Thursday 13 June 2013

குழந்தைத் தொழிலாளர்களை எப்படி ஒழிக்க முடியும் ..?


உலக நாடுகள் முழுக்க இன்றைய தினத்தை[ஜூன் 13] “குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின”மாகக் கடைப்பிடித்துள்ளார்கள். 

ஆனால் , ஒவ்வொரு தெருவிலும் கடைவீதிகளிலும் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் குழந்தைத் தொழிளார்களை மீட்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது ?

ஹோட்டல்களில் இலை எடுக்கும் வேலையை பெரும்பாலும் சிறுவர்களே செய்து வருகிறார்கள். காய்கறிக் கடைகள் மற்றும் துணிக்கடைகள் , பேக் கடைகள் போன்ற துறைவாரி பண்டகச் சாலைகளில் அதிகமான குழந்தைத் தொழிலாள்கள் பணிபுரிகிறார்கள்.

விவசாயத்துக்காகவும் ,ஆடு மாடுகள் மேய்க்கவும் மற்றும் பிற பண்ணைத் தொழில்களுக்கு சிறுவயதிலே குழந்தைகளை இழுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்னும் மாறவேயில்லை. 

ஒரு வருடம் அல்லது ஐந்து வருடத்திற்குக் குழந்தைகளைப் பெற்றோர்கள் தெரிந்தே முதலாளிகளிடம் முன் பணம் வாங்கி ,விற்க முன் வருகிறார்கள்.

அப்படி விற்கப்படும் குழந்தைகள் நிரந்தரக் கூலிகளாகவே வளர்கிறார்கள்.

கேட்டால் , குடும்ப கஷ்டம் , வறுமை ,கடன் , என்று ஏதேதோ காரணம் சொல்லிக் கும்பிடுகிறார்கள்.  சிறு வயதில் , படிப்பதிலிருந்து தப்பித்து விட்டதாக நினைத்து குழந்தைகள் கொண்டாட்டத்தோடு கூலிக்குக் கிளம்பி விடுகிறார்கள்.

விவரம் புரியாத – உலக்ததைப் பகுத்தறியாத அவர்களின் பாலிய காலம் யாருக்காகவோ குறைந்த ரூபாய்களில் இப்படி விலை பேசப்படுகிறது .

அதிலும் முதல் தலைமுறை மனிதர்கள் படும் முதல் கொடுமை , குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பது தான் .

அறிவியல் , தொழில் நுட்பம் , கலை , அறிவியல் என்று எதையும் அனுபவிக்க மட்டுமல்ல, வெறும் பார்வையாளர்களாகக் கூட இந்தக் குழந்தைத் தொழிலாளர்களால் இருக்க முடிவதில்லை .

இந்தியாவில் மட்டும் சுமார் 50 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது.
‘குழந்தைத் தொழிலாளர் ஒழுப்பு சட்டம்’ அமலில் இருந்தாலும் பல ஆயிரம் குழந்தைகள் திறந்தவெளியில் 8 மணி நேரத்துக்கு விற்கப்படுவதெல்லாம் மிகச் சாதாரணம் தான் .

சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளில்  வெடித்துச் செத்தவர்களோடு குழந்தைகளும் அதிகம் இருப்பார்கள.  வழக்கு – நிவாரணம் என்று சில பத்து நாட்கள் மட்டும் நடக்கும் . அடுத்தொரு மாதத்தில் விபத்துகள் நெடுங்கதையாகத் தொடரும் .

குழந்தைத் தொழிளார் ஒழிப்பதைப் பற்றி,  மேடைகளில் - அறிக்கைகளில் இப்படி கட்டுரைகளில் பேச மட்டும் தான்
முடியும் .  

No comments:

Post a Comment