Sunday 7 July 2013

பட்டிக்காட்டுப் பாசம்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நான் வெளியிட்ட புத்தகத்தில் பதித்த கவிதை இது
பட்டிக்காட்டுப் பாசம்.

ஆடு மேய்க்கும் நேரத்துல
என்னையும் மேச்சுப் போனவளே
உச்சுக் கொட்டி நீ பேச
ஒலகம் மறந்து போனேனே

ஒனக்காகக் காத்திருந்து
நீ வராத நேரத்துல
கல்லுக்கிட்டையும் புல்லுக்கிட்டையும்
காரணத்தச் சொல்லிப்புட்டு
ஒத்தச் சொட்டுக் கண்ணீரோட
தெச மறந்து திருஞ்சேனே

குட்டிச்செவுரு ஓரத்துல
வெட்டியா பேசியத
பல்லுப்போன கெழவி பாத்து
நாசமா போகனு
வாழ்த்திட்டுச் செத்துப்போனா

ஊர் ஒரங்கும் நேரத்துல
ஒன்னோட பேசியத
ஒட்டுக்கேட்டு ஓடிப் போன வெடச்ச மூக்கே
தப்பு நடந்துபோச்சுனு
தவுலடிச்சு சொன்னானே

ஊருக்குள்ள ஒதுக்கி வச்சு
தெனோ ஒரு பஞ்சாயத்து
ஆள்ஒன்னு தடிஒன்னுனு
அப்ப அப்ப வெட்டுக்குத்து

அந்த நெருப்பு நிமிஸத்துல
நெலகொழஞ்ச வேளையில
மடியில விழுந்து பொரண்டுக்கிட்டு
"நெறமாசக் காரி"போல
நெஞ்சு வலிக்க அழுதியம்மா

ஓட்டப்பிரிச்சு எரிஞ்சிட்டு
ஒன்னோட ஊரவிட்டு ஓடிப்போயி
காட்டுக்குருவி போல
காலம் போகிற தெச பாத்து
எட்டுவச்ச கதையெல்லாம்
ஏ நெனப்ப விட்டுப் போகலம்மா

இன்னைக்கு நெனச்சாலும்
அழுத கண்ணீருக்கு ஆழத்தையும்
அடி மனசு அடிச்ச தாளத்தையும்
கணக்கெடுத்துச் சொல்லிப்புட்டு
நா கல்லரைக்குப் போவேன்டி...

No comments:

Post a Comment