Monday 25 June 2012

வலி




                                                                                                                                                                                    வலி                                                                             (சிறுகதை)




‘அம்மா’… இரண்டசையில் அழைப்புமணி அழுத்தினான்.
கதவு திறந்தவுடன் கழுத்தைக் கட்டினான் கைக்குழந்தையாக.

“விசா வந்துருச்சுமா”… பிரபாகரன் பொங்கினான்.

“இன்னம்என்ரமகனபுடிக்கமுடியாது…
ம்ம்… எப்பகெளம்புரன்”...”வர்ற வெள்ளிக் கெழமமா”…

நெற்றி தொட்டு முத்தம் வாங்கினான். தந்தை மனோகரன் உறங்கிக் கொண்டருந்தார்.

... “அப்பா…அப்பா”…கனத்த விழிகள் கதவு திறந்த்து.
‘என்னடா’முனங்கினார் மனோகரன்.

‘அப்பா’…
விசாவை எடுத்துக் காட்டினான். மனோகரனின் உதடுகள் செழித்தது.

“பிரபா இது பெரிய காரியம்பா… இத சரியா செய்யனும்”… புருவங்கள்அடந்து சுழிந்தது.

“இதுக்குத் தானப்பா…என்ன இத்தன வருடம வளர்த்திங்க”… நெருங்கி அமர்ந்தான் பிரபாகரன்.

“டெ பிரபா… நீதான்டா என்னோட தலைவன்”... மனோகரன் தன் பிள்ளையைத் தொடும் தீண்டல் கடந்த காலத்தை எப்போதும் கக்கத்தில் வைத்திருக்கும்.

'தெருவீதி' நிருபர் பேசுனாருடா… ஒன்னவரச் சொன்னாரு”… “நாளைக்குப் போகனும்பா”... சொல்லி முடிப்பதற்குள் பிரபாகரன் சொன்னான்.

பத்திரிக்கையாளர்கள் – எழுத்தாளர்கள் – வாசகர்கள் – என்று எந்த நேரமும் காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கும் மனோகரன் வீட்டில்.

புத்தகங்கள் – தபால்கள் வந்து குவிந்து கொண்டிருக்கும்.

இதைக் கணிணியில் இயங்கிக் கொண்டிக்கும் இரண்டு உதவி ஆசிரியர்கள் பதிவு செய்து கொண்டும் அதற்குப் பதில் எழுதிக் கொண்டும் இருப்பார்கள்.

பத்து வயது இருக்கும் போது பிரபாகரனுக்குப் பிறந்தநாள் கொண்டாட நினைத்தார்கள். பிரபாகரனிடம்,

“ஒனக்குப் பிடிச்சதக் கேளுப்பா அப்பா வாங்கித் தர்ரன்”… என்று சொன்னபோது, பிரபாகரன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார் மனோகரன்.

தன் பிள்ளையைத் தொட்டு முத்தமிட்ட போது, வழிந்து உருண்ருடோடியது ஒரு சொட்டுக் கண்ணீர்…

“அப்பா நான் எழுதுன கட்டுரைய, வரவர பத்திர்க்கைகள் ரொம்பவும் தணிக்கை செய்யிராங்க… எந்த ஒருத்தருக்கும் பிடிச்சமாதிரி எழுதக் கூடாதுனு நீங்க சொல்லியிருக்கீங்கப்பா…

நீங்களும் ரொம்பநாளா சொல்லிட்டு இருக்கீங்க…
‘அப்பா’… நம்ம பத்திரிக்கை தொடங்கனும்பா”…

இரண்டு வருடம், எழுத்தாளர் சந்திப்பு – கலந்துரையாடல்கள் உலகத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து தீ பற்றவைக்கும் அக்னிக் குஞ்சு களிடமிருந்து நிதிதிரட்டுவது – என்று ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துப் பக்குவமாய் உருவாக்கினார்கள் அப்பனும் மகனும் சேர்ந்து இந்தத் ‘தமிழச்சி’ பத்திரிக்கையை.

தலையங்கம் – விரிந்தகட்டுரைகள்- அர்த்தமடிப்புகள் குழைத்த சிறுகதைகள் – அணல் கக்கும் கவிதைகள் என பிரபாகரனின் எழுத்துலகம் சுதந்திரமாகச் செயல்பட்டது. .

தமிழ் இனத்தின் ஒடுக்கு முறைகளை அடுக்கடுக்காக எடுத்து, பார்வைக்கு வைத்த்து தன் சொந்தப் பத்திரிக்கையில்.

அவன், அவனுக்காக அமைத்தகளம் அது.

எப்போதும் சாணை பிடித்து வைத்திருக்கும் அவன் தூரிகை. அது அடி ஆழத்திலிருந்து தோண்டி யெடுத்துத் துடைத்தது பேரீழத்தின் பதிவை.

பிரபாகரன் பார்வையில், மூன்று மனிதர்கள்…

‘தயாராக இருக்கிறோம்’… என்ற வரிப்புலிகள் - ‘முதல் நிலை மனிதர்கள்’.

ஈழத்தமிழ் எழுத்துக்களின் சூடு பொருக்காமல் சத்தமிட்டுக் குரைக்கும் ஓநாய்கள் - ‘இரண்டாம் நிலை மனிதர்கள்.’

எழுத்து ஒரு ‘பிரவி்த்
தவம்’ என்று கண்கள் பொத்திக் கொண்டு அதிகாரத்தின் கீழ் எழுத மறுத்து மௌனிகளாகும் குள்ளநரிகள் - ‘மூன்றாம் நிலை மனிதர்கள்’.

யாருக்கும் பயன்படாமல் உள்ளங்கையில் இருக்கும் வாழ்க்கையைத் தெருத் தெருவாகத் தேடி ஓடுபவர்கள்- பிரபாகரனின் பவதிவேட்டில் மனிதர்களே அல்ல.

பிரபாகரனின் தமிழ் முழக்கம் பிஞ்சு வயதிலேயே உலகம் முழுக்கக் கேட்டதற்கு, அவன் பன்னிரெண்டு மொழிகள் கற்றதும்
ஒரு காரணம் தான்.

தமிழனுக்காக எழுதுவதிலும், அதற்காக வந்து சேரும் பணத்தைத் தமிழனுக்காக மட்டுமே எண்ணுவதிலும் வளர்ந்தது இந்தப் பருவத்தென்றலின் புயல்நகங்கள்.

பிரபாகரன் கருத்தோரங்களின் ஆழம்தான் தந்தை மனோகரனின் காலம்...

ஏழாண்டுகள் முடிந்து, மனோகரன் விடுதலையாகப் போகும் நேரத்தில் தான் அங்கு 15 நாள் சிறப்புக் காவலில் வந்த செங்கோடன்
மனோகரனைச் சந்தித்தார்.

சிறையில் எழுதிய மனோகரனின் கதைகளைப் படித்து செங்கோடன் மிரண்டு போனார்.

மனோகரனிடம் செங்கோடன் அதிகம் பேச வில்லை. ஆனால் பேச வேண்டியதைப் பேசினார். மனோகரனைத் தொடர்ந்து எழுதச் சொன்னார்.

விடுதலையாகிச் சொந்த வீட்டுக்கு வந்து அந்தப் பழைய கட்டிலையே பார்த்துக் கொண்டிருந்தார் மனோகரன்.

செங்கோடன் சொன்ன வார்த்தைகள் அறைகள் முழுக்கக் கேட்டுக் கொண்டு இருந்தது.

“இவ்வளவு சொல்லறவன்... வலியினா ஒமக்கு என்னாண்டு தெரியுமொ”

கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்து கதவு தட்டிய போது, கத்தலும் கதறலுமாக அன்று நடுங்கிய நெஞ்சு மனோகரனுக்கு இப்போது நடுங்கியது.

இமைத்த இமை மீண்டும் ஒட்டுவதற்க்குள், மனோகரனின் முன்னால் ஏழு ஆண்டுகள் வந்து நின்றது.

வளைத்து ஒடித்து தாயின் மானத்தைக் கிழித்த அவனை குலவிக்கல்லில் அடித்துக் கொன்று, தலையில் காயத்தோடு சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்ததை விட செங்கோடன் சொன்னது இப்போது பெரிதாக இருந்தது.

தந்தையின் இறப்பூதியத்தில் தான் மனோகரன் படித்து வந்தார்.
தூரத்து உறவுக்காரனால் தன் தாய்க்கு ஏற்பட்டது
தற்செயலான ஒன்றுதான். ஆனால்,

வாழ்வின் திசைகளைக் களைத்துப் போட்டதும் அந்தச் சிறுகணம் தான்.

அக்கம் பக்கத்துக் கேளிக்கை தாங்க முடியாத நிலையிலும் – தனக்கு இருந்த ஒரு தங்க மகனைச் சிறைக்கு அனுப்பி விட்டுத், தனிமையின் வேடிக்கையைச் சகிக்க முடியாமல், ஒரு முழக் கயிற்றில் தன் உயிர் முடிந்தாள் மனோகரனின் தாய்.

வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இ்ல்லாத மனோகரனுக்கு எளிதாக எடுக்க முடிந்தது அந்த முடிவை.

ஈழத்து மண்ணை மனோகரனின் பாதங்கள் முத்தமிட்ட போது, கட்டியணைத்துச் செங்கோடன் மனோகரனை முகாமுக்குக் கூட்டிச் சென்றார்.

முகம் வெந்து சதை தொங்கும் மனிதர்கள் – பசியில் வளைந்து விடாமல் பீரங்கி சுமந்து நடக்கும் வரிப்புலிகள் – விதவைக் கண்துளிகள் – வீரப் பெண்மணிகள் – பாலுக்கழும் குதலை மொழிகள் – எல்லாம் மூத்த தமிழின் வலிகள்.

பேனாவில் தெரி்த்தன தோட்டாக்கள். எழுதினார் மனோகரன். நெஞ்சு கிழிந்து குருதி கொட்டும் கட்டுரைகள். அங்கு, போருக்குப் பூக்கள் கூட இரும்படிக்கும் பட்டறைகள்.

ரத்தத்தில் நனைந்தன பல மாதங்கள். எழுத்துக்களின் கொதிப்பை நிறுத்தச் சிங்கள ராணுவம் கடுகடுத்தது. மனோகரன் உயிருக்கு கெடுவைத்தது.

தலைவரிடமிருந்து அழைப்பு. சென்றார் மனோகரன்.

“செல்வியக் கூட்டிட்டு ஊருக்கு கிளம்புங்கள்… மத்தத பெறகு சொல்றன்”… இமைகள் அசையாமல் நின்றது. உச்சரித்த உதடுகள் ஒட்டுவதற்குள் மனோகரனின் நெஞ்சில் மின்னல் வெட்டியது.

“என்ன சொல்றீங்க”… “ஒங்க எழுத்த நீங்க பாதுகாக்கனும்”…
‘இத விடஎனக்கு எந்தப் பாதுகாப்பு வேணும் தலைவரே’… விழிகள் பணிந்து நெளிந்தது. ”சொன்னத செய்ங்க”… மனோகரனின் கண்கள் மழை கட்டியது.
எதுவும் பேசவில்லை.

தலைவரின் கைகளைத் தொட்டு முத்தமிட்டு செல்வியோடு கன்னியாகுமரிக்கு வந்தார் மனோகரன்.

செல்வி ஒரு ஈழத்துத் தமிழச்சி. போர்க்களத்தில் வளர்ந்த பட்சி. விமனத் தாக்குதலில் வீடு எரிந்த போது உயிர் பிழைத்தது செல்வி மட்டும் தான்.

பிரபாகரன் பல்வேறு சூழ்நிலையில் நடந்த தமிழீழப் படுகொலையை ஒலி – ஒளிப் பதிவுகளில் முறைபடுத்தி உலக மொழிகளில் பெயர்த்தான்.

பல வருடங்களாகச் சேகரித்தத் தமிழீழ வரலாற்றைத்தொகுத்து பெரும் பேழை செய்து, உலக மாநாட்டில் ஒப்படைக்க பறந்து கொண்டிருந்த போதுதான், பிரபாகரனுக்கான இடத்தை 'விசா' வந்து குறித்துக் கொடுத்தது.

வீட்டிலிருந்து ஒருவர் போருக்குச் செல்வது முதுமறை வழக்கம்; தமிழ் முறைப் பழக்கம்.

பிரபாகரன் செல்கிறான். அவன் கையிலிருக்கிறது கோள்; அது எழுத மட்டும் தலை குனியும். எழுத்துக்களில் தமிழ் விடியும்…

“நாளைய உலகம்
நறுந்தமிழ் கழகம்

தாய்மொழி அழகன்
நீஅதன் புதல்வன்

இதைநீ உணர்வாயா!
விதை நீதான் உணர்வாயா!

வந்தேரிகள் வதைப்பார்நமை
உனக்கோ பலகூத்து!

அனுதாபமும் பரிதாபமும்
உதவாது அது எதற்கு?

பிணவாடைவரும்நனவோடைஅழும்
உயரேஎரிகிறது!

அதிகாரமெனும்சதிகாரவலம்
தமிழேஎதைஎழுதுவது?

இதைஆரிடம் சொல்வேனடா
அடடா தமிழா!

மிகச்சிறு சோம்பலும் இனிவேணடாம்
ஒரு கை கொடுடா தமிழா...! ”

உயிர் தொட்டு எழுதினான் உணர்வாளன் பிரபாகரன்.

No comments:

Post a Comment