Friday 14 June 2013

அப்பாக்கள் தினம்




 அப்பாக்கள் தப்பாக இருந்தால்
அப்பப்பா ,,,, வாழ்க்கை போச்சப்பா !

எனக்கேற்றபடி என் அப்பா இல்லை – இது
சந்ததி முரண்பாடு ! அல்லது பரம்பரைக் குறைபாடு !

என்ன செய்வேன் நான் ,
என் அப்பா விட்டதற்காகவும் போராட வேண்டும் !
எனக்காகவும் போராட வேண்டும்!
என் பிள்ளைகளுக்காகவும் போராடவேண்டும் !

ஆனால் , தோற்றாலும் ஜெயித்தாலும்
என் அப்பா தானே எனக்கு முன் மாதிரி .

என் தோல்விகளில் என் அப்பாவின் வெற்றிகள் இருக்கின்றன.
என் வெற்றிகளில் என் அப்பாவின் தோல்விகள் இருக்கின்றன.

தோற்றாலும் ஜெயித்தாலும்
என் அப்பா தானே எனக்கு முன் மாதிரி . 

- சந்திரபால் . 




No comments:

Post a Comment