Tuesday 6 November 2012

இந்திரா காந்தி நினைவுநாள்



தேசிய ஒருமைப்பாட்டு தினம்…

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று ……   
ஜவகர்லால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி  1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் அவரது சொந்தப் பாதுகாவலர் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் .
பெரோஸ் காந்தி என்பவரை இந்திரா காந்தி திருமணம் செய்து கொண்ட பிறகு இந்திரா பிரியதர்சினி என்ற தன் இயற்பெயரை இந்திரா காந்தி என்று மாற்றிக் கொண்டார்.
இவர் பெயரில் இருக்கும் காந்தி என்பதற்கும் மகாத்தமா காந்தியடிகளுக்கும் எந்தத் தொடரபும் இல்லை.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் பிரதமராக ஜவகர்லால் நேரு பொருப்பேற்றார் . நேருக்கு பிறகு இரணாடாம் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து, குல்சாரிலால் நந்தா பிரதமராகப் பதவி வகித்தார் .
 1966 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் முதல் 1977 மார்ச் 24 வரை இந்திரா காந்தி இந்திய பிரதமராகரப் பணியாற்றினார்.
அதற்கடுத்தாண்டுகளுக்கிடையில் நடை பெற்ற தேர்தல்களில் தோல்வியுற்ற இவர்  1980 ஜனவரி 14 நாள் மீண்டும் பிரதமராகப் பொருப்பேற்றார் .
இந்திரா காந்தி ஒரு சிறந்த அரசியல் தலைவராகவும் மகந்தான சிந்தனையாளாராகவும் உலக அரசியல் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு பிரதம மந்திரியாக இவருக்குக் கிடைக்கக் கூடிய அனைத்து வளங்களையும் – அதிகாரங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பிளவை ஏற்படுத்தி தனக்கென தனிப் பாதையை உருவாக்கினார்.
1971 ஆம் ஆண்டில், கிழக்குப் பாக்கிஸ்தானுக்கும் வங்காளாதேசத்துக்ககுமிடையில் ஏற்பட்ட பெரும் பிரட்ச்சனையில், பாக்கிஸ்தானுக்குப் படைகளை அனுப்பி அதில் வெற்றி பெற்று பாக்கிஸ்தானிலிருந்து வாங்காளாதேசத்தை தனியாகப் பிரித்தார்.
இந்திரா காந்தி தன் அரசியல் வாழ்க்கையில் வெற்றிக்கு இணையாக பல தோல்விகளையும் சந்தித்துள்ளார்.
அவருடைய இரண்டாம் ஆட்சிக் காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டாதாகவே இருந்தது.
இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவராக எதிர்பார்த்த சஞ்ச.ய் காந்தி, தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொ றுங்கியதில் காநமானார்.
இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் சீக்கியர்களின் தீவிரவாதம் ஓங்கிய நிலையில் இருந்தது. இந்தத் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க இந்தியப் படைகளை அவ்வப்போது அனுப்பினார்.
இவர் செய்த இந்தத் தீவிரவாத ஒடுக்க செயல்பாடுகளை இவருடைய முடுவுக்குக் காரணமாக அமைந்தது விட்டது.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சோமெர்வெல்லூரியில் படித்தவர் இந்திரா காந்தி.
ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த ஆண்டுகளில் , அரசியலில் ஈடுபட்டு வந்த பிரோஸ் காந்தி என்ற இளைஞரைச் சந்தித்தார்.
இந்தியாவிற்குத் திரும்பிய போது, இந்திராவும்  – பரோஸ் காந்தியும் காதலர்களாக இருந்தார்கள்.
மகளின்  காதல் உணர்வை தந்தை நேரு விரும்பவில்லை . இவர்களைப் பிரிக்க நேரு மகாத்தமா காந்தியின் உதவியையும் நாடினார் .காதலில் மிகவும் பிடிவாதமாக இருந்த இந்திரா முறைப்படி 1942 ஆம் ஆண்டு பரோஸ் காந்தியைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களிருவரும் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராகவும் ,வெள்ளையனே வெளியேறு போன்ற சுதந்திர போராட்டங்களிலும் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய இரண்டு மகன்கள் பிறந்த ஒரு சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடுகளால் இந்திராவும் பரோலஸ் காந்தியும் பிரிந்து வாழ்ந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பரோஸ் காந்தி , 1960 செப்டம்பரில் மாரடைப்பால் இறந்தார்.
தனது தந்தை தொடங்கி வைத்த  வேளாண்மைத் திட்டங்களை பசுமைப் புரட்டியாக மாற்றிய பெருமை இந்திரா காந்தி சேரும்.
1980 ல் இந்திரா காந்தியின் அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கும்,  இலங்கையில் இருநந்த பிற தமிழ் போராளிகளின் குழுக்களுக்கும் பணம்  - ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்ச்சிகளை அளித்ததென்பது குறிப்பிடத்தக்கது.
மகத்தான அரசியல் வல்லமையில் வலம் வந்த இந்திரா காந்தி தன்னுடைய பாதுகாலர்களாலே சுட்டுக்கொள்ளப்பட்டதென்பது இந்திய தேசத்துக்கு ஏற்பட்ட இழப்பு தான் .
இந்திரா காந்தியின் உடலில் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனையில் 30 க்கும் மேற்பட்ட குண்டுகள் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
தன் தாத்தா மோதிலால் நேருவின் இந்திய சுதந்திராட்டங்களையும், தந்தை ஜவகர்லால்  நேருவின் பட்டறிவையும் அரசியல் நுனுக்கங்களையும் பிள்ளைப் பருவத்திலே நன்கறிந்து அதன் போக்கிலே வளரந்த இந்திரா காந்தியின்  அரசியல் வாழ்க்கை  உலக வரலாற்றில் தனி இடத்தில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
  

No comments:

Post a Comment