Monday 1 July 2013

விடுதலைப் புலிகளும் வைகோவும் .



இந்தியாவில்  விடுதலைப்புலிகள் இயக்கம் 1991 ஆம் ஆண்டு  தடைசெய்யப்பட்டது. அதை தொடரந்து மீண்டும் 2010 ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதற்குத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.

இது சரிதானா என்பது குறித்து ஆராய ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர்நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு பல்வேறு இடங்களில் விசாரணை செய்து ‘தடை செய்தது சரியே’ என தெரிவித்தது.

இதை எதிர்த்து வைகோ  மற்றும் வழக்குரைஞர்  புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த  தாணு  எனும் பெண்ணால் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் ‘விடுதலைப் புலிகளால் இந்திய தலைவர்களுக்கு  ஆபத்து உள்ளது’ என்று கருதி அந்த இயக்கத்துக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதை ஆரம்பத்திலிருந்தே வைகோ எதிர்த்து வந்தார். கள்ளத்தோணியில் இலங்கை சென்று வந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.

விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு சில இயக்கங்கள் செயல்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ள நிலையில் , பிரபாகரன் இறந்த பிறகும் உயிருடன் உள்ளதாக  ‘உரிய நேரத்தில் வெளி வருவார்’ என்றும்  சொல்லிக்கொண்டிருந்தார்.

இவரது எந்த முயற்சியும் தமிழக மக்களிடம் எடுபடவில்லை. தமிழக மக்கள் விடுதலைப்புலிகள் விஷியத்தில் இவரை நம்பவில்லை. எனவே தான் இன்றும் அந்த விவகாரத்தில் தோற்றுக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment