Wednesday 15 August 2012

எது சுதந்திரம்




உலகம் மாறிவிட்டது.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சுதந்திரம் இருக்கிறது...

ஆனால் அதிகாரம் என்பது, யாருக்கு எவ்வளவு சுதந்திரம் தர வேண்டும் என்பதை அளந்து வைத்திருக்கிறது...

உலகத்தில் எது ஒன்று நடக்க வேண்டுமென்றாலும் அது அதிகாரத்தின் வழி தான் நடக்கிறது...

ஒரு அதிகாரத்துக்கு எந்த அளவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு தகுந்த செயல் தான் நடக்கும்...

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை கொடுக்கிறார்கள்.

கேட்ட விலையைக் கொடுக்க முடியவில்லையென்றால், பின் தள்ளி விடுகிறார்கள்...

பின்தள்ளப் பட்டவர்கள் அப்படியே இருந்து விட்டால் அவர்கள் காலாவதியாகி விடுகிறார்கள்...

நாமெல்லாம் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்...
உண்மையில் சுதந்திரம் கொண்டாடுவதற்கு மட்டும் தானா...?

வாழ்த்துக்களே ஒருவனை வாழ வைத்து விடுவதில்லை...

அவன் வாழ்ந்து காட்டினால் தான் உலகம் எழுந்து நின்று அவனுக்காக் கைதட்டும்...

விழுந்து கிடந்தால் வேடிக்கைப் பார்க்கக் கூட யாருக்கும்
நேரமிருக்காது...

இந்த மின்னணு உலகத்தில் தனக்கான இடம் என்னவென்று தேர்ந்தெடுப்பதில் நாம் தெளிய வேண்டும்...

அதற்கான சுதந்திரத்தை நமக்கு நாமே வழங்க வேண்டும்...
நாளுக்கு நாள் கட்டிச் சுமந்த திறமைக்கு, வாகை சூடும் போது உலகத்தில் நமக்கான சுதந்திரம் நிச்சயம் கிடைக்கும்...

வையத் தலைமை எனக்குத் தா என்று கேட்டான் மகாகவி பாரதீ.அதற்கு தகுதியாகவும் இருந்தான்...
இந்த சுதந்திர தினத்தில், சுதந்திரத்துக்கு நாம் தகுதியானவர்தானா  என்று ஆளுக்கொருமுறை கேட்டுக்கொள்ளலாம்...

எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்...




















No comments:

Post a Comment