Friday 14 June 2013

ஜீவ வாடை .



பொய்கள் என்பது சகாராவில்…
கால் நகம் தொட்டு குறிப்பெழுதும் தவிப்பு.

தூதரக ரகசியத்தின் வழி சினேகிதத்தின் பல்லாங்குழிகளில்
ஒளிந்து கொள்ள அர்த்தமற்றதாகும்.

அவளிடம் விலகினாலும்
சிறு மௌனத்தின் பசை போதும் ஜீவகாகிதம் ஒட்டிய கச்சிதமாகும்.

 ‘நீ போய்  விடு என்று சொன்னவன்
அவனுக்குள் அவன் புக முடியாமல் ஒரு யுகமாகக் கிடந்தான்.

கடுகளவை நறுக்கிய ஆயிரம் துண்டுகளாக கண்களறியாமல்
குப்புறப் புறண்ட விசும்பல்களை
அள்ளித் தெளிக்கும் அவன் ஜீவ வாடை . 

- சந்திரபால் .

No comments:

Post a Comment