Monday 25 June 2012

கூத்துநாட்கள்

கூத்துநாட்கள்
..............................
.....................................................................................................
சடுகுடுபிண்ட திடுதிடு திடுமென கோலம் போட - காலக்
கலியில் விலையேற்றம் ஓநாய்க்கூட்டம் - கட்சிக்
கொடியொடு நடையில் கொடியது ஏலம் போட - உழவன்
உயிர்தொட்டு கரும்புக்காடு சுடுகாடு வடுதொட்டு வெந்து! வெந்து!
தீண்டும் கவிதை தானே எழுதத் தூண்டும்!

அனாதிக்காலம் தறிகட்டு கதைகள்கட்ட - அங்கு
அதிகாரப்பேய்கள் தலையங்கத் தாய்கள் வீதியில்
... மார்கிழிந்து அழுது புலம்பி இமைகள் நிமிர - கொஞ்சம்
சிரித்து அம்மணமாய் நின்றனர் அது கண்டு
வெந்து! வெந்து!
தீண்டும் கவிதை தானே எழுதத் தூண்டும்!

இறையேஉன் மடியில் கத்தியும் கெட்டவார்த்தைகளும்
குற்றம்கடியும் குமட்டல் விடியல் பொழுதும்
ஓஹோ! வையத்தலைமை இதுவா பாரதி! அடடா
வாடா உன்சொல்வாள் எடுத்து விடுடா! எனக்கும்
வெந்து! வெந்து!
தீண்டும் கவிதை தானே எழுதத் தூண்டும்!

மின்னணு நொடியில் இதயம் தானியங்கும் - மனதில்
கடமுட கடமுட இரவுகள் குறுந்தகவகல் எழுதும்
நடிகைகள் நட்சத்திரங்கள் கடவுளின் நகலில் வந்த
அட்சயப்பாத்திரங்கள் என என்னிடம் சொல்ல
வெந்து! வெந்து!
தீண்டும் கவிதை தானே எழுதத் தூண்டும்!

மிருகத்தடம் துணைகொண்டு அரக்கமுகம் - இதழ்
மெல்ல மறைக்கும் வெள்ளைச் சிரிப்பில் சிந்தும்
ஒலிக்குறிப்பில் பகட்டு இலகக்கணம் பாயிரம் எழுதும்
நல்லநடிகர்கள் இடம் பொருள் பகுப்பார்கள் என்று
வெந்து! வெந்து!
தீண்டும் கவிதை தானே எழுதத் தூண்டும்!

தீராதினிஉன் கனல்விழி அனல்பொங்கும்
எளியோர் தொடங்கி கடையோர் வழிநிற்க - நீ
வருவாய் முன்வந்து எழுவாய் விரல் தொடுவாய்
தொடும் தூரிகை எழுதும் விழுதும் அதுவரைக்கும்
வெந்து! வெந்து!
தீண்டும் கவிதை தானே எழுதத் தூண்டும்!

No comments:

Post a Comment