Monday 25 June 2012

அழகியல்

அழகியல்....

[முதியோர் இல்லம்]

முதியோர் இல்லம் பற்றிய கருத்தியல் ஹைக்கூக் கவிதைகளில் நகைச்சுவையாக இருப்பது வழக்கமாகப்

போய்விட்டடது. பிள்ளைகள் பெற்றோர்க்குச் செய்யும் கோரம் அதில் இழையோடுகிறது. இந்தப் பின்நவினத்துவக்

காலப் பெருவெளியில் [post modern period] இந்த நிலைப்பாடு மாற்றத்துக்குள்ளதாக இருக்கிறது. வளர்ந்த மேலை நாடுகளில் வாழ்வியலின் சொர்க்கமாக முதியோர் இல்லங்கள் இருப்பதை நாம் உணர்வது இனிவரும் நூற்றாண்டுகளின் தேவைக்கு அவசியமாக இருக்கும். வாழ்வியலின் மர்மத்தைக் கடக்க முடியாமல் நரை கொண்ட வயதின் நடுங்கும் பயணத்தில் புன்னகையோடு நடந்து பழக காப்பகம் துணை புரிகிறது.

இந்த மின்னணு உலகத்தில் பட்டம் படித்து இரண்டாம் கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் இரண்டாம் தலைமுறைகள்

தொலைதூரத்துக்குத் துரிதமாகச் சென்று விடுகிறார்கள். திருமணத் தம்பதிகள் தன் கணவன் பொருட்டோ, மனைவியின்

பொருட்டோ, மொழி - இனம் - வட்டாரம் - கடந்த இடப்பெயர்வில் தங்கள் வாழ்வுக்கான இருப்பியலைத் தகவமைத்துக்
கொள்கிறார்கள்.

தனிமையில் நினைவுகளையும், பழைய புத்தகங்களையும் அசைபோட்டுக் கொண்டு பெற்றோர்கள் மீண்டும் குழந்தைகள்

ஆகிறார்கள். செரிக்கக் கூடிய உணவு - சின்னச் சின்ன அவஸ்தைகளுக்கு அருகிலே மருத்துவமனை - இயற்கையின்

ரம்மியக்கொடை - பழுத்த வயோதிகக் கலந்துரையாடல்கள் - அன்பு கனிந்த உபசரிப்பு - தடுக்கி விழுந்தால் கரம் கொடுக்க

இளம் செவிலித்தாய்கள் எல்லாம் நிறைந்த சொர்க்கமான காப்பகங்களில் பல லட்சங்களைக் கட்டி முன் பதிவு செய்ய

இப்போதே அனேகர் தயாராக இருக்கிறார்கள்.

நடைதளர்வுக்கேற்ப, பாதையோரங்களில் பொருத்தப்பட்ட நீண்ட குழாய் பைப்புகள் - நூலகம் மற்றும் வார மாத இதழ் -

உலக அனுபவம் பகிர்ந்து கொள்ள பழைய நண்பர்கள் - குளிக்க, மழலையாக உணவூட்ட என்று மனிதர்களின்

தேவைக்காக காப்பகங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எதிர் காலத்தில் இது ஒரு சிறப்பான வணிகமாக இருப்பதிலும்

ஆச்சர்சமில்லை. ஆனால் குப்பனையும், பண்டிதனையும் ஒருங்கே இணைப்பதில் சிரமம் இருந்தாலும், ஒரு வித சகிப்புத்

தன்மையோடு நிர்வாகம் செயல்பட்டால் உகந்ததாக இருக்கும்.

துள்ளிக் குதித்து இரைச்சல் கடந்து கரை ஒதுங்கும் அலையில் நுரையாக அமிழ்ந்து கரைவது அலாதியான அழகுதான்.

முதியோர் இல்லம் அழகியலின் தேவை தான்......

No comments:

Post a Comment