இந்த
இரண்டாம் பிரேத பரிசோதனையில் ‘இளவரசனின் மரணம் கொலை தான்’ என்று அறிவிக்கப்பட்டால் மீண்டும்
ஜாதி தீ மூளும் . கலவரங்கள் வெடிக்கும் . கல்லடிகளும் கிடைக்கும் . பேருந்து
எரிந்து நாசமாகும் .
தமிழக அரசு
தர்மபுரியில் தடை உத்தரவு பிறப்பித்தது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் என்றாலும்
, பாதிக்கப்பட்டோரின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் காரியம் சிரமமானதாகும்.
ஒருவேளை
இளவரசனின் மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டால் , பெற்றோரும் உறவினர்களும் உடலை
வாங்க மறுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கோருவார்கள்.
தாங்கள்
விரும்பும் நீதிபதிகள் முன்பும் , மருத்துவர்கள் முன்பும் பிரேத பரிசோதனை நடத்த
உரிமை கோருவார்கள்.
இளவரசன்
உடல் நாளை அடக்கம் செய்யப்படும் . பெற்றோர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக்
கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இளவரசனின் உடல் அடக்கம்
செய்யப்படுமா ..? அடக்கம் செய்ய விடுவார்களா?
இறந்தும்
இந்த பூமியில் இருந்து இன்னும் விடுதலை கிடைக்கவில்லை ! என்ன கொடுமை இது . இளவரசன்
இறந்து இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன . இளவரசனின் ஆன்மா தான் இவர்களை மன்னிக்க
வேண்டும்.
- சந்திரபால் .
காதல்! காதல்! காதல்! காதல் போயின் சாதல்! சாதல்! சாதல் !
காதல்
வெற்றியடைந்தால் பெற்றோர் இறந்துவிடுகிறார்கள்: தோல்வியடைந்தால் காதலர்கள் இறந்துவிடுகிறார்கள்.
வரமாக
தொடங்கும் காதல் , திருமணம் என்றவுடன் சாபமாகிறது.
குடும்ப
மானம் போய்விடும் என்பதால் பெற்றோர்கள்
காதலைக் காவு கொடுத்து விடுகிறார்கள். கேட்டால் கௌவுரவக் கொலைகள்
என்கிறார்கள். தற்கொலைகள் என்ற பெயரில்
இதெல்லாம் மறைந்து மண்ணுக்குள் சிதைந்து விடுகிறன்றன . அல்லது கொஞ்சம் பெட்ரோலோ
மண்ணெண்ணெயோ ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார்கள் .
இதற்கெல்லாம்
இந்தசமூகம்தான் காரணம்; துருப்பிடித்துப்போன ஜாதீய அரிவாள்தான் காரணம். ஜாதிய
பெயர்கள் தெருக்களில் இருக்க கூடாது என போராடுகிறார்கள். ஆனால் இது காதலில் இருக்க
கூடாது என போராட ஆளில்லை. காரணம் சுயகௌரவம்; வரட்டு கௌவுரம் .
ஒரே
சாதியைச் சேர்ந்தவர்களிடம் தினமும் பல அக்கப்போர்கள் நடந்து கொண்டே இருக்கும் .
ஆனால் பிள்ளைகள் ‘கலப்பு திருமணம்’
செய்து வந்தால் அது கொண்டான் குடுத்தான்களிடம் பெரும் மானப் பிரச்சனையை முதுகில்
ஏற்றி விடும் என்று நடுங்குகிறார்கள். இது போலி எதார்த்தம் . போக்கத்த தனம் .
வக்கிழந்து நிற்கும் கோழை சனங்களின் மனம்.
பல ஆயிரம் ஆண்டுகளாக
மழுங்கி கிடக்கின்றது இந்த பரம்பரை குணம் . மதங்களும் சடங்குகளும் அதற்கு கை
தூக்குகின்றன . சடங்குகளை அழகியலாக பார்க்காமல் தெய்வக் குத்தாமாக பார்த்து , ஜாதி
சவுக்குகளை துருபிடிக்க விடாமல் தங்கள் மேல எடுத்து விலாசிக் கொள்கிறார்கள்.
சாதி
ஓழிப்பு போராட்டம் நடத்தும் ‘போலிப்பெரியார்கள்’ மற்ற சாதி தோழர்களிடம் புழக்கத்தில் இருந்தாலும் அவர்கள் சாதியில் பெண் கொடுக்கவோ
பெண் எடுக்கவோ நினைப்பதில்லை.
காதல்
திருமணங்கள் மட்டுமே சாதி ஒழிப்புக்கு நிரந்தரத் தீர்வாகும் .
ஆனால்
கௌரவக்கொலைகள் நடக்கும் போது காதலர்கள் மரணக் கைதிகளாக தவிப்பார்கள். அதனால் கலப்புத்
திருமணத்தை ஆதரிக்க அரசு கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும் . நாளடைவில் அதுவே நடைமுறையாக
மாறும் போது இந்தக் கிழட்டு சமூகம் இறக்க நேரிட்டு புதிய சமூதாயம் தெளிந்தோடும் .
கலப்புத்
திருமணங்களுக்கு சளுகைகள் கொடுப்பதை விட கலப்பு திருமணம் செய்பவர்களின் உயிரைக்
காப்பது முக்கியமானது .
-சந்திரபால் .
Thursday, 11 July 2013
சலுகைகளைப் பெற முதலில் உயிரோடு இருக்க வேண்டும் .
கோவை காவல்
துறை கண்காணிப்பாளரிடம் “கொலை மிரட்டல் வந்துள்ளால் எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு
கொடுங்கள்” என்று
கேட்டுள்ளார்கள்.
பத்திரிகைகளும்
காட்சி ஊடகங்களும் இதை பெரிதாக்கி வெளியிடும் அவசியம் என்ன ? என்பதை தெரிந்து
கொள்ள வேண்டும்.
இளவரசன் –
திவ்யா காதல் விவகாரம் இன்னும் ஆறாத நிலையில் , தமிழகத்தில் சென்ற மாதத்தில்
மட்டும் 20 க்கும் மேற்பட்ட காதல் கொலைகள் நடந்தேறியிருக்கிறது என்ற அதிர்ச்சி
புலனாய்வு தகவல்கள் ரகசியம் காத்து வருகின்றன .
கலப்பு
திருமணங்களுக்கு சலுகைகளை பெயரளவிற்கு மட்டும் தெரிவிக்கும் அறிவிப்புகளைப்
பெறுவதற்கு முதலில் உயிரோடு இருக்க வேண்டும்.
கௌவரக்
கொலைகளுக்கென்று தனியான சட்டம் அமைத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் . அதை விசாரணைகள் கவனிக்கப்பட வேண்டும் .
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.
இது ஒரு தனி
சட்டமாக இருந்து வரும் நிலையில் , இதை சட்டம் பயில்பவர்களும் கையாள வேண்டுமென
சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்டம்
பயின்ற மாணவ – மாணவிகள் ஒவ்வொருவரும் காவல்துறையிடம் தங்கள் சான்றிதழ்களை
சரிபார்த்த பிறகு தான் ‘பார்கவுன்சில்’
லில் [வழக்குரைஞர் கழகம்] தங்கள் பெயரைப்
பதிவு செய்ய வேண்டும் என நேற்று [10.7.2013 .] நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால்
பார்கவுன்சில்லில் பதிய இருந்த 100க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவ – மாணவிகள்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் .
மறியல் , ஆர்ப்பாட்டம்
, என்று போராட்டம் நடத்தும் போது ஆயிரக்
கணக்கான மாணவர்கள் கைதாகி பின் மண்டபங்களில் சிறிது நேரம் தங்க வைத்து
விடுவிக்கப்படுவார்கள்.
இம்மாதிரியான
போராட்டங்களின் போது மாணவர்களின் மீது பாயும் வழக்குகள் கிரிமினலாக இருந்தால் அதனால் அம்மாணவர்கள் அரசு வேலைக்கு தகுதியாகும் போது அவர்களுக்கு
சிக்கலை உருவாக்கும்.
சட்டக்கல்லூரி
மாணவர்களே பெரும்பாலான போராட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்கள். இனி அவர்கள் மீது கிரிமினல் சம்பந்தமான
வழக்குகள் இருந்தால் நீதி மன்றங்களில் வாதாட இதனால் அனுமதி மறுக்கப்படும் சூழல்
உருவாகும்.
இன்னும்
இந்த உத்தரவு அமலுக்கு வராத நிலையில் , இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதி
மன்றத்தில் சட்டம் படிக்கும் மாணவர்கள் வழக்குத் தொடுக்க நேரிடும்.
- சந்திரபால் .
Subscribe to:
Posts (Atom)