Thursday 13 June 2013

அவளைப் புணர்ந்தது அவளுக்கே தெரியாது.



 
நினைவுகளின் பரணி கிழித்து தட்டிய போது
பால் கட்டிய கரையான்கள் முண்டியதைப் பார்த்தான்.

சில புள்ளிகளேனும் இன்னும் நகர்ந்திராத
காலத்தின் உயிர்த்தைலம் நடுங்கியது.

சகாராவின் ஒவ்வொரு தெருவிலும்
அவளே நின்று கொண்டிருந்தாள்.

ஒரு மழைத்துளியில் கரைந்து விடும்
மாய நிறங்கள் எதையும் நிதானிக்கவில்லை.

வசீகரக் கணிதம் வர்க்கங்கள் பேசுகையில்
ஒரு ராபின் பறவை கூட
முத்தத்திற்கான வரவு செலவுகள் கேட்டதில்லை.

பச்சோந்திகள் சொடுக்கிய வார்த்தைகளால்
கால விரிப்புகள் அத்தனையும் கருத்துப்போயின.

தனிமையின் பெருவெளித் தடங்களில் எழுந்த கூச்சத்தில் அவளைப் புணர்ந்தது அவளுக்கே தெரியாது.

- சந்திரபால் . 

No comments:

Post a Comment