Monday 1 July 2013

செல்போன் நிறுவனங்களின் பாலியல் வியாபாரம்.



இந்த மாபெரும் தகவல் தொடர்பு யுகத்தில் , நாளுக்கு நாள் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன .

முகம் தெரியாமலும் – முகவரி தெரியாமலும் , வயது வித்தியாசம் பாராமல் தொடர்பு கொள்ளும் இணையத்தள வசதிகளும் , செல்போன் தொடர்புகளும் ஏராளம் வந்து விட்டன .

வளர்ந்து வரும் இன்றைய ஆடம்பரங்கள் , புதிய புதிய தேவைகளை நமக்கு ஏற்படுத்தி,  வாங்கும் சக்தியை அதிகப்படுத்தவே குறியாக இருக்கின்றன.

இளைய தலைமுறைகளின் மனநிலைக்குத் தகுந்தவாறு கவர்ச்சி மிகுந்த நுகர்வுகளைச் சந்தைப்படுத்துகின்றன .

இந்த அடிப்படையில் செல் போன் நிறுவனங்கள் , குறுந்தகவல்களை அனுப்பி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரம் கொடுக்கின்றன .

காலர் டீயூன் , பொது அறிவு , நடப்பு செய்திகள் , சினிமாக்காரர்களின் கிசுகிசு , போன்ற விதவிதமான ‘ஆப்பர் களை செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து கொடுத்து எரிச்சலூட்டுகின்றன.

அவர்கள் பதிவு செய்து அனுப்பும் குரல் ஒலிக்கும் போது ,  சொன்ன பட்டன்களை ஒருமுறை நாம் அழுத்தினால் போதும் நிர்ணைத்த விலையை எடுத்துக் கொள்கிறார்கள் .

இதில் புது வரவாக சில சமீப வருடங்களாக ஒரு திட்டத்தை சில செல்போன் நிறுவனங்ள் அறிமுகப்படுத்தி நல்ல வருமானம் பார்த்து வருகின்றன .

Girl friend வேண்டும் என்றால், செல் போன் நிறுவனத்திற்கு போன் 
செய்து கேட்டால் போதும் , உங்களுக்கான  Girl friend கிடைக்கும் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள் . இதை நம்பி இளைஞர்கள் அலைக்கிறார்கள் .

இதற்காக ஒரு நிமிடத்திற்கு 3 ரூபாய் எடுத்துக் கொள்ளும் தொழில் திறமையில் செல் போன் நிறுவனங்கள் ஏற்கனவே தயாராக பதிவு செய்து வைத்ததை அனுப்புகிறார்கள் .

தேடிய பெண் கிடைக்கும் வரை இளைஞர்கள் அழைப்பிலே காத்திருக்கிறார்கள் . பதிவு செய்து ஒலிக்கும் வார்த்தைகள் இச்சை தூண்டும் விதமாக இருக்கிறது .

“ ஹாய் நான் ப்ரியா பேசுறேன் . எனக்கு ஒரு பாய் பிரண்டு வேணும் . ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன் . வீட்ல போர் அடிங்குதுங்க . ஏ மனசு விட்டு பேச எனக்கு யாருமே இல்லங்க . நீங்க எங்கூட பேச முடியுமா … என்னைத் தனிமை ரொம்ப வாட்டுதுங்க …. ப்ளீஸ் எங்கூட பேசுங்க ….. நீங்க எது வேண்டுமானாலும் எங்கிட்ட பேசலாம் .  - இப்படி நீண்டு கொண்டே போகும் உரையாடலில் , குறைந்தது 50 ரூபாயைத் தாண்டியதும் அதிஷ்டம் இருந்தால் ஒரு பெண்ணின் நேரடி குரல் கேட்க வாய்ப்புக் கிடைக்கும் .

ஆனால் கேட்கும் அந்த பெண் குரல் மட்டும் தான் வரும் . எந்த போன் நம்பரும் வராது . செல் போன் நிறுவனங்களின் நம்பரிலே பேச வேண்டும் . மழுங்கத்தனமாக பேசும் சாமர்த்தியம் இருந்தால் அந்தப் பெணணின் சொந்த நம்பரை வாங்கி தனியாகப் பேச்சைத் தொடரலாம் .

தொடக்கத்தில் ஏதோ பிடிக்காததைப் போலப் பேசி எரிச்சலாக்கும் பெண் , தொடர்ந்து பேசிப் பேசி மணம் மாறி கொஞ்சும் அனுபவத்தைச் செல்போன் நிறுவனங்கள் ஏற்படுத்தி பாலியல் இச்சைத் தூண்டுகின்றன.

ஒரு சமூதாயத்தைச் சீரழிப்பதில் மாபெறும் விற்பனைக்கான அனைத்து 
வசதிகளையும் ஏற்படுத்தித் கொண்டு , நல்ல வருமானம் பார்க்கின்றன .
இதற்காகவே பெண்களைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதைத், தொடர்பு கொண்ட அனுபவத்திலிருந்து உணர முடிகிறது .

தொழில் திறமை இருந்தால் இங்கு எதையும் எப்படியும் வியாபாரம் செய்யலாம் . அதற்காக , பாலியல் மயக்கத்தில் நேரம் போவதே தெரியாமல் பேசுவதால் அதிக வருமானம் பார்க்கும் உத்தியை செல் போன் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன .

எப்படி கெட்டு நாசமாக வேண்டும் என்பதை இம்மாதிரியான ஊடகங்கள் கற்றுத் தருகின்றன . வெளிப்படையாகத் தடையில்லாமல் நடைபெறும் இந்தப் பாலியல் வர்த்தகத்தைத் தடுக்க சட்டங்கள் ஏன் இன்னும் வரவில்லை ….?

- சந்திரபால் .

No comments:

Post a Comment