Tuesday 11 June 2013

பருவ வயல்



                                         
கமகத்தின் ஒலிச்சிதறல் அள்ளி எறிந்த போதெல்லாம்
சாகாராவில் மழை வருமென்று அண்ணார்ந்து பார்த்தார்கள்.

ஆனால், கடைசித் தூதன் தனக்கான வார்த்தைகளை
எந்தக் கடலுக்கடியிலும் தேடுவான் என்பது அவர்களுக்குத் தெரியாது.

பட்டுப்பூச்சிகளின் எலும்பில் சுமை பொருக்காமல்
எடுக்கப்பட்ட மஞ்சைகளில் கவிதை எழுதினான்.

பனித் துளிகளில் கடல் செய்து
வெள்ளத்தில் நீச்சல் பழகினான்.

பூமத்திய ரேகையின் ஒவ்வொரு பருவகாலமும்
வயப்பட்டது இவன் மனதிலும்.

- சந்திரபால் . 

No comments:

Post a Comment