Monday 25 June 2012

நிலாவைக் கிழித்த முட்டாள் சிறுக்கி

நிலாவைக் கிழித்த முட்டாள் சிறுக்கி.....

ஒரு பரம்பரை இடைவெளியின் நிர்பந்த பந்தத்தில் வளர்ந்த கதிதான் உலகத்தின் எலும்புகளைச் சடசடவென முறித்துக் கொண்டே ஒடிக்கிறது.

தேவதைகளும் - தூதர்களும் குகைவாசல் வழி வந்து நிற்கும் போதெல்லாம் அதற்காக வசைபா இசைக்க இலக்கணம் எழுதி அதில் ஒற்றுப் பிழை கண்டு பிடித்துக் கொண்டு இருந்தார்கள்.

இருதயப் பியோனோவில் மீட்டும் சங்கதிகள் கதை சொல்லிகளுக்கு இரைச்சலாகவே பட்டது.

னிமையை உரித்துத் தின்ற வெறுமையின் உதடுகளில் விரிந்த பாலைவனங்களில் ஈரம் தேடி அலைந்த வியர்வையின் பிசுபிசுப்போடு கைகால் முகத்தைச் சிலுவையாக்கி அரைந்து கொண்டதும் ஞாபகம் வரும்.

கனவுகளில் வளர்ந்த தொட்டாச் சிணுங்கிகளுக்குத் தீணியிடத் திரணியில்லாமல் சைவப் பிரியமாகத் திரிந்த தருண மடிப்புகள் ரத்தக் காட்டேரியின் உடலில் கூடுபாய்ந்து நகர்கிறது.

ஒரு கருக்கலின் விளிம்பில் தெருவில் விதைத்த கவிதைகளைப் பொருக்கிக் கொண்டே தெருவில் ஒரு பைத்தியக்காரன் வீணை வாசிக்கிறான் என்பது மிகத் தெளிவாகும்.

ஓநாய்களின் புணர்வில் எழுதிய இல்லறம் கொலைக் குறிப்புக்கான பீட பூமியை நக்குவதும் சாதாரணம்.
பேய்கள் பதுமைகளாக மாறுவதை தைல மரத்தடிநிழலில் அங்கு வந்திருந்த சதாக்கள் அறிந்திருந்தார்கள்.

அந்த நேரம் கவிதா புத்திரர்கள் தங்கள் இருதயங்களுக்குப் பெட்ரோல் டீசல் நிரப்ப வேண்டியிருந்தது.

தூக்க மறதிகளின் ஒற்றையடிப்பாதையில் திசைகள் அற்று அலையும் மாறாட்டத்தில் அனுதாபங்கள் கவ்வும் தகனத்தோடு விட்டில் பூச்சிகளின் நரம்பைக் கோர்த்துக் கொண்டு சூரியோதையத்தின் அஸ்தமனத்தைப் பார்த்து விட நினைந்தார்கள்.

இரவைத் தின்ற மிச்சத்தில் நிலாவைக் கிழித்த முட்டாள் சிறுக்கி கல்குதிரையின் மீதேறி விரைகிறாள் என்ற ரகசியம் அனாதிக் காலத்தில் புலநுணரும்.

அறிவிலிகள் என்று பிரகடனப்படுத்தும் குள்ளநரிகள் தங்கள் கூத்து நாட்களில் கூலாங்கற்களைப் பொறுக்கிக் குளிர் காய்ந்தார்கள்.

குமட்டல்களின் மொழி பெயர்ப்புகள் தத்துவங்களாக அச்சேறும் மைக்ரோ வினாடிகளில் வந்தேரிகள் அகதியானார்கள்........

அவர்களோடு ........... அ வ னு ம் ..........

No comments:

Post a Comment