Monday 25 June 2012






பொன்சாய்,

 கலையா? கலையின் பிழையா?





மனிதனின் கொண்டாட்டங்களில் கலையின் பங்கு முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் இருக்கிறது.
அலங்காரத்திலும், ஆடம்பரத்திலும் மனிதர்கள் கோடிக்கணக்கில் செலவழிப்பது மிகச் சாதாரணம் தான்.
மனிதர்கள்  சோர்வடையும் போதெல்லாம்  கலைதான், வந்து தூக்கி நிமிர்த்துகிறது.
அந்த வகையில்,உலகத்தை வேடிக்கை பார்ப்பதற்குப் வாழ்க்கையின் பெரும் பகுதியைச் செலவிடுகிறது இந்த மனிதக் கூட்டம்.
சில ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு, ‘ன்செய்என்ற அழகுத் தாவரம், மேற்கத்திய மனிதர்களால் அலாக்காரமாக வடிவமைக்கப்பட்டது.
இந்த நடப்பு ஆண்டுகளில், சென்னை போன்ற பெரும் நகரங்களில் ஏராளமான விளம்பரங்கள் இந்த குறும்பச்சைத் தாவரங்களைப் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறது.
செல்லப்பிராணிகளைப் போல, இந்தக் குட்டி மரங்களை நம்மவர்கள் தொட்டுத் தொட்டு வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள்
கோப்பைகளிலும், குறுந்தொட்டிகளிலும்  இந்தக்குள்ளமரங்களைக் கொண்டு வந்து, கண்களுக்கு விருந்தளிகக்கும் வகையில் வரவேற்பறையில் வைக்கிறார்கள்.
அடந்த மரங்களும் ஐந்தங்குலத் தொட்டிகளில் வளரும் பக்குவத்தை  அடம்பிடிக்கும் கண்டுபிடிப்புகளில் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள்.
சீனர்கள் இந்தக் குழந்தை மரங்களுக்கு’,பென்ஜின்என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
பாப்லோனின் தொங்கும் தோட்டத்திலும் இவ்வகைத்தாவரம் காணப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜப்பானியர்கள் இந்தத் தோட்டக் கலையின் நுணுக்கத்தை இறக்குமதி செய்து, ‘தட்டத் தோட்டம்என்று அழைத்திருக்கிறார்கள்.
இந்தச் செல்லப் பசுமைகளுக்குப் பலத்த பாதுகாப்பும், மிகுந்த கவனமும் தேவைப்படுகிறது.
முனிவர்களும் பௌத்தத் துறவிகளும் மருத்துவத் தேவைக்காகத் தங்கள் வசதிக்குத் தக்கவாறு இந்தத் தாவரங்களைக் குறுகிய அளவில் வடிவமைத்திருக்கிறார்கள்.
இந்தக் குட்டித் தாவரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாகக் கொண்டு செல்ல முடிந்தது.
4000 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தியச் சமாதிகளில், இந்தக் குட்டை மரங்களின்உருவப்படங்கள் காணப்படுவதாக வியக்கு்ம் தகவலை அண்மையில் வெளியிட்டிருக்கிறார்கள்.
நாடோடி வண்டிகளில்,இந்த அழகுப் பச்சைகளைப்பலவிதமான பாத்திரங்களில் வைத்து ஆசியா முழுவதும் வலம் வந்ததாகச் சொல்லுகிறார்கள்.
1909 – ஆம் ஆண்டுகளில் லண்டனில் இந்தக் குள்ளமரங்கள்இரண்டாவது உலகக் கண்காட்டசியில் கலந்து கொணடது குறிப்பிடத்தக்கது தான்.
மனிதர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த உலகப் பேரழிவான, இரண்டாம் மாகயுத்தம் நடந்து முடிந்த ரத்தப் பொழுதுகளில் - கலையும், அறிவியலும், ஒட்டுமொத்த நாடுகளின் மத்தியில் வந்து வளர்ந்தது ஒரு எதார்த்தம்தான்.
அதன் தொடர்ச்சியின் வரிசையில், பொன்சாய் தாவரத்தின் கலையும் அடங்கும்.
ஒரு குழந்தையைப் போலப் பார்த்துப் பார்த்து வளர்த்து, முடிவெட்டிக் கொண்ட இந்தத் தாவரங்களைக்குள்ளமனிதர்கள்என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
முடமான பச்சைகள்கண்காட்சிகளுக்குக் கொண்டு வந்து கௌரவப் படுத்தப்படுகின்றன.
ஆணி வேர் அறுக்கப்படுகிறது - குறுத்தைக் கத்தரிக்கிறார்கள்,   குறுக்கெலும்புகள் கம்பிகளில் கட்டப்பட்டு இந்த்த் தொட்டில் மரங்களை ஒரு வரம்புக்குள் வளர்க்கிறார்கள்.
பொன்சாய் வளப்புக் கலைக்கு, இக்கால மனிதர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கும் அதே நேரத்தில், இது இயற்க்கை முரண்பாடு என்றும் பார்க்க வேண்டியிருக்கிறது..
தாவரங்களின் பயன்பாடு மாறி விட்டது. மனிதர்களின் நெருக்கடியில் கலையும் சுருக்கெழுத்தில் எழுதப்படுகிறது.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’- என்று அறிக்கை விடுத்த நாம் இப்போது வீட்டுக்குள் வைத்து மரம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதனால் மழைநீர் தொட்டிகள் கட்டுவதில், அர்த்தமில்லாமல் போனதை உணர முடிகிறதா!.
வாகனங்கள் சிந்தும் கரும்புகைவெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் நமக்கு, தாவரங்கள் வெளியிடும் சுவாசக் காற்றைப் பெறமுடியாமல் போகிறது.
ஒரே தரியில் பின்னப்பட்டது தான் கலையும்இயற்க்கையும்.
தரியைப் பிரித்து நெய்திருக்கிறார்கள் இந்தத் தந்திர மனிதர்கள்.
கொஞ்சிக் கொஞ்சி வளர்க்கும் இந்தக் குறும்பச்சைகள் அழகியலின் நடவுதான்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கப்படாத ஒரு குழந்தைகள் தான்.
.    


 
      பிரிக்கமுடியாதது
தமிழரும் தமிழ் - சினிமாவும்.


தேசிய அளவில் முன்னணிப் படத்தயாரிப்புகளில் தலைநிமிர்ந்து இருக்கிறது தமிழ் சினிமா.

வருடத்திற்கு 200 க்கும் அதிமான படங்கள் ரிலீஸ் ஆகிறது.

ஆதோடு, ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் திரைப்படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஊடகங்கள் அனைத்தும் சினிமாவை முன்னிருத்தியே பிழைப்பு நடத்துகிறது.

நடிகர்களின் போஸ்டர்களுக்குப் பாலபிஷேகம் செய்து ஒவ்வொரு படவெளியிட்டு விழாவையும் ரசிகர்கள், ஒரு திருவிழாவைப்போல கொண்டாடுகிறார்கள். 

போஸ்டர்களிலும், பேனர்களிலும் டாப்டன் ஹீரோக்களின் சிரித்த முகம் அச்சிடப்பட்டு, அதில் ரசிகர்கள் உடன் நிற்கும் போக்கு, சமிபகாலமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஒரு வயது குழந்தை முதல், வயதானவர்கள் வரை தமிழர்களின் வாழ்வில் தமிழ் சினிமா பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. 


தங்களுக்குப் பிடித்தமான நடிகருக்கு சிலர் ரத்தத்திலும் கடிதம் எழுதுகிறார்கள்.

நண்பேன்டா ஒய் திஸ் கொலை வெறி,பொன்ற சினிமா வசனங்களைப் பயன்படுத்தியே நண்பர்களைக் கிண்டலடிப்பதும், பஞ்ச் டயலாக் பேசுவதும் இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் இயல்பாக இருக்கிறது.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படகளில் வரும் துணியின் டிசைன்களைக் கொண்டு நல்ல லாபம் பார்க்கும் லாவகத்தையும் ஜவுளி கடை உரிமையாளர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

எல்லா சூழலுக்கும் இடமளிக்கும் வகையில், வெளிவரும் திரை இசைப்பாடல்களைக் கேட்காமல் ஒரு நாள் போவது கடினமாக இருக்கும்.

1960- 70களில் திரைஇசைப் பாடல்கள் தத்துவார்த்தமாகவும் 80 களுக்குப் பிறகு இயற்கையின் வர்ணனை சார்ந்ததாகவும் இருந்தது.

90களுக்குப் பிறகு, திரைஇசைப்பாடலில் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சமடைந்தது.

தற்போது வெளிவரும் பாடல்கள் தொழில் நுட்பம், கருத்து, விழிப்புணர்வு, இயற்கை என்று பல வகைகளில் திரைப்படல்கள் உலக அளவில் அசத்தியது.

டாப்டென் ஹீரோக்களை வைத்து அதிக லாபம் பெறும் சூழலில், புதுமுகங்களைக் கொண்டு வெற்றி பெறுவதும் விருதுகள் தட்டிச் செல்வதும் இக்கால சினிமா உலகில் எதார்த்தமாகிறது.

ஒரு படத்தில் கருத்தோ ,அதன் சிந்தனையோ, நகைச்சுவையோ, சமூக விழிப்புணர்வோ, தொழில் நுட்பமோ, துள்ளியக் காட்சிகளோ எதுவாக இருந்தாலும் அதை அன்போடு ஏற்கும் தமிழனின் ரசனை உயர்வானது..

ஒரு சில படங்களைத் தவிர தமிழ் சினிமாவில், காட்சித் திணிப்புகளால் கற்பனையில் வறட்சி ஏற்படவும் செய்கிறது.

அரிவாள் கலாச்சரமும், போதைப் பொருள் மயக்கங்களும், அதை ஒட்டியே, குத்து கொலை என்று, எங்கோ ஒரு முலையில் எப்போது நடந்தாலும் அதுவே எதார்த்தம் என்று கதையின் இறுதிக் காட்சிகள் வன்கொலையாக முடிகிறது.

துப்பாக்கிகளும், வெடிகுண்டுகள் தெரிக்கும் அதீதக் காட்சிகளும் வளரும் தலைமுறைகளை வழிமாற்றி விடுகிறது.

பொருளாதார முன்னேற்றம் பெண்வளர்ச்சி மறுமணம்- குழந்தை தத்தெடுப்பு முறை பெண்சிசுக் கொலை தடுப்பு என்று பல வளர்ச்சிப் பாதையில் மாற்றங்களைத் தந்துள்ளது தமிழ் சினிமா.

18 வயதிலிருந்து 30 வயது வரை இருக்கும் பார்வையாளர்களை நோக்கியே படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள்.

அழகி ஆட்டோகிராப் மொழி வெயில் பசங்க - வாகை சூடவா மைனா, மெரினா போன்ற படங்கள் எதார்த்த தளத்தில் படம்பிடிக்கப்பட்டு, கற்பனைகள் தேவைப்படு்ம் அளவுக்கு சேர்க்கப்பட்டு உலக அரங்குகளில் திரையிப்பட்டு வருவது தமிழ் திரை உலகத்தை பெருமை யடைச்செய்கிறது.

ஒரு பார்வையாளன் இம்மாதிரியான திரைப்படங்களில், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டிருக்கிறது.

1995 களில் ...இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் என்கிற திரைப்படம், அரசு ஊழியர்களின் லஞ்ச ஊழலை எதிர்த்த மாபெரும் எழுச்சியையும் விழிப்புணர்வையும் ,தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது. 

நல்ல பாடல் வரிகளையும், அழகான காட்சியமைப்பைக் கொண்டு, மீண்டு எழுந்து நிற்கச் செய்யும் கதை மையத்தோடு தமிழ் சினிமாக்கள் வரவேற்பு பெறாமல் போவது வருத்தத்துக்குறியது.

உலகத்தின் ஒட்டு மொத்த கலையையும் அறிவியலையும் உள்வாங்கிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் ஊடகத்தில் முதன்மையானது இந்தச் சினிமாதான்.

ஒரு ட்ரெண்டை மாற்றுவது இயக்குனர்களின் கையில் இருக்கிறது.

நல்ல பதிவுகளை மட்டும் திரை உலகத்தில் பதிவு செய்யும் பொறுப்பு இயக்குனர்கள் கையில் இருக்கிறது.







அன்றாட வாழ்க்கையிலிருந்து தான் சினிமா எடுக்கப்படுகிறதா ?

இல்லை,

சினிமாவை வைத்துதான் அன்றாட வாழ்க்கை நடக்கிறதா ?

ஒரு தமிழன் அவன் அன்றாட வாழ்க்கையில், ஏதாவது ஒரு தருணத்தில் சினிமாவைச் சந்திகிகிறான்.

அந்தச் சினிமா அவன் வாழ்க்கையை மேன்படுத்துகிறதா ? அல்லது இல்லாத மாயைக்குள் தள்ளுகிறதா ?

எந்த அளவிற்கு சினிமாவை ஒருவன் தன் வாழ்க்கைக்குள் ஊடுருவ அனுமதிக்கிறான் ?
அல்லது,
இது தான் என் வரையறை என்று தீர்மானிக்கிறானா ?

எப்படி இருந்தாலும்,

தன் வாழ்க்கையை முடிவு செய்ய வேண்டியது அவரவர் ரசனையைப் பொருத்த விஷியம்.

இருப்பினும்,

பிரிக்கமுடியாதது
தமிழரும் தமிழ் சினிமாவும்......











சினிமாதமிழகத்துக்கு
                                                 வரமா ? சாபமா ?



தேசிய அளவில் முன்னணிப் படத்தயாரிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் தமிழ் சினிமாவின் பின்புலம் என்ன ?

வருடத்திற்கு 200 க்கும் அதிமான படங்கள் ரிலீஸ் ஆகிறதே!
அது எப்படி நடக்கிறது ?

வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருடைய விருப்பமும் தமிழ் சினிமாவில் எப்படி சாத்தியமாடைகிறது ?

ஊடகங்கள் அனைத்தும் சினிமாவை முன்னிருத்தியே எதற்காகப்  பயணக்க வேண்டும் ?
அதற்கான காரணமும் காரியமும் என்ன ?

சூப்பர் ஹிட் ஹீரோக்களின் பேட்டிகளும், இயக்குனர்களின் தம்பட்டங்களும் தொலைக்காட்சிச் சேனல்களில் சூடு பிடிக்கிறதே!
இதை எப்படிச் செய்ய முடிகிறது ?

வேடிக்கை காண்பித்தவர்கள் எல்லாம், தலைமையில் அமர்ந்ததற்க்கான களம் தமிழகத்தில் எப்படி வந்தது ?

போஸ்டர்களிலும், பேனர்களிலும் டாப்டன் ஹீரோக்களின் சிரித்த முகம் அச்சிடப்பட்டு, அதில் ரசிகர்கள் உடன் நிற்கும் போக்கு, சமிபகாலமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தலைவரு படம் ரிலீஸப்ப அளப்பரை மட்டும் பாரு மாப்புள... என்று நடிகர்களின் போஸ்டர்களுக்குப் பாலபிஷேகம் செய்து படுஉற்சாகமாகக் கைதட்டுகிறார்கள் இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள்.   

ஏதோ ஒரு படத்தில் வந்த நடிகரின் ஸ்டெயிலில் தலைமுடியை அலங்கோலமாக வெட்டிக் கொண்டும், டீசர்ட்டுகளில் பயங்கரமான ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டும், ரசிகர் மன்றங்களில் உறுப்பிளர்களாக இருப்பதில் பெருமைப்படுகிறார்கள்.

தங்களுக்குப் பிடித்தமான நடிகருக்கு சிலர் ரத்தத்திலும் கடிதம் எழுதுகிறார்கள்.

நடிகைகளைத் தேவதைகளாகவும், அவதாரப் புருஷர்களாகவும் நினைத்துக் கொண்டு, கோவில் கட்டிக் கும்பிடுகிறார்கள்.

சினிமா வசனங்களைப் பயன்படுத்தியே நண்பர்களைக் கிண்டலடிப்பதும், பஞ்சு டயலாக் போசுவதும் இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் இயல்பாக இருக்கிறது.

தற்போது வெளியான திரைப்படத்தை வைத்துக் கொண்டு, எந்தத் தரத்தில் - எந்த மாடலில் துணிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது ஜவுளிக் கடைகளுக்கு நன்றாகவே தெரியும்.

மேலாடையின்றி இறுக்கமாகப் பெண்கள் உடையணிந்துவரும் பழக்கத்தை, இன்றைய தமிழ் சினிமா எளிதாகச் சொல்லித் தந்திருக்கிறது.


எந்த மனநிலையில் இருந்தாலும், அதற்கேற்ற ஒரு பிடித்தமான பாடல் சூடாகக் வந்து உதடுகள் முனுமுனுக்கிறது.
 
ஒரே விதமான படங்களைப் பார்த்து சலிப்பு தட்டும் சூழலில்,
பார்வையாளக்குப் புதிய ட்ரெண்டை சில படங்கள் தொடங்கி வைத்து விடுகிறன.

ஒரே நேரத்தில் அனேக செல்போன்களின் ரிங்டோன்கள் ஒரு குறிப்பிட்ட பாடலாகவே கொஞ்ச நாட்களுக்கு இருக்கிறது.

   
தமிழ் சினிமாவின் கதை மையமும் அதன் பின்னணியும்

கதைக்காகக் கதாப்பாத்திரங்களை அமைத்து இயக்கும் நிலை மாறி,
பெரும்பாலும், ஹீரோக்களை மையப்படுத்தியே கதையமைக்கும் நிலை இன்றைய தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது.

நல்ல லாபம் அடைந்த ஹீரோக்கள் சொந்தமாக படம் பண்ணுவது என்று, டோட்டலாக விழுந்து விட்டு மூச்சு விடுகிறார்கள்.

ஒரு சிலப் படங்களைத் தவிர தமிழ் சினிமாவில், காட்சித் திணிப்புகளால் கற்பனையில் வறட்சி ஏற்பட்டு விட்டது.

காட்சியமைப்புகளில், ஏளனப்படுத்தும் நகைச்சுவைகள் ஓரளவிற்க்குப் பார்வையாளனை ஆறுதல் படுத்துகிறது.

அரிவாள் கலாச்சரமும், போதைப் பொருள் மயக்கங்களும், அதை ஒட்டியே குத்து கொலை என்று, எங்கோ ஒரு முலையில் எப்போது நடந்தாலும் அதுவே எதார்த்தம் என்று கதையின் இறுதிக் காட்சிகள் வங்கொலையாக முடிகிறது.

அப்போதுதான் படத்தில் ஒரு பீல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் தெரிக்கும் அதீதக் காட்சிகள் ஏற்கொள்ள முடியாத வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது தமிழ் சினிமாவில்.

தமிழ் சினிமாவில், சென்சார் போர்டு என்பது, அதிகாரத்தின் கிழ் வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

துணிச்சலாகவும், சவாலாகவும் நாட்டு நடப்புகளைப் பிரதி
பலிக்க விடாமல் தடுக்கும் இந்தச் சென்சார் துறை, கவர்ச்சியையும் தனிமனித ஒழுக்கத்தையும் தட்டிக்கேட்கத் தவறிவிடுகிறது.

தமிழ் சினிமா கற்றுத்தரும் மாடல் கலாச்சாரம் அதிகமான விவாகரத்துகளை ஏற்படுத்திவிட்டது குறித்துக்கொளள வேண்டிய ஒன்று தான்.

சினிமாச் செய்திகளைக் கொட்டிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிச் சேனல்களைப் பார்த்துக் கொண்டே தமிழ் மக்கள் மனதளவில், சப்பானியாக இருந்து விடுகிறார்கள்.

ஒட்டு மொத்த கலைகளையும் அதன் பொழுது போக்கையும் ஆக்கிரமித்துவிட்ட சினிமாவின் பலம் வேறெந்தப் பக்கத்திலும் திரும்பவிடாமல், மனிதர்களின் சுருங்கிப் போன் வாழ்கையின் வடிகாலாக இருக்கிறது.

அதனால் தான் சின்னச் சின்ன அதிர்வுகளைக் கூட தாங்க முடியாமல் தற்கொலைகள் பெருகி வருகிறது.

உறவுகள் அறுந்து தனித் தனியாகத் துண்டித்துக் கிடக்கின்றன.

ஊடங்கங்களில், சினிமாவுக்கான இடம் முதன்மையாக இருக்கக் காரணம் உணர்வுகளின் கவனஈர்ப்புதான்.

தலைகால் புரியாத இளமை பருவத்தில் சினிமாவைப் பார்த்தே, பாலியல் சிக்கலில் முட்டாள் தனமாக மூழ்கி விடுகிறார்கள் இன்றைய இளய தலைமுறைகள்.

பத்திரிகையின் அட்டைப்படங்களில் ஏதாவது ஒரு நடிகை சிரித்துக் கொணடு இருப்பது வழக்கமாகிவிட்டது.

சினிமா கிசுகிசுகள் பாலியல் உணர்வைத் தூண்வதாக இருப்பதால்
வாசகர்களிடம் பெரும் வரவேற்ப்பைப் பெறுகிறது.    

இன்றைய பெரும்பாலான சினிமாவின் கதைமையம், கவர்ச்சியில் மயங்கிக் கிடக்கிறது.

அதற்காக, அதிநவீன டிஜிட்டல் கேமராக்களும் மேற்கத்திய இசை மரபைத் தழுவிய தாளமும் உடன் வருகிறது.

நேரடியாக பாலியல் கிளர்ச்சி தூண்டும் பாடல்கள் குத்துப் பாட்டு என்ற பெயரில் துல்லள் இசையாக வருகிறது.

அதில், ஒட்டுத் துணியை உடுத்திக் கொண்டு இடுப்பையும் மார்பகத்தையும் குலுக்கிக் கொண்டு ஆடுவதற்குத், தனிப்பட்ட முறையில் கவர்ச்சி நடிகைகள் தயாராகிவிட்டது, தமிழ் சினிமாவில் சமிபகாலமாக அதிகரித்து வருகிறது.

ஒரு குடும்பத்தில் அக்காள் - தங்கைகளோடும் பெற்றோர்களோடும் இந்தக் கவர்ச்சி பாடல்களைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொள்ளும் அபத்தம் தமிழ் சினிமாவுக்கு நேர்ந்து விட்டது.

18 வயதிலிருந்து 30 வயது வரை இருக்கும் பார்வையாளர்களை நோக்கியே படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள்.

கமர்ஷியல் என்று தனிமனித ஒழுக்கத்தைக் கொச்சைப் படுத்தும் நடன அமைப்புகள் கொசுக்களைப் போல பெருகிவிட்டது.


வெடிகுண்டுகள் இல்லாத, மன அழுத்தம் ஏற்படுத்தாத சாதாரண எதார்த்தபதிவுகளோடு, தேவைக்கேற்ற கற்பனையில் உருவாகும் படங்களும் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

அந்தப் பட்டியலில், அழகி ஆட்டோகிராப் மொழி வெயில் பசங்க - வாகை சூடவா ஆகியபடங்கள் எதார்த்த தளத்தில் படம்பிடிக்கப்பட்டு, கற்பனைகள் தேவைப்படு்ம் அளவுக்கும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

பார்வையாளன் இம்மாதிரியான திரைப்படங்களில், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டிருக்கிறது.

இந்தியன் என்கிற திரைப்படம், அரசு ஊழியர்களின் லஞ்ச ஊழலைத் எதிர்த்த மாபெரும் எழுச்சியாக, தமிழ் சினிமாவில் வந்து மகத்தான ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. 

நல்ல பாடல் வரிகளையும், அழகான காட்சியமைப்பைக் கொண்டு, மீண்டு எழுந்து நிற்கச் செய்யும் கதை மையத்தோடு தமிழ் சினிமாக்கள் எப்போதவது வெளிவருவதும், அதற்கான அங்கிகாரங்கள் குறைந்து விடுவதும் கசப்பான உண்மைதான்.

உலகத்தின் ஒட்டு மொத்த கலையையும் அறிவியலையும் உள்வாங்கிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டிருக்கும் ஊடகத்தில் முதன்மையானது இந்தச் சினிமாதான்.

ஒரு ட்ரெண்டை மாற்றுவது இயக்குனர்களின் கையில் இருக்கிறது.

நல்ல பதிவுகளை மட்டும் திரை உலகத்தில் பதிவு செய்யும் போக்கை இயக்குனர்கள் கொண்டு வரவேண்டும்.

தனிமனிதக் கலாச்சார ஒழுகத்துக்கும், நிறைவான ஆனந்தத்துக்கும் இனிவரும் தமிழ் சினிமாக்கள் இடம் அளிக்க வேண்டும்.

எப்போது ஒரு கலை அந்தச் சமூகத்தின் ஆணிவேரோடு சேர்த்துப்  பின்னப்படுகிறதோ அப்போது தான் நிலைத்து நிற்கிறது.

கதை கேட்கும் மரபில் இருந்து கூத்து மற்றும் நாடக சபாக்களின் வழி வந்த தமிழ் சினிமா மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து விட்டது.

தமிழ் சினிமாவில் இயங்கும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் தமிழ் கலாச்சாரத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும்.

இனிவரும் தலைமுறைகளுக்கு, முன்மாதிரியான நிகழ்வுகளைப் தமிழ் சினிமாவில் பதிவு செய்து வைக்க வேண்டும்.

ஒரே இரவில் கர்ப்பச் சுமையை இறக்கி வைத்து விட்டு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிவிட முடியாது.

தரமான ஒத்திகைகளால் தேர்ந்த நடிப்போடு, செரிவான கதை முடிச்சுகளை அவிழ்க்கும் தமிழ் சினிமாக்களே சீரழியும் கலாச்சாரத்தைச் செம்மைப்படுத்த முடியும்.



 
நேற்று
கல்மனிதர்கள்.
இன்று
எந்திர மனிதர்கள்.
நாளை
விண்மீன்கள் வாங்கும்
தந்திர மனிதர்கள்.

நேற்று...இன்று...நாளை...

வனமந்திரக் காடுகளில் தொடங்கியது
கல்மனித நாடோடிகளின் கதைசொல்லிகள்.
வனமந்திரக் காடுகளில் தொடங்கியது
கல்மனித நாடோடிகளின் கதைசொல்லிகள்.

மொழி-கலாச்சாரம்-அரியணை-போர்கள் என்று
கலையின் கம்பளங்கள் சொல்லி வந்தது இந்தக் கூத்து நாட்கள்.

நேற்று...
ஆங்கிலப் பறவைகளின் சிறகசைப்பில்
மதராசப்பட்டினத்தின் கூடுகள் ஒடிந்தது.

மணலடிப் பாதைகள் கூட கருப்புத்துணி கட்டிக் கொண்ட
தார்சாலைகளாகத் தாமரைக் குளங்கள் உயிர் விட்டது.

உறைவாளும் -செங்கோலும்
வெள்ளை மனிதர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
கொஞ்சம் கொஞ்சமாகச் சென்னை வெள்ளையடிக்கப்பட்டது.

காங்கிரிட் மரங்கள் கட்டுக்கட்டாக முளைத்தது.

தொட்டாச்சிணுங்கிகளுக்கு மத்தியில் சில வரிப்புலிகள்
தானே எரியும் கோலம் கண்டது.

பல்லக்குகளும், ரதங்களும் - தண்டவாளங்கள்.
அது கண்டு பிடிப்பின் பிடிவாதங்கள்

ஓலைகளும், கல்வெட்டுகளும் - மின்தாரத் தூதுகள்.
இப்படி விஞ்ஞான விரல்கள் ஏதேதோ கிருக்கி வைத்தது

முத்தும் மிளகும் கொடுத்து
நம்மவன் கிளிஞ்சல் பொருக்கி வந்தான்

அடிமைச் சங்கிலியில்,
கல்வி - அறிவியல் - சட்டம் - மருத்துவம் - கலைகள் என்று  
உயிரின் ஒவ்வொரு அணுவிலும
பக்குவமாய் நடவு செய்து நாடு கடந்தார்கள்

இன்றளவும் - நீயும் நானும்
அதன் நகல்களாய் நடந்து கொண்டிருக்கிறோம்

இன்றளவும் - நீயும் நானும்
அதன் நகல்களாய் நடந்து கொண்டிருக்கிறோம்

இன்று...
விஞ்ஞான வெளிச்சத்தில் விடிந்து கொண்டிருக்கும்
இந்த - மைக்ரோ வினாடிகளில்
கைகால் முகத்தைச் சுமந்து கொண்டு
கைதிகளாக அலைகிறார்கள்

யாருக்காகவோ எதற்காகவோ
அகதிதளாக அலைகிறார்கள்

இருதயத்தில் பெட்ரோல் டீசல் நிரப்பிக்கொண்டு
தெருவுக்கு வந்து தேடுகிறார்கள

சென்னை...
கடலலை ஒரத்தில் கனவுகளின் கூடாரம்
தமிழகத்தின் திறந்த வெளித் தால்வாரம்
வந்தேரிகளின் தாராளம்
மொழி - கலாச்சாரம் மிதிபட்டு
உயிர் வீங்கி அலையும் கணிணி யுகத்தின் அனாதிக் காலம்

கண்ணாடி மாளிகையின்
ஆங்கில வாசத்தில் அறைகள் குளிரும் போது
பெருவழிச்சாலை ஓரத்தில் பிளாட்பார வீடுகள்
அது நகரும் நத்தைக் கூடுகள்

சென்னையில்
காவல் துறைக்கு எப்போதும் காலியிடங்கள்
விபத்துக்கள் எழுதும் தேர்வில் கோடிட்ட இடங்கள்

கலர்க் கலர் கோலமிடும் சினிமா வாசல்கள்
உதிரும் ஈசல்கள்

கார்டூன் வார்த்தைகளில் கதைக்கும் நிமிடங்களில்...
தெருவில் ஒரு பைத்தியக்காரன் தமிழ் வாசிக்கிறான் என்பதும்
சென்னையில்  மிகச் சாதாரணம்

பருவக் கிளிகள் கிறுக்கும் விடுகதை
மெரினா கடற் கரை

இனியொரு வழியில்
மெட்ரோ ரயில் திட்டம்

பளிங்கு மெத்தையில்
மௌனம் அதிரும் நூற்றாண்டு நூலகம்

சென்னையில்
கடல் நீர் சலவை செய்யப்படுகிறது
குடிநீராகும் நிலுவையில் இருக்கிறது                                                                                                          

மேடையில் இடி முழக்கம்
எதிர்க்கட்சிகள் நெஞ்சைக் கிழிக்கும்
புதுபுதுத் திட்டம் வகுக்கும் - இது
பூர்வீக வழக்கம்

ஏதோ ஒரு நம்பிக்கையில்
சென்னை வந்திறங்கி
வாங்கிய சம்பளத்தில் பாதியை
வாடகைக்கே கொடுத்து விட்டு
வாய் கட்டி வயிறு கட்டி ஆண்மையும் கட்டி
அம்மா அப்பாவுககு ஆயிரமோ இரண்டாயிரமோ
அனுப்பும் இளைஞர்களுக்குக்
காய்ந்து கிடப்பது குடல்கள் மட்டுமல்ல
இருதயக் குடல்களும் தான்.

நாளை...
சென்னையில்
அலைமகள் மீண்டும் எச்சில் தெரிக்கலாம்.
கொத்துக்கொத்தாகக் கூறு போடும் ஆரம்பம்
நாளை வரலாம் பூகம்பம்.
நிலாவில் வடை சுட்டு விற்கலாம்
விண்மீன்கள் விலைக்கு வரலாம்
விமானப் பயணம் வீணற்றதாக இருக்கலாம்
விஞ்ஞான ரெக்கைகள் சலுகையில் கிடைக்கலாம்
பக்கத்துக் கோள்களுக்குப் பண்டிகைக்குப் போய் வரலாம்
அங்கும்
கட்சிக் கொடிகள்
பிச்சைக்காரர்கள்.
அங்கும்
கட்சிக் கொடிகள்
பிச்சைக்காரர்கள்.





 
கடுக்கடா முடுக்கடா
லொடக்கடா லொடக்கடா
…………………………………
கடுக்கடா முடுக்கடா
நீ திடுக்கடா திடுக்கடா

அட கண்களும் நடுங்கிட பார்வை தரையில் விழ
தேடும் கனவே
சர சங்கதி சொடுக்கிய கூடு ஒடிந்து விட
பாடும்  கழுகே,
பாடு பாடலொரு தனதன தாளம் அதிர்ந்து விட
எனக்கே தெரியாது நீ வந்துவிட ஹெய் ஹெய்….ஹெய் ஹெய்…..

தூது விட
காதல் வர எண்ணம் இல்லை….
எனைப் போகவிடு
வழி தாண்டிவிடு இந்தக் காதல் தொல்லை…. 
 



நெருங்கி வந்து விடுவாயா
சிறுக்கி நெஞ்சைத் தொடுவாயா
பருத்தி நெஞ்சை நீ வந்து
பிரித்து நெய்து விடுவாயா

செம்மாந்தத் தமிழே 
மொழியே நீ அடியே நீ
மின்காந்தக் கொடியே
செம்மாதுளை நீ

எழுதாத கவிதை
வடிவம் நீ அழகே நீ
புரியாத வரியில்
மெய் ஆழம் நீ

என் காதலே
உனைத் தாங்கவே
நான் இரவும் பகலும் மறந்து விடவா….!

மெய் தீண்டவே
மனம் ஏங்குதே
இரு விழியின் கதிர்கள் எனைச் சுடுகிறதே…..!











No comments:

Post a Comment