Wednesday 12 June 2013

எந்தத் தெருமுனையிலும் நிற்பான்.



 
பலவந்தங்களின் குளுக்குச் சீட்டில்
அவனுடைய மகுட காதைகளை

எந்த மிருகம் வாசிக்க நேர்ந்தாலும்
ஒரு கவிதை துணையிருக்கும் வரை எதுவும் அவனை நெருக்காது.

யாத்திரிகனின் உள்வழி பரப்பில் அவனிடம் வழிப்பறி செய்தாலும்
ஒரு கவிதை துணையிருக்கும் வரை
இழந்ததாக எதையும் சொல்ல முடியாது.

எந்தத் துருவத்திலும் கலவி நடத்துவான்.
ஒரு இலை நரம்பிலும் எளிதாக உறங்குவான்.

சகாராவின் வழி தடத்தில்ஏதொன்றும் சொந்தமென்று அடங்கல் காட்டினால்
அதற்காக சிரிப்பான்.

அந்தச் சிரிப்பின் மந்தகாசத்தில்
நூறு எரிமலையின் வாசத்தை இரண்டு கண்களிலும்
முழுமையாக நிரப்பிக் கொள்வார்கள்.

எந்தத் தெருமுனையிலும் நிற்பான். 
அவன் காத்திருத்தலை விரும்பாதவன்.  

- சந்திரபால் .

No comments:

Post a Comment