Saturday 13 July 2013

என்.எல்.சி. போராட்டம் தேவைதானா ?



மத்திய அரசு என்.எல்.சியின் 5% பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அதன் ஊழியர்கள் கடந்த 11நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.

இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழக அரசின் வேண்டுகோளை எற்று மத்திய அரசு தமிழக அரசிற்கு பங்குகளை விற்க ஒப்புக்கொண்டுள்ளது.

இது பொதுமக்களுக்கு விற்பதாகத்தான் அர்த்தம் என்று விளக்கமும் சொல்லிவிட்டது. இதன் பின்னரும் என்.எல்.சி ஊழியர்கள் போராட்டம் நடத்துவது அவசியமா என பொதுமக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். தற்பொழுது 8 மணிநேரம் மின்வெட்டு நிலவி வரும் நிலையில் இந்த போராட்டம் அவசியமா ? என கேட்கின்றனர்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் பணிபுரியும் அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது எனும் சட்டத்தை இயற்றி இது போன்றபோராட்டங்களை தடுக்கவேண்டும்.

மின்சாரம், பால் மற்றும் போக்குவரத்து போன்ற மக்களின் அடிப்படை பிரச்னைகளில் பணி புரியும் ஊழியர்கள் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்.

11 நாட்களாக மின்உற்பத்தி தடைபட்டுள்ள நிலையில் நாட்டு மக்களின் நலனில் அவர்களது அக்கரை இன்மையையே காட்டுகிறது. அரசியல் எல்லா இடத்திலும் புகுந்துவிட்டது. வாக்களித்த மக்கள்தான் வானத்தை பார்த்த வண்ணம் உள்ளனர்.



No comments:

Post a Comment