Tuesday 6 November 2012

பிரதிபா காவேரி


பிரதிபா காவேரி  கப்பலில் 6 நபர்கள் எப்படி இறந்தார்கள் …?
அதோ நீங்கள் பார்க்கும் கப்பல் எவ்வளவு அழகாக இருக்கிறது ….!
தினம் தினம் சுற்றலா போல சென்னை வாசிகள்  வேடிக்கை பார்க்க குவிந்து நிற்பதைப் பாருங்ககள் .
கண்களுக்கு அருகில் இவ்வளவு பெரிய கப்பலை பார்பது பாக்கியம் தான் .
ஆனால், சென்றவாரம் கரை ஒதுங்கிய இந்தக் கப்பலில் இேருந்து 6 நபர்கள் கடல் குடித்துச் செத்தார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ….
நிலம் புயலில் நிற்க முடியாமல் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், கடந்த ஆகஸ்ட் 31 நாள் சுழல் காற்றில் சுழற்றியடிக்கப்பட்டன .
2 லட்சம் ஹெக்டர் பரப்பளவுக்கு மேல் நெற்பயிற்கள் நிலம் புயலால் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன . பணப்பயிற்கள் பாதிக்கப்பட்டன .
எண்ணிக்கையில் அடங்காத ஏராளமான வீடுகள் அடியோடும், பகுதி பகுதியாகவும் ஒடிந்து விழுந்தன .ஒரு சில மக்களும் இப்புயல் மழையில் இறந்திருக்கிறார்கள் .
தண்ணீர் தேங்கிய தார்சாலைகள் சீரழிந்து, சாலையில் ஒதுங்கி வளர்ந்த மரங்கள் முறிந்து விழுந்தைப் பத்திரிகைகளும், தொகைக்காட்சிகளும் படம் பிடித்துக் காட்டின.
ஒரு வழியாக ,நிலம் புயல்  மாமல்லபுரத்தைக் கடந்து விட்டது என்று, பெருமூச்சு விட்டபோது, புயலால் அடித்து வரப்பட்ட பிரதிபா காவேரி என்ற கப்பல், சென்னை பட்டின பாக்கத்தில் தரை தட்டி நின்றது.
அந்தக் கப்பலில் இருந்து தப்ப முயன்ற போது,31 பேரில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தக் கப்பல் எங்கிருந்து வந்தது …? எதற்காக வந்தது ….? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடினால் பல மர்மங்களை அது உணர்த்துகிறது .
31 வயதுடைய இந்தக் கப்பல் பிரதிபா காவேரி என்ற பெயர் கொண்டாச் சொல்கிறார்கள் .
கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி சென்னைத் துறைமுகத்தை விட்டு கிளம்பிய, இந்தக்  கப்பல் அக்டோபர் 8 தேதியன்று மீண்டும் சென்னைத் துறைமுகம் நோக்கி வந்ததற்கான காரணம் என்ன ….?
31 வருடங்களு்ககுப் பிறகு , அக்டோபர் 2 முதல் கடலை எதிர் கொள்ளும் ஆற்றலை இக்கப்பல் இழந்து விட்டாதால், சென்னத்  துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதென்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் தெரிய வந்துள்ளது .
கிட்டத்தட்ட 1 மாத காலமாக துறைமுகத்துக்கு வெளியே இந்தக் கப்பல் ஏன் நிறுத்தப்பட்டது …..?
இதைக் கண்காணிக்கும் துறைமுக அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் …?
இந்தக் கப்பலில் வேலை செய்த  ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை என்பதும் , கப்பலை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் இல்லையென்பதும் , இந்த பரிதாப விபத்திலிருந்து தெரியவந்துள்ளது .
கப்பலில்  சரியாக உணவு கூட இல்லாமல் , ஊழியர்கள் ஒரு மாத காலம் கப்பில்  தங்கியிருந்ததற்குக் காரணம் என்னவாக இருக்கும் … ?
சரக்கை இறக்கி விட்டு மும்பை சென்ற கப்பல் ஏன் திரும்பி வர வேண்டும் ….?
திரும்பி வந்த கப்பலில் இன்னும் எப்படி எண்ணெய் இருக்கிறது…?
கப்பலை இயக்குவதற்கான டீசல் இல்லை என்ற நிலை ஏன் ஏற்பட்டது…?
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை  இயக்ககுனர் கவுதம் சட்டர்ஜி  தலைமையிலான அதிகாரிகள் , 6 பேர் கடலில் விழுந்து செத்துப் போனதற்குப் பிறகு , இந்தக் கேளவிகளுக்கெல்லாம் விசாரணை நடத்தி விடை தேடுகிறார்கள் .
தரை தட்டிய கப்பலிலிருந்து உயிர் தப்பிய கேப்டன் உட்பட அனைவரும் நடந்த சம்பவங்கள் பற்றித் தெரிவித்து வருகின்றனர் . சென்னை துறைமுக அதிகாரிகள் – கடலோர காவல் படையினர் என கப்பல் நிர்வாகத்தினர் மற்றும் கப்பல் ஏஜன்ட்கள் முதல் , அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் .
இந்த பிரதிபா காவேரி கப்பலைக் கடலுக்குள் இழுத்துச் செல்ல, சிங்கப்பூர் மற்றும் மும்பையிலிருந்து கப்பல் தொழில் நுட்பப் பிரிவிலுள்ள அதிகாரிகள் , ஆரம்பகட்ட மிட்புப் பணிகளை இரண்டு மூன்று நாட்களாக செய்து வருகின்றனர்.
கடற்கரைக்கும், கப்பலுக்குமுள்ள தூரம் எவ்வளவு என்றும் , கடலையின் வேகம் எவ்வளவு என்றும் ,ஆய்வு செய்து வருகின்றர் .
தற்போது தரை தட்டி நிற்கும் கப்பலை நடுக்கடலுக்கு இழுத்துச் செல்ல , ஆந்திர மாநிலம் – காக்கி நாடவிலிருந்து மாளவிகா என்ற இழுவைக் கப்பல் சென்னைக்கு வந்துள்ளது .இந்த ஒரு கப்பல் மட்டும் போதாது என்பதால் , மும்பையிலுருந்து மற்றுமொரு இழுவை கப்பல் வர இருக்கும்  இந்நிலையில் ,
கப்பலை இழுத்துச் செல்ல உயர் நீதி மன்றம் இடைக் காலத் தடை உத்தரவு விதித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ,வானூரைச் சேர்ந்த சங்கர நாராயணன் தாக்கல் செய்த மனுவில் , அவர் சகோதரர் ஆனந்த் என்பவர் ,பிரதிபா காவேரி கப்பலில் பொரியாளராகப் பணியாற்றினார் என்பது தெரிகிறது .
பலியான 6 பேர்களில் ஒருவரான ஆனந்த் , இறப்பதற்கு முன்பு கப்பல் நிறுவனத்துக்கும் கடல் சார் வணிகத்துறை அதிகாரிக்கும் பல முறை மின் அஞ்சல் அனுப்பியுள்ளார் .
ஆனால் இதை கடல்சார் வணிக அதிகாரிகள் ஏற்று கொள்ளமால் இருந்திருக்கிறார்கள் .
ஆனந்தின் வேலைக்கான ஒப்பந்தக் கெடு செப் 17 தேதியில் முடிந்த நிலையில் , சம்பளம் ஏதும் தராமலும் , வெளியே அனுப்பாலும் கப்பல் நிறுவனம் அலட்சியம் காட்டியிறுக்கிறது .
அடிப்படை வசதிகள் கூட இலலாமல் ஒருமாத காலம் இருந்தவர்கள் ,தீடீரென்று ஏற்பட்ட நிலம் புயலால் தப்பிக்க முயன்று அதில் 6 பேர் இறந்திருக்கிறார்கள் .
இதில் இறந்த 6 பேரில் ஒருவரான ஆனந்த்க்கு  25 லட்சம் இடைக்கால இழப்பீடாக பிரதிபா கப்பல் நிறுவனம் வழங்க வேண்டுமென்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
புயல் சம்பவத்தின் போது , பிரதிபா காவேரி கப்பலின் கேப்டன் , சென்னைத் துறைமுக கப்பல் படைக்கு வயர்லஸ் மூலம் பாதுகாப்பு கேட்டிருக்கிறார் பதிவாகிய ஆதாரங்களின் மூலம் தெரிவந்துள்ளது .
ஆனால் , புயல் விபத்தின் போது ,சென்னை கப்பல் படை இதற்கான பாதுகாப்பு முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை என்று பிரதிபா கப்பலின்  கேட்பன் , விசாரணையின் போது கூறியுள்ளார் .
தமிழகத்துக்கே தலைமையிடமாக இருக்கும் சென்னை கப்பல் படையால் செய்ய முடியாத காரியத்தைக் கரையோர மீனவர்கள் செய்திருக்கிறார்கள் .
உயிரை பணையம் வைத்து ராஸஷ அலைகளில் 31 பேரை நவீன வசதிகள் எதுவும் இல்லாமல் காப்பாற்றியுள்ளானர் .
புயலில் இறந்து போன குடும்பங்களுக்குத் தமிழக அரசு என்ன செய்யும் …?
விபத்து ஏற்பட்டதற்குத்  துணைக்கு நின்ற , காரண கர்த்தாக்களை என்ன செய்யும் ….?
விபத்தில் களம் இறங்கிக் காப்பாற்றிய மீனவர்களுக்கு எந்த விதத்தில் மரியாதை செய்யும் …?
வழக்குகள் தொடரும் …. 
 

No comments:

Post a Comment