Wednesday 14 November 2012

107 வயதில் பகரீத் கொண்டாடிய மூதாட்டி..



இஸ்லாமியர்களின் புனிதத் திருநாளான பக்ரீத் பண்டிகையை 107 ஆம் வயதில் ஜெஹராவி என்ற மூதாட்டி கொண்டாடியிறுக்கிறார்.

திருப்பூர் மாவட்டத்தில், மூன்று தலைமுறைக்கு மேல் கடந்து வந்த ஜெஹராவி என்ற இஸ்லாமிய மூதாட்டிக்கு இப்போது வயது 107 ஆகிறது.

1905 ஆம் ஆண்டுகளில் பிறந்த, இந்த முதுமகளுக்கு 1 மகனும் 3 மகள்களும்,  39 பேரன் பேத்திகளும், 71 கொள்ளுப்பேரன் பேத்திகளும் உட்பட மனைவிமார்களோடு அடங்கிய 189 பேர்கள் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைப் பூர்வீகமாக் கொண்டவர் ஆர். சையத் அப்துல் லத்தீப்.

1950 களில்... தன் மனைவி ஜெஹாவியுடன் அப்துல் லத்தீப் திருப்பூரில் பனியன் நூல் பிரிக்கும் தொழிலைச் செய்து தன் பிள்ளைகளை வளர்த்து வந்தார்.

இப்போது அப்துல் லத்தீப் இறந்து 40 ஆண்டுகள் கடந்த நிலையில், தான் பெற்ற விழுதுகளின் தயவில் 107 வயதிலும் பூரண நலமுடன் ஜெஹராவி வாழ்ந்து வருகிறார்.

பனியன் தொழிலையே நம்பி பணியாற்றி வரும் ஜெஹராவி பாட்டியின் வாரிசுகள், திருப்பூரில் வாடகை வீடுகளில் தான் தனித் தனியாக்க் குடித்தனம் நடத்தினார்கள்.

உறவினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வசிக்க வேண்டுமென்று திருப்பூரில் உள்ள நல்லூர் பகுதியில், 2005 ஆம் ஆண்டு 1 ஏக்கர் நிலம் வாங்கி வீடுகள் கட்டி ஒரு கூட்டுப் பறவைகளாக வசித்து வருகின்றனர்.

இந்த வாரிகள் அனைவரும் தங்கள் பக்ரீத் பண்டிகையை மூதாட்டின் கௌரவ விழாவாகவும் பெரும் குடும்ப விழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பத்திரிகை அடித்து உறவினர்களை அழைத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் தடபுடலாக மூதாட்டி ஜெஹராவியுடன் பக்ரீத்தை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.

விழாவில் பங்கேற்ற அனைவரும், பாட்டி ஜெஹராவியிடம் ஆசி பெற்று மகிழ்ந்தனர்.

மூதாட்டியின் 1 மகனும் 3 மகள்களும் உயிருடன் உள்ள நிலையில் மூதாட்டி ஜெஹராவி, உறவுகளின் அரவணைப்பில் நலமுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

மூதாட்டி ஜெஹராவி 100 வருடங்களுக்கு மேல் நலமுடன் இருக்கக் காரணம் என்னவாக இருக்கும்...?

உணவு முறையில் சீரான கட்டுப்பாடும், இறை நம்பிக்கையும் இடை விடாத தொழுகையும் நற்பண்புகளும் சேர்ந்தால் மனித ஆயுள் நீடிக்கும் என்பதை மூதாட்டி ஜெஹராவியின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.












No comments:

Post a Comment