Sunday 23 June 2013

தானியமானவள்


அவள் உச்சரிப்பின் இடைவெளிகளில்
அர்த்தம் சுமக்கும் ஈரக்காடுகள் .

கண்களுக்குள் தெறிக்கும்
வார்த்தைகளை எடுத்து ஒலியமைத்தார்கள் .

ஒரு மிருகத்தின் கால் தடம் கண்டு
குறி வைத்தார்கள் .

“ நீயும் தானியமானவள்
உனக்குள்ளும் விதைகள் விழும்
இனிமேல் காடுகள் முளைக்கும்

பனிவனத்தின் வீதியில் – இந்தக் களவாணிகள்
மூக்கில் வீடு கட்டினார்கள்.


கோப்பு ஒழுகு நீரில் கரைந்து கொண்டே
நடுக்கம் தாளாமல்
இலைக்குவியல்களை எடுத்துப் போர்த்தினார்கள் .

ஊரணி மீன்களின் கர்ப்பத்தில்
கல்முளைத்த கிளிமாந்தன்
நிறங்களின் மாயங்களில் அர்த்தம் தேடினான் . 

- சந்திரபால் . 

No comments:

Post a Comment