Tuesday 6 November 2012

பண்டிகை நாட்களில் பயணிகள் அவதி...




தீபாவளி என்றாலே, பட்டாசு புத்தாடை என்பதே நம் ஞாபகத்தில் வந்து நிற்கும்.

நம் சொந்த பந்தங்களைக் காணச் செல்வதே இது போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் தான்.
ஆனால் ஊருக்குச் தெல்வதற்கு, பஸ்ஸோ , ரயிலோ கிடைக்காமல் படும்
அவதிகள் பல பல .

பண்டிகைக் காலங்களிலும், மங்கல நாட்களான விடுமுறை காலங்களிலும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விடுமுறையை அனுபவிக்க, தகுந்த போக்குவரத்து வசதியின்றி பயணிகள் அவதிப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நினைத்த படிப்பைப் படிப்பதற்காக வெளியூர்களில் சென்று படிப்பவர்ளும், படித்த படிப்பிற்கு உள்ளூரில் வேலையில்லாமல் சென்னை போன்ற மாநகரங்களில் பணிபுரிபவர்களும் விடுமுறை நாட்களில் வீடுகளுக்குத் திரும்புவது பெரும் சிரம்மாக இருந்து வருகிறது.

திபாவளி பொங்கல் ரம்ஜான் கிறிஸ்மஸ் போன்ற பெரும் பண்டித்திருநாள்களில், மூன்று மாதங்களுக்கு முனபே முன் பதிவு செய்து கொண்ட பயணிகள் தப்பித்துக் கொள்கிறார்க்கள்.

விடுமுறை அன்று பேருந்துகளோ ரயில்களோ கிடைக்காமல் மற்ற பயணிகள் தவியாய் தவிக்கிறார்கள்.

பக்கத்து மாவட்டங்களுக்குக் கிடைத்த பேருந்துகளில் ஏறிக்கொண்டு, மாறி மாறி பயணிக்கிறார்கள்.  

நெடுந்தூரப் பயணங்களுக்குத் தகுந்த இருக்கை வசதிகள் இல்லாமல், ஆட்டுக் குட்டிகளை ஏற்றிச் செல்லவது போல பண்டிகை காலங்களில் பெரும் நெருக்கடியில் பயணம் செல்கிறார்கள்.

விடுமுறை முடிந்து மீண்டும் திரும்பும் காலங்களிலும், அதே நெருக்கடியைச் பயணிகள் சந்திக்க வேண்டியுள்ளது.

தங்கள் பெற்றோர்களோடும், பிறந்த உறவுகளோடும், ஆனந்தமாகக் கொண்டாடச் செல்பவர்கள் தகுந்த போக்குவரத்து வசதியில்லாமல், சென்னை திருச்சி போன்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தங்கள் லக்கேஜ்களைச் சுமந்து கொண்டு நல்லிரவு நேரங்களிலும் பேருந்துகள் கிடைக்காமல் காத்துக்கிடக்கிறார்கள்.

தகுந்த கட்டணத்தில் முன்பதிவு செய்வதைத் தனியார் பெருந்துகளை இயக்குபவர்கள் விரும்புவதில்லை.

பயணம் செல்லும் நேரத்தில் நேரடியாக வந்து டிக்கட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.

பேருந்துகள் கிடைக்காத கடைசி நேரத்தில், பயணிகள் அவதியுறுவதைச் சாதகமாக்கிக் கொண்டு, தனியார் பெருந்துகளும், குறுகிய ஆம்னி பேருந்துகளும் கூடுதல் கட்டணத்திற்காக பயணிகளைக் கூவிக் கூவி அழைக்கிறார்கள்.

போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும், ஆம்னி பஸ்களில் கூடுதல் டிக்கட் விற்பதை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை.

வருகிற தீபவளிக்குச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப கூடுதல் பேருந்துகளையும், சிறப்பு ரயில்களையும் தமிழக அரசு இயக்க வேண்டுமென்று அரசியல் கட்சிகள் பயணிகளின் கோரிக்கையை முன்வைக்கத் தொடக்கி விட்டனர்.

இயக்கப்படும் ரயில் மற்றும் பேருந்துகள் பண்டிகை காலங்களில் தாமதமின்றி வரவேண்டுமென்றும் இந்தக் கோரிக்கையின் மூலம் வழியுறுத்துகிறார்கள்.

கொண்டாட்டங்களுக்காகவே ஏற்படுத்திக் கொண்ட பண்டிகைகள், இந்த நவீன யுகத்தில் கொண்டாடமலே நம்மை விட்டுக் கடந்து செல்கிறன.

அதற்குப் போக்குவரத்தில் இருக்கும் நெருக்கடிகள் தொலை தூரப் பயணிகளுக்குப் பெரும் சாபமாக இருந்து வருவதை தடுக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்தால் உகந்த்தாக இருக்கும்.

இப்படி ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் போக்குவரத்தில நெருக்கடியில், இருந்து வருவதை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விரைவுப் மற்றும் சொகுசுப் பயணங்கள் இருந்தாலும் சாமாணிகளுக்குத் தகுந்த நேரத்தில் தகுந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவது அரசின் கடமை மட்டுமல்ல அவசியமும் தான் .


2 comments:

  1. காலத்துக்கு ஏற்ற தேவையான பதிவு.

    தாங்கள் கூறுவது உண்மை.

    ReplyDelete
    Replies
    1. முதல் தலைமுறை என்பது சமூகத்தில் முக்கியமான பங்காக இருக்கிறார்கள் . தனாக முட்டி மோதி காயத்தோடு தான் வளர முடிகிறது .

      Delete