Wednesday 19 September 2012

இதய நோய்


இயற்கையிலிருந்து மனிதர்கள் விலகும் போதெல்லாம் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த மின்னணு உலக்ததில், மனிதர்களும் யந்திரமாகச் செயல்படத் தொடங்குவதால், அழுத்தங்களின் சுமை பொறுக்க முடியாமல், மனிதர்களின் மெல்லிய இதயம் பழுதடைந்து விடுகிறது.

இதய ரத்தக் குழாய்கள் பாதிப்படையும் போது, இதயத்துக்கு ரத்தம் செல்லாமல் மாரடைப்பு என்ற திடீர் மரணங்கள் ஏற்படுகின்றன.

இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள்  என்று, மருத்துவத்தில் புதிது புதிதாகக் கண்டு பிடிக்கப்படிப்புகள் வந்தாலும், வெவ்வேறு வடிவங்களில் இதய நோயாளிகள் மருந்துச் சீட்டெழுதி, வரிசையில் வந்து நிற்கிறார்கள்.

களைத்துப்போட்டதெல்லாம் கலாச்சாரமாகின்ற இந்த முரண்பட்ட சமூகத்தில் வாழ முடியாமலும், வெள்ளத்தில் விழுந்த எறும்பைப் போல நீந்த முடியாமலும், நிறைவேறாத ஆசைகளால், இதயக் கோளாறுகள் வந்து விடுகிறது.

ஒரு நகர வீதியில் சென்று திரும்பினால் கோடி ரூபாயாக இருந்தாலும், சில மணி நேரங்களில் செலவாகும் ஆடம்பரங்கள் இன்று ஏராளம் வந்து விட்டன.

வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளைச் செய்யும் போது, ஏற்படுகிற கடன் தொல்லைகளால், மனிதர்கள் தனக்குள்ளே அடைபடும் அழுத்தத்தில், இதய துடிப்பின் வேகத்தைக் குறைத்து விடுகிறார்கள்.

தீ பந்தம் கொண்டு எழுதும் பந்த பாசங்களில் ஏற்படும் சிக்கல்களால்,  இதயம் வெந்து விடுகிறது: இதய நோய்கள் வந்து விடுகிறது.

வயது வரம்புகள் மீறிய பிள்ளைகளின் சுதந்திரத்தில் உண்டாகும் சிக்கலைத் தட்டிக் கேட்க முடியாமல், சுமைகள் தாங்கும் இதயம் விரிசலடைகிறது.

இதயப் புண்கள்  அல்லது ஓட்டைகள் ரத்தக் குழாய் அடைப்புமாரடைப்பு என்று ஏற்படும் திடீர் மரணங்கள்தினசரி பத்திரிகைளின் செய்திகள்  போல தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஒரே ஆண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் இதய நோயால் இறந்து விடுகிறார்கள்.  

ஒவ்வொரு ஆண்டும் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  

மன உழைப்பில் மட்டுமே சம்பாதிப்பவர்களுக்கு உடல் கனத்து பக்க விளைவுகள் வீடு தேடி விலாசம் கேட்கிறது.

நீண்ட நேரம் நகராமல் அமர்ந்த இடத்திலே வேலை பார்ப்பதால், உடல் நரம்புகள் அசைவுகளற்று சோர்ந்து விடுகிறது. அது மொத்தமாய் இதயத்தில் வந்து சேர்ந்து விடுகிறது.

எண்ணைய் வடியும் உணவுப்பொருள்கள் மூலம் உடம்பில் கொலும்புச் சக்தி அதிகரிக்கும்போதெல்லாம் அது இதயத்தைப் பாதிக்குமென்று மருத்துவக் கழகம் அறிக்கை எழுதுகிறது. 

அதிகளவு கொழுப்பு சேரும் போது, ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால், இதயத்திற்கு செல்லும் காற்றின் அளவு குறைந்து இதய திசுக்கள் பழுதடைந்து விடுகிறது.

புகைப்பிடித்தல், மது அருந்துதல், போன்ற காரணங்களாலும் இதயத் தமனிகளில் புண்கள் ஏற்பட்டு, இதயத் துடிப்பின் வேகம் குறைகின்றது.

இதயத்தில் இருக்கும் மூன்று ரத்தக் குழாய்களில் ஒன்று பழுதடைந்தால், மருத்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம்.

இதயத்தில் மூன்று ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படும் போது, இதய அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கிறது.

ECG என்கிற மின் இதயத் துடிப்பு வரைவு அறுவைச் சிகிச்சையும், MRI என்கிற இதய காந்த ஒத்ததிரிவு அறுவைச் சிகிச்சையும் மற்றும் மின் ஒலி இதய வரைவு என்கிற மூன்று இதய அறுவை சிகிச்சைகள் இன்று நடைமுறையில் உள்ளன.

காலை விடிந்தது முதல் பரபரப்பான நெருக்கடியில் ஓடிக் கொண்டிருக்கும் மக்கள், இதய நோயிலிருந்து தப்பிக்க நடைப்பயிற்சியிலும் சில உடற்பயிற்சிளிலும், தங்களை இணைந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மாறுபட்ட நேரத்தில் உறங்குவதால் சின்னச் சின்ன அழுத்தங்கள் கூட இதயத்தில் தேங்கி அதன் மெல்லிய படலத்தைக் கிழிக்கிறது.

உடலிலும் மனதிலும் வலி ஏற்படும் போது தான் நம்மவர்கள் யோகாசனங்களைச் செய்யத் தொடங்குகிறார்கள்.

தியானப்பயிற்சிகள் நம் உணர்வுகளை நல்வழிப் படுத்தி, எளிதான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது. இதய நோய்களை தியானப்பயிற்சிகள் தடுத்து நிறுத்துகிறது.  

பறவைகளும், விலங்குகளும் மரடைப்பு போன்ற இதய நோய்களால் இறப்பதில்லை.  

இயற்க்கையோடு இயற்கையாக உறங்கி அலாரம் ஏதும் வைக்காமல் அதிகாலையில் எழுத்து விடுவதால், மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் நிம்மதியாக வாழ்கின்றன.

எளிமையான வழியில், இயற்கையின் விதிகளை மீறாமல் நடந்தால், இதய நோய்களிலிருந்து தப்பிக்கலாம். அதற்காக இப்போதிருந்தே சிந்திக்கலாம்.




   

No comments:

Post a Comment