Tuesday 11 June 2013

ஒரு மைக்ரோ வினாடியில் கர்ப்பம் தரித்தாள்.


சகாராவின் யுகங்களுக்கு அப்பாலும்
நினைவுகள் பவளப்பாறைகளாகப் படிந்து கிடக்கின்றன.

உதிர்ந்த வார்த்தைகளை வளைத்து ஒடித்து
அஸ்தியெனக் கரைத்து விட  கடல் தேடும் அவசியமில்லை.

வெங்கிழிச்சாங்கற்களோடு
லேசாகக் கரைந்து விட்டது கூலாங்கல்லொன்று.
வாழ்தலின் சிணுங்களுக்கிடையில் அவளுக்காக
யாருக்கும் தெரியாமல் பெருமளவு காற்றைச் சுமந்து சென்றான்.

அவளைக் கிட்டப்பார்வையில் தான் பார்த்திருக்கிறான்.
எல்லாக் கோள்களிலும் கால் மிதித்து

மூச்சிறைத்த நொடிகள் கடந்தது முத்தத்தில்.
தேன் சிட்டின் இறகுகளை
ஏற்கனவே அவள் கைவசம் வைத்திருந்தே வெட்கப்பட்டாள்.

நனைக்கும் தண்ணீர் மடிப்புகளிடம் பூக்களுக்கெழுதிய குறிப்புகளை
விதைகளின் காதுகளில் சொல்லி விடச் சொன்னாள்.

வால் சீத்தைப் பறவைக்கும்  
அது  கத்தும் சத்தத்துக்குமுள்ள நெருக்கம் போலிருந்தாள்.

ஒரு மைக்கரோ வினாடியில் கர்ப்பம் தரித்தாள்.

ஒரு குழந்தையாக இருந்தவள் தாய்பால் தவறிய துளிகளில் 
நிதானிமாக ஊட்டினாள்.

உலகத்தின் கடைசி மனிதன் இங்கே வாழ்ந்து முடிந்தான்.

பள்ளத்தாக்குகளின் அத்தனை பூக்களையும்
காற்றில் ஏறி பறித்தாள்.

நேற்று வரை அவள் எழுதப்படாமல் இருந்தாள்.
இன்று கவிதையானாள்.

- சந்திரபால் .  
 

No comments:

Post a Comment