Thursday 11 July 2013

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.



அரசுத் துறையில் பணிபுரிய வரும் ஒவ்வொருவரும் அவரவர் பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தில் தங்களுடைய வாழ்வியல் பின்புலத்தைச் சரிபார்த்து அதில் “குற்றப்பின்னணி எதுவும் இல்லை” என்று சான்றிதழ் பெற்றால் தான் அரசு வேலையில் அமர முடியும். 

இது ஒரு தனி சட்டமாக இருந்து வரும் நிலையில் , இதை சட்டம் பயில்பவர்களும் கையாள வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்டம் பயின்ற மாணவ – மாணவிகள் ஒவ்வொருவரும் காவல்துறையிடம் தங்கள் சான்றிதழ்களை சரிபார்த்த பிறகு தான் ‘பார்கவுன்சில்’ லில்  [வழக்குரைஞர் கழகம்] தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என நேற்று [10.7.2013 .] நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் பார்கவுன்சில்லில் பதிய இருந்த 100க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவ – மாணவிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் .

மறியல் , ஆர்ப்பாட்டம்  , என்று போராட்டம் நடத்தும் போது ஆயிரக் கணக்கான மாணவர்கள் கைதாகி பின் மண்டபங்களில் சிறிது நேரம் தங்க வைத்து விடுவிக்கப்படுவார்கள்.

இம்மாதிரியான போராட்டங்களின் போது மாணவர்களின் மீது பாயும் வழக்குகள் கிரிமினலாக  இருந்தால் அதனால்  அம்மாணவர்கள் அரசு வேலைக்கு தகுதியாகும் போது அவர்களுக்கு சிக்கலை உருவாக்கும்.   

சட்டக்கல்லூரி மாணவர்களே பெரும்பாலான போராட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்கள்.  இனி அவர்கள் மீது கிரிமினல் சம்பந்தமான வழக்குகள் இருந்தால் நீதி மன்றங்களில் வாதாட இதனால் அனுமதி மறுக்கப்படும் சூழல் உருவாகும்.

இன்னும் இந்த உத்தரவு அமலுக்கு வராத நிலையில் , இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதி மன்றத்தில் சட்டம் படிக்கும் மாணவர்கள் வழக்குத் தொடுக்க நேரிடும்.

 - சந்திரபால் .

No comments:

Post a Comment