Tuesday 2 July 2013

மருந்து மாத்திரைகள்

அரசு மருத்துவ மனைகளில் சளி –காய்ச்சல் என்று,சிகிச்சைக்காக வரும் புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
 
பருவ மாற்றங்களால் , தமிழகத்தில் ஒரு நாளைக்கு 5 லட்சம் பேர் அரசு மருத்துவ மனைக்குச் சிகிச்சைக்காகச் சென்று வருகிறாகள் . 16 ஆயிரம் பேர் மருத்துவ மனையிலே தங்கி சிகிச்சை பெறுகிறார்கள் .

புற நோயாளிகளாக வருபவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் .
மாணவ பயிற்சி மருத்துவர்களே பெரும்பாலும் இவர்களுக்குப் பரிசோதனை செய்கிறார்கள் . பரிசோதனையில் இந்தப் பயிற்சி மருத்துவர்கள் , அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் , நோயாளிகள் பொறுமையிழந்து நிற்கிறார்கள் .

ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல , அதிக பட்சம் மூன்று மாதங்கள் வரை மருத்துவ மனைக்கும் வீட்டுக்கும் அலைய வேண்டியுள்ளது . தீராத வியாதியென்றால் அது மாதக்கணக்கில் நீளும் .

சில நோயாளிகள் 2 மாதங்களுக்கும் மேலாக மருத்துவக் குறிப்புகளை வைத்துக் கொண்டு  அலைகிறார்கள் .  தவணை முறையில் தேதி குறித்து அனுப்புவதற்கு என்ன வலுவான காரணம் இருக்கிறதென்று தெரியவில்லை.

ஸ்கேன் – எக்ரே போன்ற பரிசோதனைகளுக்கு நாள் குறித்து அனுப்பப்படுகிறார்கள் . புற நோயாளிகளுக்கு , வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறர்கள் . மற்ற நாட்களில் மாணவ மருத்துவர்கள் , மாத்திரையை மட்டும் கொடுத்தனுப்புகிறார்கள் .

இலவசம் – சளுகை என்பதால் நோயாளிகள் தாமதமாகவும் சிரத்தை இல்லாமலும் அரசு மருத்துவ மனைகளில் குணப்படுத்தப்படுகிறார்கள் .

வெறும் காய்ச்சலுக்கே , தனியார் மருத்துவர்களிடம்  குறைந்தது 500 ரூபாய் வரை செலவழிக்க வேண்டிருக்கிறது . இதனால் பலர் மருத்துவரிடம் செல்லாமலே கசாயத்தையும்  , மளிகைக் கடை மாத்திரையையும்  வைத்தே வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள் .

சிலர் சிகிச்சைக்குச் செல்ல வழியில்லாமல் நோயாளிகளாகவே கடைசி வரை வாழ்ந்து வருகிறார்கள் .

ஐந்து அறைக்கு ஒரு செவிலியர் என்ற முறையில் அரசு மருத்துவ மனைகள் இயங்கி வரும் இச்சூழலில் , நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் , செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது .

அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் , அரசு மருத்தவ மனைகள் மிகுந்த கவனம் எடுத்துச் செயல்படுட வேண்டும் . பரிசோதனைகள் விரைந்து முடிக்க வேண்டும் .

- சந்திரபால் .

No comments:

Post a Comment