Monday 25 June 2012

மௌனத்தின் அதிர்வுகள்


மௌனத்தின் அதிர்வுகள்
...........................................................................................................
மௌனத்தின் அதிர்வுகளில்
நான் செவிடாகும் போதெல்லாம்
பொங்கும் துளிகளில் கண்கள் பார்வை இழக்கும்

கைகால் முகமெல்லாம்
சுமையாகக் கனக்கும்

உலகமே
திறந்த வெளிச்சிறையா இருக்கும்

ஞாபத்தீயில் நினைவுகள்
யாகம் நடத்தும்

கண்கள் உதிர்ந்து
எதற்காகவோ யாசகம் கேட்கும்

இரவும் பகலும்
விஸம் சமைத்து விருந்து படைக்கும்

ஆகாரம் செல்லாமல்
நாளாக உடம்பு இழைக்கும்

மொழியிழந்து
கழுத்தடைக்கும்

வார்த்தைகள் எல்லாம்
காற்றாகப் பிறக்கும்

கடந்த காலம்
சுற்றி வளைக்கும்

நிகழந்த எதையும்
இதயம் நம்ப மறுக்கும்

தத்துவம் தருணம்
நெஞ்சைக் கிழிக்கும்

கண்டது கேட்டது
பல்லை இழிக்கும்

யார் நெஞ்சைத் தட்டினாலும்
இருதயம் கதைகள் கக்கும்

கழுகுகளின் இறகசைப்பில்
புறாக்குஞ்சுகளின் அடி நெஞ்சில்
அச்சம் கப்பும்

ஓநாய்கள் கூட்டத்து நடுவில்
வரிப்புலி ஒன்று மண்ணைக் கவ்வும்

தவறுகள் பிரமாதமானவை
அவமானம் உன்னதமானவை
தோல்விகள் அற்புதமானவை
சூழ்நிலை தீர்மானம் தந்தவை.

No comments:

Post a Comment