Monday 25 June 2012

மேதினம்


மேதினம்

கொண்டாடுங்கள்
கொண்டாடுங்கள்
மேதினத்தை இன்று மட்டும்...

கற்களோடும் கற்றுத் தீ யோடும்
விஞ்ஞானம் பழகியவன்
கை கால் முகத்தை

கொண்டாடுங்கள்
கொண்டாடுங்கள்
மேதினத்தை இன்று மட்டும்...

சாலையோரப் புழுதியில்
சப்பானி ஒருவன்
புத்தகம் விற்கிறான்
அவன் நெற்றித் துளிகளை மறந்து விட்டு

கொண்டாடுங்கள்
கொண்டாடுங்கள்
மேதினத்தை இன்று மட்டும்...

"அப்பானி"களும்
"பில்கேட்ஸ்களும்"
பெருவெளிச்சந்தையில்
பேரம் பேசும்போது
சாவடிகளும் பிளட்பாரங்களும்
குடித்தனம் நடத்தும்
கூத்து நாட்களை மறந்து விட்டு

கொண்டாடுங்கள்
கொண்டாடுங்கள்
மேதினத்தை இன்று மட்டும்...

குட்டைப் பாவாடைகளும்
கைக்குட்டையில் தரித்து வந்த
இரட்டைக் கச்சைகளுக்கு மத்தியில்
"கெமிஸ்ரி" இருக்கிறதா? - என்று
கலப்பட தேவதைகள்
ஏதேதோ கேட்டும் போது
பாவாடைச் சிறுமிகளும்
வீதி உலா வருகிறார்கள்
அதை மறந்து விட்டுக்

கொண்டாடுங்கள்
கொண்டாடுங்கள்
மேதினத்தை இன்று மட்டும்

அந்த மேல் நாட்டுத் தாடிக் காரனை
மறந்து விட்டு
கொண்டாடுங்கள்
கொண்டாடுங்கள்
மேதினத்தை இன்று மட்டும்...

காரல் மார்க்ஸ்க்கு
வீட்டுக்குப் பொருளாதாரமே
வீதிக்கு வந்தாலும்
மரணமே வாசல் கதவு தட்டினாலும்
தனக்கு
எந்த நாட்டிலும் குடியுரிமை மறுக்கப்பட்டாலும்
தத்துவம் சொன்னான்
அதில் பக்குவம் சொன்னான்
அவனை மறந்து விட்டு

கொண்டாடுங்கள்
கொண்டாடுங்கள்
மேதினத்தை இன்று மட்டும்...

விளிம்பு மனிதன்
வெள்ளத்தில் நிச்சலடிக்கிறான்
கொடிகட்டிப் பறக்கும்
பெரும் புள்ளிகளே
உங்கள் அடி நுனியை மறந்து விடுங்கள்
இலை நுனியைக் கூட
கிள்ளிப் போடாதீர்கள்
ஆமாம்
விளிம்பு மனிதன்
வெள்ளத்தில் நீச்சலடிக்கிறான்

விளம்பரத்திற்காகவும்
உங்கள் முரியாதைக்காகவும் மட்டும்

கொண்டாடுங்கள்
கொண்டாடுங்கள்
மேதினத்தை இன்று மட்டும்...

உங்கள் கொண்டாட்டத்தில் கலந்து
உதடு சப்பியவனுக்கு
விடிந்தால்
நிச்சயம் பட்டினிச் சாவுதான்
அதனால் என்ன

கொண்டாடுங்கள்
கொண்டாடுங்கள்
மேதினத்தை இன்று மட்டும்...

சளுகைகள்
நலத்திட்டங்கள் எனறு
திருவோடு தேடிப் பிச்சை போடுவதில்
இலாபம் தான்
அதில் தானே
உங்கள் கருப்புப் பணம் வெள்ளையாகும்
அதனால்

கொண்டாடுங்கள்
கொண்டாடுங்கள்
மேதினத்தை இன்று மட்டும்...

ஒரு
கிழட்டுச் சமுகத்தையும்
குருட்டுச் சமுகத்தையும்
நீங்கள்
திரும்பிக் கூட பார்க்காதீர்கள்
அதுவே
உங்களிடம்
நாளை உலகவர்த்தகம்
பேச வரலாம்
அதனால்

கொண்டாடுங்கள்
கொண்டாடுங்கள்
மேதினத்தை இன்று மட்டும்...

சந்திர பால் . வே

No comments:

Post a Comment