Monday 25 June 2012

வரமா ? சாபமா ?

சினிமா
தமிழகத்துக்கு வரமா ? சாபமா ?

தேசிய அளவில் முன்னணிப் படத்தயாரிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் தமிழ் சினிமாவின் பின்புலம் என்ன ?

வருடத்திற்கு 200 க்கும் அதிமான படங்கள் ரிலீஸ் ஆகிறதே!

அது எப்படி நடக்கிறது ?

வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருடைய விருப்பமும் தமிழ் சினிமாவில் எப்படி சாத்தியமாடைகிறது ?

ஊடகங்கள் அனைத்தும் சினிமாவை முன்னிருத்தியே எதற்காகப் பயணக்க வேண்டும் ?

அதற்கான காரணமும் காரியமும் என்ன ?

சூப்பர் ஹிட் ஹீரோக்களின் பேட்டிகளும், இயக்குனர்களின் தம்பட்டங்களும் தொலைக்காட்சிச் சேனல்களில் சூடு பிடிக்கிறதே!

இதை எப்படிச் செய்ய முடிகிறது ?

வேடிக்கை காண்பித்தவர்கள் எல்லாம், தலைமையில் அமர்ந்ததற்க்கான களம் தமிழகத்தில் எப்படி வந்தது ?

போஸ்டர்களிலும், பேனர்களிலும் டாப்டன் ஹீரோக்களின் சிரித்த முகம் அச்சிடப்பட்டு, அதில் ரசிகர்கள் உடன் நிற்கும் போக்கு, சமிபகாலமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

‘தலைவரு படம் ரிலீஸப்ப அளப்பரை மட்டும் பாரு மாப்புள’... என்று நடிகர்களின் போஸ்டர்களுக்குப் பாலபிஷேகம் செய்து படுஉற்சாகமாகக் கைதட்டுகிறார்கள் இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள்.

ஏதோ ஒரு படத்தில் வந்த நடிகரின் ஸ்டெயிலில் தலைமுடியை அலங்கோலமாக வெட்டிக் கொண்டும், டீசர்ட்டுகளில் பயங்கரமான ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டும், ரசிகர் மன்றங்களில் உறுப்பிளர்களாக இருப்பதில் பெருமைப்படுகிறார்கள்.

தங்களுக்குப் பிடித்தமான நடிகருக்கு சிலர் ரத்தத்திலும் கடிதம் எழுதுகிறார்கள்.

நடிகைகளைத் தேவதைகளாகவும், அவதாரப் புருஷர்களாகவும் நினைத்துக் கொண்டு, கோவில் கட்டிக் கும்பிடுகிறார்கள்.

சினிமா வசனங்களைப் பயன்படுத்தியே நண்பர்களைக் கிண்டலடிப்பதும், பஞ்சு டயலாக் போசுவதும் இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் இயல்பாக இருக்கிறது.

தற்போது வெளியான திரைப்படத்தை வைத்துக் கொண்டு, எந்தத் தரத்தில் - எந்த மாடலில் துணிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது ஜவுளிக் கடைகளுக்கு நன்றாகவே தெரியும்.

மேலாடையின்றி இறுக்கமாகப் பெண்கள் உடையணிந்துவரும் பழக்கத்தை, இன்றைய தமிழ் சினிமா எளிதாகச் சொல்லித் தந்திருக்கிறது.

எந்த மனநிலையில் இருந்தாலும், அதற்கேற்ற ஒரு பிடித்தமான பாடல் சூடாகக் வந்து உதடுகள் முனுமுனுக்கிறது.



ஒரே விதமான படங்களைப் பார்த்து சலிப்பு தட்டும் சூழலில்,

பார்வையாளக்குப் புதிய ட்ரெண்டை சில படங்கள் தொடங்கி வைத்து விடுகிறன.

ஒரே நேரத்தில் அனேக செல்போன்களின் ரிங்டோன்கள் ஒரு குறிப்பிட்ட பாடலாகவே கொஞ்ச நாட்களுக்கு இருக்கிறது.



தமிழ் சினிமாவின் கதை மையமும் அதன் பின்னணியும் :

கதைக்காகக் கதாப்பாத்திரங்களை அமைத்து இயக்கும் நிலை மாறி,

பெரும்பாலும், ஹீரோக்களை மையப்படுத்தியே கதையமைக்கும் நிலை இன்றைய தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது.

நல்ல லாபம் அடைந்த ஹீரோக்கள் சொந்தமாக படம் பண்ணுவது என்று, டோட்டலாக விழுந்து விட்டு மூச்சு விடுகிறார்கள்.

ஒரு சிலப் படங்களைத் தவிர தமிழ் சினிமாவில், காட்சித் திணிப்புகளால் கற்பனையில் வறட்சி ஏற்பட்டு விட்டது.

காட்சியமைப்புகளில், ஏளனப்படுத்தும் நகைச்சுவைகள் ஓரளவிற்க்குப் பார்வையாளனை ஆறுதல் படுத்துகிறது.

அரிவாள் கலாச்சரமும், போதைப் பொருள் மயக்கங்களும், அதை ஒட்டியே குத்து –கொலை என்று, எங்கோ ஒரு முலையில் எப்போது நடந்தாலும் அதுவே எதார்த்தம் என்று கதையின் இறுதிக் காட்சிகள் வங்கொலையாக முடிகிறது.

அப்போதுதான் படத்தில் ஒரு பீல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் தெரிக்கும் அதீதக் காட்சிகள் ஏற்கொள்ள முடியாத வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது தமிழ் சினிமாவில்.

தமிழ் சினிமாவில், சென்சார் போர்டு என்பது, அதிகாரத்தின் கிழ் வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

துணிச்சலாகவும், சவாலாகவும் நாட்டு நடப்புகளைப் பிரதி

பலிக்க விடாமல் தடுக்கும் இந்தச் சென்சார் துறை, கவர்ச்சியையும் – தனிமனித ஒழுக்கத்தையும் தட்டிக்கேட்கத் தவறிவிடுகிறது.

தமிழ் சினிமா கற்றுத்தரும் மாடல் கலாச்சாரம் அதிகமான விவாகரத்துகளை ஏற்படுத்திவிட்டது குறித்துக்கொளள வேண்டிய ஒன்று தான்.

சினிமாச் செய்திகளைக் கொட்டிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிச் சேனல்களைப் பார்த்துக் கொண்டே தமிழ் மக்கள் மனதளவில், சப்பானியாக இருந்து விடுகிறார்கள்.

ஒட்டு மொத்த கலைகளையும் அதன் பொழுது போக்கையும் ஆக்கிரமித்துவிட்ட சினிமாவின் பலம் வேறெந்தப் பக்கத்திலும் திரும்பவிடாமல், மனிதர்களின் சுருங்கிப் போன் வாழ்கையின் வடிகாலாக இருக்கிறது.

அதனால் தான் சின்னச் சின்ன அதிர்வுகளைக் கூட தாங்க முடியாமல் தற்கொலைகள் பெருகி வருகிறது.

உறவுகள் அறுந்து தனித் தனியாகத் துண்டித்துக் கிடக்கின்றன.

ஊடங்கங்களில், சினிமாவுக்கான இடம் முதன்மையாக இருக்கக் காரணம் உணர்வுகளின் கவனஈர்ப்புதான்.

தலைகால் புரியாத இளமை பருவத்தில் சினிமாவைப் பார்த்தே, பாலியல் சிக்கலில் முட்டாள் தனமாக மூழ்கி விடுகிறார்கள் இன்றைய இளய தலைமுறைகள்.

பத்திரிகையின் அட்டைப்படங்களில் ஏதாவது ஒரு நடிகை சிரித்துக் கொணடு இருப்பது வழக்கமாகிவிட்டது.

சினிமா கிசுகிசுகள் பாலியல் உணர்வைத் தூண்வதாக இருப்பதால்

வாசகர்களிடம் பெரும் வரவேற்ப்பைப் பெறுகிறது.

இன்றைய பெரும்பாலான சினிமாவின் கதைமையம், கவர்ச்சியில் மயங்கிக் கிடக்கிறது.

அதற்காக, அதிநவீன டிஜிட்டல் கேமராக்களும் மேற்கத்திய இசை மரபைத் தழுவிய தாளமும் உடன் வருகிறது.

நேரடியாக பாலியல் கிளர்ச்சி தூண்டும் பாடல்கள் குத்துப் பாட்டு என்ற பெயரில் துல்லள் இசையாக வருகிறது.

அதில், ஒட்டுத் துணியை உடுத்திக் கொண்டு இடுப்பையும் மார்பகத்தையும் குலுக்கிக் கொண்டு ஆடுவதற்குத், தனிப்பட்ட முறையில் கவர்ச்சி நடிகைகள் தயாராகிவிட்டது, தமிழ் சினிமாவில் சமிபகாலமாக அதிகரித்து வருகிறது.

ஒரு குடும்பத்தில் அக்காள் - தங்கைகளோடும் பெற்றோர்களோடும் இந்தக் கவர்ச்சி பாடல்களைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொள்ளும் அபத்தம் தமிழ் சினிமாவுக்கு நேர்ந்து விட்டது.

18 வயதிலிருந்து 30 வயது வரை இருக்கும் பார்வையாளர்களை நோக்கியே படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள்.

கமர்ஷியல் என்று தனிமனித ஒழுக்கத்தைக் கொச்சைப் படுத்தும் நடன அமைப்புகள் கொசுக்களைப் போல பெருகிவிட்டது.

வெடிகுண்டுகள் இல்லாத, மன அழுத்தம் ஏற்படுத்தாத சாதாரண எதார்த்தபதிவுகளோடு, தேவைக்கேற்ற கற்பனையில் உருவாகும் படங்களும் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

அந்தப் பட்டியலில், அழகி – ஆட்டோகிராப் – மொழி – வெயில் – பசங்க - வாகை சூடவா ஆகியபடங்கள் எதார்த்த தளத்தில் படம்பிடிக்கப்பட்டு, கற்பனைகள் தேவைப்படு்ம் அளவுக்கும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

பார்வையாளன் இம்மாதிரியான திரைப்படங்களில், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டிருக்கிறது.

இந்தியன் என்கிற திரைப்படம், அரசு ஊழியர்களின் லஞ்ச ஊழலைத் எதிர்த்த மாபெரும் எழுச்சியாக, தமிழ் சினிமாவில் வந்து மகத்தான ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

நல்ல பாடல் வரிகளையும், அழகான காட்சியமைப்பைக் கொண்டு, மீண்டு எழுந்து நிற்கச் செய்யும் கதை மையத்தோடு தமிழ் சினிமாக்கள் எப்போதவது வெளிவருவதும், அதற்கான அங்கிகாரங்கள் குறைந்து விடுவதும் கசப்பான உண்மைதான்.

உலகத்தின் ஒட்டு மொத்த கலையையும் – அறிவியலையும் உள்வாங்கிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டிருக்கும் ஊடகத்தில் முதன்மையானது இந்தச் சினிமாதான்.

ஒரு ட்ரெண்டை மாற்றுவது இயக்குனர்களின் கையில் இருக்கிறது.

நல்ல பதிவுகளை மட்டும் திரை உலகத்தில் பதிவு செய்யும் போக்கை இயக்குனர்கள் கொண்டு வரவேண்டும்.

தனிமனிதக் கலாச்சார ஒழுகத்துக்கும், நிறைவான ஆனந்தத்துக்கும் இனிவரும் தமிழ் சினிமாக்கள் இடம் அளிக்க வேண்டும்.

எப்போது ஒரு கலை அந்தச் சமூகத்தின் ஆணிவேரோடு சேர்த்துப் பின்னப்படுகிறதோ அப்போது தான் நிலைத்து நிற்கிறது.

கதை கேட்கும் மரபில் இருந்து கூத்து மற்றும் நாடக சபாக்களின் வழி வந்த தமிழ் சினிமா மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து விட்டது.

தமிழ் சினிமாவில் இயங்கும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் தமிழ் கலாச்சாரத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும்.

இனிவரும் தலைமுறைகளுக்கு, முன்மாதிரியான நிகழ்வுகளைப் தமிழ் சினிமாவில் பதிவு செய்து வைக்க வேண்டும்.

ஒரே இரவில் கர்ப்பச் சுமையை இறக்கி வைத்து விட்டு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிவிட முடியாது.

தரமான ஒத்திகைகளால் தேர்ந்த நடிப்போடு, செரிவான கதை முடிச்சுகளை அவிழ்க்கும் தமிழ் சினிமாக்களே சீரழியும் கலாச்சாரத்தைச் செம்மைப்படுத்த முடியும்.

அன்றாட வாழ்க்கையிலிருந்து தான் சினிமா எடுக்கப்படுகிறதா ?

இல்லை,

சினிமாவை வைத்துதான் அன்றாட வாழ்க்கை நடக்கிறதா ?

ஒரு தமிழன் அவன் அன்றாட வாழ்க்கையில், ஏதாவது ஒரு தருணத்தில் சினிமாவைச் சந்திகிகிறான்.

அந்தச் சினிமா அவன் வாழ்க்கையை மேன்படுத்துகிறதா ? அல்லது இல்லாத மாயைக்குள் தள்ளுகிறதா ?

எந்த அளவிற்கு சினிமாவை ஒருவன் தன் வாழ்க்கைக்குள் ஊடுருவ அனுமதிக்கிறான் ?

அல்லது,

இது தான் என் வரையறை என்று தீர்மானிக்கிறானா ?

எப்படி இருந்தாலும்,

தன் வாழ்க்கையை முடிவு செய்ய வேண்டியது அவரவர் ரசனையைப் பொருத்த விஷியம் தான்.

No comments:

Post a Comment