Wednesday 29 August 2012

பிச்சைக்காரர்கள்


யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத வரை நமக்குத் தோல்வியில்லை.

ஆனால், நடைமுறையில் யாரையாவது - எதையாவது சார்ந்து தானே வாழக்கையை நகர்த்த வேண்டியிருக்கிறது.

பணம் பதவி காதல் கண்ணீர் - பழங்கதை என்று கடந்து போன வாழ்க்கையிலும் கடக்க முடியாமல் அந்தந்த சூழலுக்குத் தக்கவாறு ஏதோ ஒரு எதிர்பார்பிலே கடைசி நிமிடம் வரை காத்துக் கிடக்கிறோம்.

பிச்சையெடுப்பது என்பது, பணமாகவும் - உணவாகவும் பொருளாகவும் பதவியாகவும் இருக்கும் கால ஓட்டத்தில், இன்னொரு மனிதனினை நம்பி பிழைப்பு நடத்தும் வாழ்க்கையை நாம் உணர முடியும். 

கோடியிலும் லட்சத்திலும் புரண்டு கொண்டு இருப்பவர்கள் மறைமுகமாக பிச்சையெடுக்கிறார்கள்.

அடுத்த நேர சோற்றுக்கே வக்கில்லாதவர்கள் தெருவில் வந்து திறந்தவெளியில் கையேந்தி விடுகிறார்கள்.

ஊனமுற்றவர்கள் மாற்றுத் திறனாளிகளாக உலகத்தைக் கலக்கிய எத்தனையோ சாகசஙகள் இருக்கின்றன.

ஆனால், பெரும்பாலும் ஊனத்தை மட்டுமே காட்டி குரல் தாழ்த்தும் பிச்சைக்கார்களை எந்தப் பேருந்து நிலையத்திலும் பார்க்கலாம்.

கலைக் கூத்தாடிகளின் வடிவத்தில் சாட்டையை முதுகில் மாறி மாறி அடித்துக் கொண்டும் பாட்டுப் பாடி, உடுக்கடித்துக் கொண்டும் பிச்சையெடுக்கிறார்கள்.

கையில் இரும்பு கம்பியைச் சுற்றிக் கொண்டு ரத்தத்தைப் பிழிந்து தன் குழந்தையின் வயிற்றில் சொட்டுச் சொட்டாய் வடியவிட்டு எல்லோரையும் அதைப் பார்க்க வைத்தும் பிச்சையெடுக்கிறார்கள்.

பூகம்பம்பத்தால் பாதிக்கப்பட்ட வடமாநிலத்து மக்கள் தங்கள் சோகத்தைத துண்டுச் சீட்டாக தமிழில் எழுதி வைத்துக் கொண்டு பிச்சையெடுக்கிறார்கள்.

குழந்தையைச் சுமந்து கொண்டு பரிதாபத்தோடு பெண்கள் கெஞ்சுகிறார்கள்.

அழுக்குக் குழந்தைகள் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டே காலில் விழுந்து கட்டிக்கொண்டு நம் ஒதுங்கினாலும் விடாமல் விரட்டுகிறார்கள்.

பணத்தையும் பெட்டியையும் தொலைத்து விட்டதாகவும் திரும்ப ஊருக்குப் போகக் கூட காசு இல்லையென்று இளைய வயது கொண்டவர்கள் 50 ரூபாயில் இருந்து 100, 200 வரை கேட்டு வாங்கி, பக்கத்துக் கடையில் சிகரட் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பேருந்து நிறுத்தத்திலோ அல்லது பூங்காக்களிலோ காதலரிடம் பிடிவாதமாக பிச்சை கேட்டு எப்டியும் காசு வாங்கிவிடுவார்கள்.

தெருக்களில் தினமும் வந்து பழக்கமானவர்களாக வீடு வீடாகச் சென்று உணவு வாங்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

திருநங்கைகள் என்றழைக்கப்படும் மூன்றாம் பாலின மனிதர்கள் பல இடங்களில் தனியுரிமை கேட்டுப் போராடி வருகிறார்கள்.

பல சமூக முற்போக்கான செயல்பாடுகளையும் நிகழ்த்துக் கலைகளையும் நடத்துகிறார்கள்.

அதே நேரத்தில் திருநங்கைகளில் சிலர், பெரும் அமைப்புகளிலும் ஹோட்டல் மற்றும் நகைக் கடைகளிலும், அடாவடியாக பிச்சை கேட்டு மிரட்டவும் செய்கிறார்கள். பிச்சை கேட்டு தராதவர்களுக்கு சாபமிடுகிறார்கள்.

*அழுக்குத் துணியைக் கிழித்துக் கட்டிக் கொண்டு பல நாட்களாக வெட்படாமல் சிக்கு பிடித்த தலை முடியோடும், சவரம் செய்யப்படாத தாடியோடும் பைத்தியக்காரர்கள் பஸ் டாப்பின் கம்பத்தில் சாய்ந்து கொண்டு பொல்லாத வார்த்தைகளில் புலம்பிக் கொண்டு இருப்பார்கள்.

*இந்தப் பைத்தியக்கார்கள் டீக்கடைகயின் முன்னால் சென்று நின்றாலே கையில் டீ ஆற்றிக் கொடுப்பதை நாம் பார்க்க முடியும்.

வயதானவர்கள் ஊனமுற்றவர்கள் பார்வையற்றவர்கள் சாலையோரங்களில் சுறுண்டு படுத்திருக்கும் போது சில அறக்கட்டளைகளும், சுய உதவிக் குழுக்களும் உணவுப் பொட்டலங்களை அவர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தின், கோயமுத்தூர் மாவட்டத்தில் ஏற்படுத்தப்ட்ட பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு சங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்தது.


இச்சஙகத்தின் மூலமாக, பிச்சைக்காரர்கள் மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு முடி வெட்டி சவரம் செய்யப்பட்டது. சோப்பு ஷாம்பூ அளிக்கப்பட்டு குளிக்க செய்து புத்தாடைகள் அளிக்கப்பட்டது. சுட சுட உணவு அளிக்கப்பட்டு, மன நல கவுன்சல்லிங் அளிக்கப்பட்டது.

அதன்படி ஒவ்வொருவருக்கும் பிச்சை எடுக்காமல் உழைத்து வாழ வழி செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டன.

அரசு நாடளுமன்றங்களின் சட்டத்திலும் திட்டத்திலும் பிச்சைக்காரர்களுக்கென்று ஏதாவது வகுக்க வேண்டும்.

உழைக்கத் தெம்பு இருந்தும் பிச்சையெடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

மனநோயாளிக்கு எந்தக் காப்பகம் எங்கிருக்கிறதென்று எப்படித் தெரியும்…?

மருத்துவ மனைகளுக்கு தெருப்புழுதியில் மணல் அள்ளித் திண்ணும் பைத்தியக்காரர்கள் தங்களாக எப்படி போக முடியும்....?

அதிகாரத்தில் இருப்பவர்கள் பணத்தில் மிதப்பவர்கள் மனிதர்களில் இப்படி வாழ்வின் கடை நிலையில் இருப்பவர்களுக்கு உதவினால் நாளைய சமூகம் நலமாக இருக்கும்.









No comments:

Post a Comment