Tuesday 11 June 2013

பைத்தியக்காரன் தான்.



பாரதியின் பித்தவெறியில் இரவுகளைத் தின்றதில்

எழுதிய வரிகளுக்குச் சுளுக்கென்று
வயித்தியம் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

முலைகள் ரசிக்கும் அனாதியில் உடையும்
மனதுக்கான குமிழ்கள். 

'எதாவது பேசு' என்று கேட்பதற்கு முன்னால்
ஏதொன்றும் முடிவில்லாமல் பேசிக் கொண்டிருந்தான்.

ஓநாய்களின் கெக்கலிப்பில்...
மந்தையில் நிற்கும் விசும்பல்களும், எத்தனிப்புகளும்
பருவத்தென்றலின் முகம் பார்த்து விட
உறங்கும் மம்ம்களின் விழிகளுக்கருகில் விடை கேட்டு நின்றன.

- சந்திரபால் . 









                            

No comments:

Post a Comment