Tuesday 2 July 2013

செல்லப் பிராணிகள் .


நம்முடைய நேரத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் செல்லப்பிராணிகள் , குழந்தைகளுக்குப் பொம்மைகளைப் போல விளையாட்டுக்காட்டும். நம்மையும் குழந்தையாக மாற்றி விளையாட வைக்கும்.


தாவிக் குதித்துக் கொண்டும், அங்கும் இங்கும் ஓடிக் கொண்டும் வீட்டில் இருக்கும் நாய் அல்லது பூனைக்குட்டியைப் பார்க்கும் போது, நம்முடைய மனஅழுத்தம் நிச்சயம் குறையும்.



விலங்குகளையும், பறவைகளையும் நேசிக்கும் மனிதர்கள் மனதில் கர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். மிக எளிதாக வாழப் பழகிக் கொள்கிறார்கள்.



நாய்கள், பூனைக்குட்டிகள், கலர்க் கலர் மீன்கள், பச்சைக் கிளிகள், வெளிநாட்டுப் பறவைகள், புறாக்கள், முயல், கோழிகள் என்று செல்லமாக வளர்க்கும் உயிர்களிடம் மனம் இளகி விடுகிறது. அதன்வழி மற்றவர்களிடம் ஆனந்தாமாக பேச முடிகிறது.



கழுத்தை ஆட்டிக்கொண்டு, மாறி மாறி நாக்கால் நக்கும் நாய் குட்டிகளே செல்லப் பிராணிகளில் முதலிடத்தில் வந்து நிற்கின்றன.



வளப்புப் பிராணிகளில் பாசம் மிகுந்தாகவும், ஓடி விளையாட உகந்ததாகவும் நாய்கள் இன்று பல ரகங்களில் இருக்கின்றன.



நாய்கள் காவலுக்காவும், வேட்டையாடவும் வளர்க்கப்பட்டு வந்த காலம் மாறி, நாய்களைச் செல்லமாக வளர்க்கத் தொடங்கி விட்டார்கள்.



நாய்கள் குட்டியாக இருக்கும் போதே வாங்கிச் சென்று குழந்தை போல சொல்லிக் கொடுக்கிறார்கள்.

ஒவ்வொரு ரக நாய்களுக்கும் சில தனிப்பட்ட குணங்கள் இருக்கின்றன.



கிராமங்களில் பெரும்பாலானோர் வீட்டில் வளர்க்கப்படும் நாட்டு நாய்கள், தெருவில் எங்கு சென்று சுற்றினாலும் இரவு நேரத்தில் வீட்டு வாசலில் வந்து படுத்திருக்கும். வயல்வெளிக்களுக்குச் சென்றால் கூடவே வந்து கொண்டிருக்கும்.



வீட்டில் சாப்பிடும் போது காலால் தொட்டு, உணவு கேட்கும் நாய்களும் இருக்கின்றன.



‘அல்சிசன் ‘டாபர்மேன் போன்ற நாய்களை அதிகாலையில் வாக்கிங் போகும் போது கூடக் கூட்டிச் செல்வதை மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள்.



பந்தையோ அல்லது ஏதாவது ஒரு பொருளையோ தூக்கிப் போட்டால் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்கள் அதைக் கவ்விக் கொண்டு வருவதைப் பார்த்துக் கைதட்டிக் கொண்டிருக்கலாம்.



வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வரும் போது வாசலில் செல்ல நாய் காலைக் கட்டிக் கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.


பல இடங்களில் நாய்களுக்கென்று கண்காட்சிகளும் நடத்துகிறார்கள். இதுவரை பார்த்திராத பல வகையான நாய்களைப் பண்ணைகளில் இருந்தும் வீடுகளில் இருந்தும் கொண்டு வருகிறார்கள்.



நாய்களுக்கு அடுத்தபடியாக பூனைதான் வீட்டின் எல்லா இடத்திலும் சென்று விளையாடும்.



பூனைகள் சுயநலம் மிகுந்த உயிராக இருக்கும். பூனைகள் செய்யும் குறும்பு நம்மை வேடிக்கைப் பார்க்க வைக்கும்.



பூனைகள், குட்டியாக இருக்கும் போது எந்த நேரமும் விளையாடிக் கொண்டே இருக்கும்.



காலையில் டீ போட்டவுடன், பூனை கத்திக் கொண்டே வந்து விடும். கண்ணாடியில் தலை வாரிக் கொண்டிருக்கும் போது மறைத்துக் கொண்டு வந்து நிற்கும்.



பூனை கண்ணைச் சிமிட்டிக் கத்தும் போது அதன் மெல்லிய உடம்பை தடவிக் கொடுத்தால் அது மெதுவாக கடித்து வைக்கும்.



உறங்கும் போதும் பக்கத்தில் படுத்துத் தூங்கும் பூனைக்கு தான் வீட்டில் சுதந்திரம் ஏராளம் இருக்கும்.



கண்ணாடித் தொட்டிகளில் கலர் மீன்கள் வளப்பது சிலருக்கு விருப்பமானதாக இருக்கிறது.



வீட்டுத் தாழ்வாரத்தின் முன்பாக வைத்து வளர்க்கும் கலர் மீன்கள், நீந்தும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.



சிறிய மின் மோட்டார்களை வைத்து வரும் காற்றை மீன் தொட்டிகளில் விட்டு, அதனால் வரும் நீர் குமிழிகளில் மீன்கள் விளையாடுகின்றன.



மீன் தொட்டிகளில், பிளாஸ்டிக் மரங்களும் - கொடிகளும் இருக்க, அதற்குள் மீன்கள் வளைந்து வளைந்து நீந்துகின்றன.



கிராமங்களில், குளத்திலும் - ஓடைகளிலும் சிறுவர்கள் மீன் குஞ்சுகளைப் பிடித்து வந்து தொட்டிகளில் வளர்ப்பார்கள்.



சரியான நேரத்தில் தண்ணீர் மாற்றும் பக்குவம் தெரியால், பிடித்து வந்த மீன் குஞ்சுகள் அடுத்த நாள் காலையில் செத்து மிதக்கும்.



பனைமரப் பொந்து களிலிருந்து, கிளிக் குஞ்சுகளை எடுத்து வந்து வளர்ப்பதை கிராமத்துச் சிறுவர்கள் பெரிதும் விரும்புவார்கள்.



கிளி வளர்க்கும் வீட்டின் மேல் மற்ற கிளிகள் பறந்து வந்து எப்போதும் கத்திக் கொண்டே இருக்கும்.



பேசத் தெரியாத குழந்தையைப் போல, பேசும் கிளியின் மொழியை ரசிக்கிறார்கள்.



Love birds என்ற பெயரில், வெளிநாட்டுப் பறவைகளுக்கு வீடுகள் போல செய்து, பெரும் பெரும் கூண்டுகளில் வளர்க்கிறார்கள்.



எல்லா வண்ணத்திலும் இருக்கும் இந்தக் கலர் குருவிகள், விசில் அடித்துக் கொண்டே நிமிடத்துக்கு 100 க்கும் அதிகமான முத்தங்களை கொடுக்கின்றன.   



ஊஞ்சலாடிக் கொண்டே இந்த வெளிநாட்டுப் பறவைகள், தம் இணைகளுக்குப் பேன்பார்க்கும் அழகில் நம் மனம் கரைந்து விடும்.



வளர்ப்புப் பறவைகளில் வெகுதூரம் சென்று வீடு பறவையாக இருப்பது புறாக்கள் மட்டும் தான்.



மூன்று மாதங்களுக்கொருமுறை புறாக்கள் இரண்டு முட்டைகளிட்டுக் குஞ்சு பொரிக்கும்.



மயில் புறாக்கள் மாடப்புறாக்கள், மணிப் புறாக்கள் , கூது புறாக்கள் மற்றும் சவுடால், கிரிசல், என பல வகையாக புறாக்கள் இருக்கின்றன.



புறாக்களின் அணத்தும் சத்தத்தை வைத்து, புறாக்கள் வளப்பது வீட்டுக்கு ஆகாது என்று ஒரு ஐந்தீகத்தை இன்றளவும்  சொல்லி வருகிறார்கள். அதனால் தான் இந்த சுதந்திரப் பறவையை எல்லோராலும் வளர்க்க முடிவதில்லை.



வீட்டில் வளர்க்கும் புறாக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் போது, காட்டுப் புறாக்களையும் உடன் அழைத்து வரும்.



நூற்றுக் கணக்கணக்கான புறாக்களுக்கு கம்பு சோளம் போன்ற இரைகளைத் தூவும் போது, பறந்து வந்து புறாக்கள் கொத்தும் அழகு, பார்க்க அற்புதமாக இருக்கும்.



பல வண்ணங்களில், கலர்க் கோழிக் குஞ்சுகளைச் செல்லமாக வளர்க்கிறார்கள்.



கழுகும் - காக்கையும் தூங்கி செல்வதிலிருந்து பாதுகாக்க ஒரு மாதா காலம் வரை வீட்டுக்குள்ளே கலர் கோழிக்குஞ்சுகள் இருக்க வேண்டும்.



கலர் கோழிக் குஞ்சுகள் தாயில்லாமல் வளர்வதால் நடக்கும் போது நம்முடைய காலில் மிதிபட்டுச் சாகும் .



முயல்கள் கறிக்காகவும், செல்லப் பிராணியாகவும் இருக்கின்றன. நான்கைந்து குட்டிகளை முயல்கள் ஈனுகின்றன.



வெண்ணீற முயலகள் மற்றும் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் முயல்கள் இருக்கின்றன. வாசலோரத்தில் புல்தரைகள் இட்டு முயல்கள் வளர்க்கப் படுகின்றன.



நீண்ட கழுத்தைக் கொண்ட வாத்துகளும், வான் கோழிகளும் அதன் நடை அழகில் கத்தும் ஓசையில் நம் அழகான நேரங்களை வாங்கிக் செல்கின்றன.



காடுகளில் மட்டுமே வளரக்கூடிய வனவிலங்குகளையும் கூண்டுகளில் அடைத்து வளர்த்து வருகிறார்கள்.



அழிந்து வரும் அரிய வகையான விலங்குகளை இனப்பெருக்கம் செய்யச் செய்து பாதுகாத்து இன விருத்தி செய்கிறார்கள் வனக் காப்பாளர்கள்.



மிக நீழமான மலைப் பாம்புககள் – சிங்கங்கள் - வரிப்புலிகள் – அபூர்வப் பறவைகள் – என்று அதிசயக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கென்று தனி துறை செயல்படுகின்றன.



விவரம் அறியாதா குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் அழகாக இருக்கும். வீட்டில் வளர்க்கும், விலங்குகளும் – பறவைகளும் குழந்தைகள் போல இருக்கும். 

  

செல்லப் பிராணிகள் நம் ஆனந்தத்தை  வைப்பு நிதாயாக வைத்திருக்கும் வங்கிகள்  : அர்த்தமில்லாத உற்சாகத்தை எழுதும் சங்கதிகள்.

இருதயத்தில் கொட்டிக் கிடக்கும் பொன்மணிகள் இந்தச் செல்லப் பிராணிகள். 

- சந்திரபால்.


No comments:

Post a Comment