Monday 1 July 2013

நிறுவனத்தில் சிக்கிக் கொண்ட கலைஞர்கள் - பூச்சி இனங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

கலையின் வடிவங்களைத் தற்செயலான ரூபத்திலிருந்து, கருக்  கூடி முடிவதற்குள் அவசர அவசரமாய் பிரசவித்து விடுகிறார்கள் .

எப்போது கலை என்பது வியாபாரத்திற்காகப் படைப்பக்கப்படுகிறதோ , அப்போதே அதன் மரபுத் தொன்மங்கள் அழிந்து உப்பச் சப்பில்லாமல் போய் விடுகிறது .

ஒரு படைப்பாளன் நிறுவனத்தில் சிக்கிக் கொள்ள நேரும் போது , தன் படைப்பை கொன்று விட்டு இறந்து விடுகிறான் .

விதிகள் - முறைகள் - நிறுவனத்திற்கென்ற வரையறைகளோடு சேர்ந்து படைப்பாளனுக்கான யோசனைகள் மழுங்கி விடுகின்றன.

ஒழுங்காக சமைக்கத் தெரியாதவன் தன்னிடம் இருக்கும் மசாலாவைக் கூட சரியாகப் பயன்படுத்த முடியாமல் கிண்டி இறக்குவதைப் போல , இன்றைய மனிதர்கள் கலைஞர்களாக அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.

எதார்த்தம் என்ற பெயரில் இருப்பதை அப்படியே பதிவு செய்து , இதுவே புதிய முறை [The new method] என்று வியக்க வைக்க முயற்சி செய்கிறார்கள் .

அதைத் தொடர்ந்தே பின்வரும்  தலைமுறை மனிதர்கள் கலை என்றால் இது தான் என நம்பி விடுகிறார்கள் .

யாருடைய தலைமைக்கோ கட்டுப்பட்டு , ஒரு எல்லைக்குள் நின்றே வட்டமடித்து வருகிறார்கள் .

1950 களில் “ரொலாண் பார்த்”  என்ற மாபெரும் தத்துவ ஞானி பிரான்ஸில் கலை குறித்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார் . கலை உலகத்தின் மாகான் என்றே இவரை அறிந்தவர்கள் சொல்லிக் கொண்டார்கள் .

இவர் எழுதிய கட்டுரைகளிலே பெரும் எதிர்பார்ப்பையும் அதற்குறிய அடையாளத்தையும் ஏற்படுத்தியது “ஆசிரியரின் மரணம் [the Author of death] என்ற கட்டுரை தான் .

படைப்பு என்பது ஒரு மன நோய் .  ஒரு படைப்பை அவன் படைத்து முடித்ததும் படைப்பாளனும் அதற்கு ஒரு பார்வையாளனாகவே கருத்துப்படுவான் . படைப்பாளனுக்கும் -படைப்புக்கும் வேறு எந்த விதத்திலும் சம்மந்தம் இருக்கத் தேவையில்லை . படைப்பாளன் படைத்ததும் அதிலிருந்து இறந்து விடுகிறன் என  பார்த்  சொன்னார் .

அது புரியாமல் நம்மவர்கள் படைப்பு என்பதை தம்முடனே ஒட்ட வைத்துக் கொண்டு மீள் உணர்ச்சிக்குச் செல்லாமல் அதையே தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் .

இது தெளிவாக “ஆசிரியரின் மரணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இவருடைய  மற்றொரு கட்டுரையான “பிரதியின் இன்பத்தில் [Pleasure of text ] கலை என்பது  எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்த் தெளிவாக விளக்கியுள்ளார் .

குதூகலம் –கொண்டாட்டம் – நெகிழ்வு – இன்பம் – சந்தோஷம் – என்ற ஒரே வகைப்பாட்டியலில் படைப்பானது நிற்க வேண்டும் என்பதை ரோலாண் பார்த் உணர்ந்துகிறார் .

“துன்பியலாக [tragedy ]இருந்தாலும் “இன்பியலாக [Comedy] இருந்தாலும் பிரதியில் இன்பம் என்பது இன்றியமையாதது என விளக்கம் தந்துள்ளார் .

இந்தப் புரிதல் எதுவுமே இல்லாமல் , சிலர் பார்வையாளர்களைச் சலிப்படையச் செய்து விடுகிறார்கள் . அல்லது விரக்தி நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள் .

முறையான பயிற்சி இல்லாமல் , ஓடுகிற ஓட்டத்தில் தங்களுக்குத் தேவையான நாற்காலியைத் தங்களே செய்து கொண்டு அவசரமாக அமர்ந்து கொள்கிறார்கள் .

இப்படியாக நிறுவனத்தின் வழி , கலை என்பது குறைமாதக் குழந்தையாகப் பிறந்து ரசனைக் குறைச்சலை உண்டாக்குகிறது.

நவீன நாடக இயக்குராக நம் சமகாலத்தில் மகத்தான வேலைகளைச் செய்து வரும் முருக பூபதி கூறுகையில் , “நிறுவனத்தில் சிக்கிக் கொண்ட கலைஞர்கள் பூச்சி இனங்களாக இயங்கி வருகிறார்கள் - என்கிறார் .
நாடகத்தில் பயிற்சி எடுத்ததும் சினிமாவில் சாதித்து விடலாம் என அனேகர் நினைத்து திரையில் வெளிச்சத்தில் கூசி நிற்கிறார்கள் .
அபத்தங்கள் நிறைந்த சமாச்சாரங்களை மிக எளிதாய் பார்க்க பழக்கப்படுத்தி விட்டார்கள் .

நிறுவனங்கள் கலைஞர்களை யந்திரமாகச் செயல்பட வைப்பாதால் யந்திரத்தில்  ரசனையை எதிர்பார்ப்பது அறியாமை தான்.

 - சந்திரபால் .

No comments:

Post a Comment