Friday 12 July 2013

காதல்! காதல்! காதல்! காதல் போயின் சாதல்! சாதல்! சாதல் !


காதல் என்பது இளைஞர் மற்றும் இளமங்கைகள் வாழ்க்கையில் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது; இது தவிர்க்க முடியாதது.

காதல் வெற்றியடைந்தால் பெற்றோர் இறந்துவிடுகிறார்கள்: தோல்வியடைந்தால் காதலர்கள் இறந்துவிடுகிறார்கள்.

வரமாக தொடங்கும் காதல் , திருமணம் என்றவுடன் சாபமாகிறது.  

குடும்ப மானம் போய்விடும் என்பதால்  பெற்றோர்கள் காதலைக் காவு கொடுத்து விடுகிறார்கள். கேட்டால் கௌவுரவக் கொலைகள் என்கிறார்கள். தற்கொலைகள் என்ற பெயரில் இதெல்லாம் மறைந்து மண்ணுக்குள் சிதைந்து விடுகிறன்றன . அல்லது கொஞ்சம் பெட்ரோலோ மண்ணெண்ணெயோ ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார்கள் .

இதற்கெல்லாம் இந்தசமூகம்தான் காரணம்; துருப்பிடித்துப்போன ஜாதீய அரிவாள்தான் காரணம். ஜாதிய பெயர்கள் தெருக்களில் இருக்க கூடாது என போராடுகிறார்கள். ஆனால் இது காதலில் இருக்க கூடாது என போராட ஆளில்லை. காரணம் சுயகௌரவம்; வரட்டு கௌவுரம் .

ஒரே சாதியைச் சேர்ந்தவர்களிடம் தினமும் பல அக்கப்போர்கள் நடந்து கொண்டே இருக்கும் . ஆனால் பிள்ளைகள் ‘கலப்பு திருமணம்’ செய்து வந்தால் அது கொண்டான் குடுத்தான்களிடம் பெரும் மானப் பிரச்சனையை முதுகில் ஏற்றி விடும் என்று நடுங்குகிறார்கள். இது போலி எதார்த்தம் . போக்கத்த தனம் . வக்கிழந்து நிற்கும் கோழை சனங்களின் மனம்.
   
பல ஆயிரம் ஆண்டுகளாக மழுங்கி கிடக்கின்றது இந்த பரம்பரை குணம் . மதங்களும் சடங்குகளும் அதற்கு கை தூக்குகின்றன . சடங்குகளை அழகியலாக பார்க்காமல் தெய்வக் குத்தாமாக பார்த்து , ஜாதி சவுக்குகளை துருபிடிக்க விடாமல் தங்கள் மேல எடுத்து விலாசிக் கொள்கிறார்கள்.

சாதி ஓழிப்பு போராட்டம் நடத்தும் ‘போலிப்பெரியார்கள்’ மற்ற சாதி தோழர்களிடம் புழக்கத்தில்  இருந்தாலும் அவர்கள் சாதியில் பெண் கொடுக்கவோ பெண் எடுக்கவோ நினைப்பதில்லை.

காதல் திருமணங்கள் மட்டுமே சாதி ஒழிப்புக்கு நிரந்தரத் தீர்வாகும் .

ஆனால் கௌரவக்கொலைகள் நடக்கும் போது காதலர்கள் மரணக் கைதிகளாக தவிப்பார்கள். அதனால் கலப்புத் திருமணத்தை ஆதரிக்க அரசு கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும் . நாளடைவில் அதுவே நடைமுறையாக மாறும் போது இந்தக் கிழட்டு சமூகம் இறக்க நேரிட்டு புதிய சமூதாயம் தெளிந்தோடும் .

கலப்புத் திருமணங்களுக்கு சளுகைகள் கொடுப்பதை விட கலப்பு திருமணம் செய்பவர்களின் உயிரைக் காப்பது முக்கியமானது .

-சந்திரபால் . 
   

No comments:

Post a Comment