Tuesday 18 June 2013

தந்திக்கு இனி வேலை இல்லை .


ஜூலை  15 முதல் தந்தியின் சேவையை முற்றிலுமாக நிறுத்தி விடப் போவதாக  ‘இந்திய தந்தித் துறை’ அறிவிப்பு விட்டிருக்கிறது .

ஷில்லிங் என்பவரால் 1832 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தந்திக் கருவி தகவல் தொடர்பு யுகத்தின் மாபெரும் சக்தியாகவும்,  நவீன தகவல் பரிமாற்றத்தின் அரசனாகவும் விளக்கியதை யாரும் மறந்து விட முடியாது .

1850 களுக்குப் பிறகு டல்ஹவ்சி இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த காலக்கட்டத்தில் வந்த தந்திக் கருவி , நம் சம காலத்தில் கலாவதியாகி விட்டது .

நொடித்த நேரத்தில் எந்தச் சிரமும் இல்லாமல் மிக எளிமையாக தகவலைப் பரிமாற்றிக் கொள்ள ஏராளமான இணைய வசதிகள் வந்து விட்டதால் இந்திய அஞ்சல் துறைக்கு தந்தி ஒரு தேவையற்றதாகி விட்டது.  

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினானே" - நன்னூல் என்ற தமிழ் இலக்கணத்தில் இப்படி எழுதி வைத்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் .

தகவல் தொடர்பில் அச்சுக் கலையும் நீராவி யந்திரமும் [ரயில்போக்கு வரத்து]  உலக்ததை ஒன்றிணைத்ததில் முக்கிய பங்கு வகித்தது .

பிரிட்டிஷாரின் காலனித்துவத்தில் அச்சு யந்திரத்தை அடுத்து தந்திக் கருவியே பெரும் பலம் பொருந்தியதாக இருந்து வந்ததென வரலாறு சொல்கிறது.

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களுக்குப் பயனுள்ள வகையில் இயங்கிய தந்தித் தகவல் தொடர்பானாது இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உதவியது .

அதைத் தொடர்ந்து கம்பியில்லா தகவல் தொடர்பாக வளர்ச்சியடைந்த தந்தி , பொதுமக்களுக்குப் பயனளித்தது .

வெளியூர்களுக்குச் சென்றவர்கள் தங்கள் சொந்த பந்தங்களுக்கு அவசர காலத்தில் தந்தியின் மூலம் செய்தியைப் பரிமாற்றம் செய்வதைப் பெரும் அதியமாக நினைத்தார்கள். பெரும்பாலும் வாழ்த்துச் செய்தியை விட இறப்பு அல்லது விபத்துக்களின் துயரச் செய்திகளைத் தெரிவிக்கவே தந்திக் கருவி பயன்பட்டு வந்தது.  

இப்படி பாரம்பரியம் மிக்க தகவல் தொடர்புக் கருவியான தந்திக் கருவி பயனற்றதாகிவிடப் போகிறது .

- சந்திரபால் 




No comments:

Post a Comment