Saturday 6 July 2013

குழந்தையை கூவி விற்ற பெண்.

“குழந்தை வாங்கலையோ குழந்தை” - இந்த அவலக்குரல் கேட்ட இடம் கிண்டி பேருந்து நிலையம். வறுமையின் காரணமாக இதை செய்ததாக அப்பெண் கூறியுள்ளார்.

குழந்தை பிறந்தவுடன் கணவன் தன்னை கைவிட்டு விட்டதாகவும் குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். குழந்தையை அரசு தொட்டிலில் போட்டிருக்கலாமே என கேட்டதற்கு தனது வறுமை நிலைக்கு விற்றதாக தெரிவித்துள்ளார்.

குழந்தையை அவர் 10,000 ரூபாய்க்கு விற்க முயன்றதாக கூறியுள்ளார். வறுமை கொடியது தான் . ஆனால்,  குழந்தையை அதற்கு விற்க முற்படுவது அறிவு முதிர்ச்சியின்மையை  காட்டுகிறது.

10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்று தனது
வறுமையைப் போக்க நினைத்தது பெரிய கொடுமை.

கோடி பணம் மாடிமனை , வீடு இருந்து என்ன லாபம்? குழந்தை பேசும் மழலை மொழி கேட்பதில்தான் இன்பம் என்று  ஒரு கவிஞர் பாடியுள்ளார். அதை நினைத்துப் பார்க்கவேண்டும் . குழந்தை என்பது நமது தொப்புள் கொடி உறவு. அதன் முகத்தை பார்த்தாலே பசி பறந்திடும். அது நம் வாழ்க்கைக்கு உதவாதே என்று நீங்கள் கேட்கலாம்.

உழைக்க வேண்டும் . குழந்தையைப் படிக்க வைக்க வேணும். அரசு எல்லாவற்றிற்கும் இலவசம் அளித்துவிட்டது. படிப்பு – புத்தகம் – பேருந்து -  காலணி – உடை -  சாப்பாடு என்று இங்கு எல்லாவற்றிற்கும் இலவசம்.  பள்ளிக்கு அனுப்ப வேண்டும் அது மட்டும்தான் பெற்றோர்கள் வேலை, குழந்தை படித்து முடிக்கும் வரை அரசு பார்த்து கொள்ளும்.


அநாதை தாய்க்கு கூட அரசு நிதி உதவி செய்கிறது. நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையை வென்று விடலாம்.

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு” எனும் கண்ணதாசனின் வரிகளை நினைத்து வாழ்க்கையில் வெற்றியடையுங்கள்.

No comments:

Post a Comment