Wednesday 14 November 2012

டாஸ்மாக்



டாஸ்மாக் கடைகளில் குப்புற விழுந்து கிடக்கும் குடிமகன்கள்  நினைத்ததை வாங்கிக் குடிக்க முடிவில்லையென ஏங்குக்கிறார்கள் .

பொழுது சாய்ந்ததும் ஊரு ஊருக்கு ஆரம்பிக்கப்பட்ட அரசு பார்களுக்குச் சென்று , தினக்கூலி என்றாலும் , பெரும்பாலும் ,முதல் செலவு செய்வது ஒரு விஸ்கிக்கோ அல்லது பிராந்திக்கோ தான் .

கேட்ட சரக்கு கிடைக்காமல் டூப்பிலிகட் சரக்கை எடுத்து நீட்டும் போது …. “இன்று குடிக்க வேண்டாம் கச்சேரியை நாளை வைத்துக் கொள்ளலாம்என்று திரும்பிப் போக முடியுமா என்ன …!

டூப்பிலிகட் சரக்காக இருந்தாலும் , கிடைத்தத சரக்கை வாங்கிக் கொண்டு போகிற பெருந்தன்மையாவர்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள் .

வேலை நிறுத்தம் மற்றும் டாஸ்மார்க் விடுமுறை நாட்களில்கள்ளத்தனமாக விற்கும் பாட்டில்களுக்கு 
நல்ல வருமானம் கிடைக்கிறது .

டாஸ்மார்க் கடைகளில் விற்கும் சிகரட்டிலிருந்து , வறுத்த கரிமசால் தொடங்கி தண்ணீர் பாக்கட் வரைக்கும் சாதாரண கடையில் விற்கும் விலையை விட நான்கைந்து மடங்கு அதிகமாக இருக்கிறது .

இந்தக் குடிகார தேசத்தில்டாஸ்மார்க் கடைகள் ஏழம் எடுக்க வாய்த்தால் பொருளாதாரத்தில் பெரும் புள்ளியாகி விடுகிறார்கள் .

மதுக் கடைகளின் வருமானம் இந்த மாதம் எத்தனை கோடி என்று, அரசு எண்ணிக் கொண்டு இருக்கும் போது , குடிகாரப் புருஷனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் , ஒரு பொன்னமாளோஅல்லது முனியம்மாளோ , தெரு மொக்கில் நின்று தலைதலையாய் அடித்துக் கொள்வதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும் .

விடிய விடிய தூங்க முடியாமல் குடிகார அப்பனை தாமறிக்க பிள்ளைகள் புலம்பவதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பிருக்கும் .

ஒரு டம்ளர் உள்ளே போனதும் இலவசமாகத் தத்துவம் பேசும் இளவட்டங்களைப் பார்ப்பதில் வியப்பில்லை .
உலகம் முழுக்க குடிகாரர்கள் இருக்கிறார்கள் . ஆனால் கட்டிங் சரக்கை அடித்து விட்டு கட்டிப் பிடித்து உருளும் வித்தகர்கள் நம்மவர்கள் மட்டும் தான் .

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகிறார்கள் என்று மது விலக்கு கோரி , எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் , உண்ணா விரதங்களையும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

போதையில் இல்லாமல் தெளிவில் இருக்கும் போது, ஒரு தவறை செய்யலாமா செய்யக் கூடதா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த நாள் ஓடி விடும் .

ஆனால் , போதையின் உச்சத்தில் இருக்கும் போது , எடுக்கும் முடிவுகள் வேதனையாக இருக்கின்றது .
மது குடித்து விட்டு வண்டி ஓட்டினால் , பிடித்த இடத்திலே ஆயிரக்கணக்கில் அபராதம் போடும் பிரமாதமான சட்டம் ஒழுங்கை கொண்டது நம் அரசியல் சாசனம் .

மதுக்கடைகளின் வாசலில், அத்தனை வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றதே ... அவர்கெல்லாம் குடித்து விட்டு வாகனங்களைத் தள்ளிக் கொண்டா போவார்கள் ... ?போதையில் தள்ளாடிக் கொண்டு தானே போவார்கள் .

அரசு மதுக் கடைகளில் குடித்த மிச்சத்தை அங்கே வாத்தியெடுத்துக் கொள்ளவும் வசதியாக பார்கள் இருக்கும் போது , வீட்டில் சென்று குடிக்க முடியாதவர்கள் பார்களில்  குடித்து விட்டு வண்டியில் போகாமல் பறந்தாபோக முடியும் .

சமீப காலமாகக் குடிப்பழக்கத்திலும் மற்ற போதை பழக்கத்திலும் அடிமையானவர்களுக்கு மாறுவாழ்வு மையங்களில் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்  . அங்கு குழந்தைகள் போல குடிகார்ரகள் சென்று வருகிறார்கள் .

இந்த நிலையில் கேட்ட சரக்கு கிடைக்க வில்லையென்றும் தாறுமாறாக நிலைமைக்கு தக்கபடி விலை ஏறுகிறதென்றும் குடிகாரர்கள் வருத்தப்படுகிறார்கள் .

குடும்ப நலனுக்காகவும் , ஆதரவற்றோருக்காகவும் ஏதோ ஏதேதோ திட்டம் வகுக்கும் அரசு ஒரு சமூதாயமே போதையில் தள்ளாடுவதை உடனடியாக தடுக்க முடியா விட்டாலும் …. படிப்படியாகத்  
தடுக்கலாமே ….

சத்தியம் செய்திகளுக்காக விஜய் முத்துசாமியுடன் சந்திரபால் .


















No comments:

Post a Comment