Wednesday 19 September 2012

நீச்சல்


மழைக்காலம் வந்தாலே குளம் குட்டைகளில் முங்கி நீச்சலடிப்பது கிராமத்தின் மத்தியான நேரங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

கிராமங்களில் பெரும்பாலும், குளத்தில் தான் ஆண்களும் பெண்களும் நீச்சல் பழகியிருப்பார்கள்.

காற்றடைத்த டின்னை இடுப்பில் கட்டிக் கொண்டும், அல்லது கயிற்றைக் கட்டிக் கொண்டும் நீச்சல் பழகுவார்கள்.

தண்ணீரில் மிதக்கும் காய்ந்த சுரக்குடுக்கையைக் கட்டிக் கொண்டும், இருசக்கர வாகன டியூப்களில் காற்றடைத்துக் இடுப்பில் கட்டிக் கொண்டும் நீச்சல் அடித்துப் பழகுவார்கள்.

விடுமுறை நாட்களில், சிறுவர்கள் கூட்டமாகச் சென்று கிணற்றில் குதித்து விளையாடுவதை பெரிதும் விரும்புவார்கள்.

சிறு பிள்ளைகள் கிணற்றில் நீச்சலடிக்கும் போது அவர்களை விரட்டுவதே கிணற்றின் சொந்தக்காரர்களுக்கு ஒரு வேலையாக இருக்கும்.

சிறுவர்கள் உற்சாகமாக நீந்திக்கொண்டு இருக்கும் போது, பின்னால் வந்து கிணற்றுக்குச் சொந்தக்காரர்கள், கிணற்று மேட்டில் கழற்றி வைத்த சட்டை டவுசர்களை எடுத்துக் கொண்டு விரட்டியது, ஒவ்வொரு கிராமத்துச் சிறுவர்களுக்கும் நினைவில் இருக்கும்.

நீச்சலில் தொட்டுப் பிடித்து விளையாடுவது மகிழ்ச்சியைத் தரும்.

கிணற்று உச்சிக்குச் சென்று கத்திக் கொண்டே குதிப்பதை சிறுவர்கள் கொண்டாட்டமாக நினைப்பார்கள்.

உள்நீச்சல் அடித்து நீண்ட நேரம் முங்குவார்கள். அடி மண்ணை எடுத்து வந்து காட்டுவார்கள்.

கைகால்களை அசைக்காமல் மல்லாந்த நிலையில் கிடந்து நீத்துவது தனித்திறமையாக வைத்திருப்பார்கள்.

காசையோ, கல்லையோ கிணற்றுக்குள் போட்டு அதை முங்கி எடுத்து வருவார்கள்.

கிராமங்களில் யாரும் சொல்லித்தரமால் தன் போக்கில் நீச்சல்யடித்துப் பழகுவார்கள்.

ஒவ்வொரு கிராமத்து குளத்திலும் எப்போதோ ஒரு சிறுவன் முழ்கி இறந்த கதை நிச்சயம் இருக்கும்

மழை காலங்களில் ஆழமான குழிகளின் தேக்கத்தில், குதித்து விளையாடும் போது சேற்றில் மாட்டி நீச்சல் தெரிந்திருந்தும் இருந்திருப்பார்கள்.

நகரங்களில் பெருபாலான மக்களுக்கு நீச்சலடி்ககத் தெரிந்திருக்காது.

நீச்சல் குளங்களில் மாத அல்லது வருடக்கண்க்கில் நீச்சலடிக்க விண்ணப்பித்து நிச்சலடிப்பவர்கள் நகரங்களில் இருக்கிறார்கள்.

நீச்சல் குளங்களில் பணம் கட்டி நீச்சல் பழக தொடக்க நிலைக்கு 15 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

முதல் நாள் நீச்சல் பயிற்சியில், 3 அடி அளவு தண்ணீரில்  மூழ்கி கொண்டு காற்றை நீருக்குள் செலுத்தக் கற்றுத் தருகிறார்கள்.

பிரஸ்டோக், பிரிஸ்டெயில், பட்டர்பிளைவ் போன்ற நீச்சல் வகைகளைக் கற்றுத் தருகிறார்கள்.

நீச்சல் போட்டிகளுக்குப் பயிற்சியெடுக்கும் குழந்தைகள் பிரிஸ்டெயில் என்ற வகை நீச்சலைப் பயன்படுத்துகிறார்கள்.

எல்லா கிராமத்திலும் ஒரே வகையான நீச்சலைத் தான் பின்பற்றுகிறார்கள்.

நீச்சல் குளங்களில், கிராமத்து நீச்சலைப்போல் இல்லாமல் தண்ணீருக்கு மேல் இழத்த மூச்சை மீண்டும் தண்ணீருக்குள் விட்டுக் கொண்டே நீந்துவார்கள்.

பன்னிரண்டு வயதில் மாரத்தான் நீச்சலில் கைதேர்ந்த குற்றாலீஸ்வரன், ஆறு கடல் வழிகளைக் கடந்து கின்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நீச்சல் போட்டியும் நடைபெற்று வருகிறது. இந்த உலக அளவிளான நீச்சல்ப்போட்டிகளில் மீன்களைப் போல நீந்துகிறார்கள். அதிநவீன கேமராக்களில் தண்ணீருக்கடியில் இருந்தும் நீச்சலடிப்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.

உடற்பயிற்சிகளில் நீச்சலும் முக்கியமானதாக இருக்கின்றது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக பெரும் பணக்காரர்கள், வீட்டிலே நீச்சல் குளங்களைக் கட்டி வைத்துக் கொள்கிறார்கள்.

திரைப்படங்களில் நீச்சல் குளிங்களில் நீந்தும் பாடல் காட்சிகள் ஏராளம் இருக்கின்றன.

இன்னும் கிராமப்புரங்களில் சிறுவர்களின் கொண்டாட்டங்களில் நீச்சல் என்பது தனிப்பட்ட சந்தோஷமாகவே இருந்து வருகிறது.












No comments:

Post a Comment