Thursday 27 June 2013

குறும்படங்கள் .

புதிய இயக்குநர்களுக்கு , அவர்கள் எடுக்கும் குறும்படங்கள் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றன .

இரண்டரை மணிநேரத் திரைப்படத்திற்கு , ஒரு முன்னோட்டமாகவே வளர்ந்து வரும் இயக்குநர்கள் , குறும்படங்களை இயக்குகிறார்கள் .

திரைப்பட உலகில் இயக்குநராக வலம் வர துடிக்கும் இளைய தலைமுறைகள் தாங்களாகவே முயன்று அத்தனை செலவுகளையும் சமாளிகத்துக் கொண்டு, 10 நிமிடத்திலிருந்து 15 நிமிடங்கள் வரை குறும்படங்களை எடுக்கிறார்கள் .அதனால் குறும்படத்தின் திரைக்கதையில், கதை - மையம் – சூழல் என்று , எல்லாம் ‘பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்க வேண்டியது அவசியமானதாக இருக்கிறது .

ஒரே ஒரு மையத்தை வைத்துக் கொண்டு , தொடக்கம் – முடிவு –உச்சம் என்று குறும்படங்கள் அழுத்தமான பதிவுகளோடு செய்தி சொல்கின்றன. திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போதே , பாடத்திட்ட ஆய்விற்காக மாணவர்கள் குறும்படங்களை எடுத்துக்காட்டுகிறார்கள் . அதில் வியக்கதக்க பரிசோதனை முயற்சிகளில் இறங்குவது , ஒரு பக்கம் இருந்தாலும் , விளையாட்டுத் தனமாக சாதாரணக் காமிராக்களை வைத்துக் கொண்டு , கேலிக்கூத்தாகவும் குறும்படங்கள் என்ற பேரில் மாணவர்கள் எடுக்கிறார்கள் .

100 குறும்படங்களில் 10 லிருந்து 15 குறும்படங்களே வெற்றி பெறுகின்றன .
இதிலிருந்தே , திறமையான இயக்குநர்களை யாரென எளிதில் தெரிய வருகிறது . குறும்படங்களை ஊக்கப்படுத்துவதற்காக தமிழ் நாட்டில் இயங்கி வரும் பயிற்சிப் பட்டரைகளில் , நிகழ் மற்றும் நிழல் , காட்சிப்பிழை போன்ற திரைப்படம் சம்பந்தமான பத்திரிகைகள் உலக சினிமாக்களைப் பற்றியும் குறும்படப் போட்டிகளைப் பற்றியும் விவாதித்து வருகின்றன . தொடர்ந்து மாதத்தில் ஒரு முறையோ , அல்லது இருமுறையோ நாடகம் மற்றும் சினிமா குறித்த திரை மேதைகளை அழைத்து விவாதங்கள் நடத்தி வருகிறார்கள் .

“நாளைய இயக்குநர் என்ற தலைப்பில் கலைஞர் தொலைக்காட்சி நடத்தி வருகின்ற குறும்படப் போட்டி , வாரம் ஒருமுறை நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது . இம்மாதிரியான வாய்ப்புகளின் மூலம் திறமையான - வளரும் இயக்குநர்கள் வெகுஜன உலகில் தங்களுக்கான இடத்தை தேர்தெடுத்துக் கொள்கிறார்கள் . மேலும் , கல்லூரி மற்றும் ஊடகவியல் வட்டாரங்களால் நடத்தப்படும் கலை விழாப் போட்டிகளில் ரூ . 250 வரை முன்பதிவாகச் செலுத்திக் கலந்து கொள்கிறார்கள் . 

சிறந்த குறும்படங்களுக்குப் பிரமாதமான விருதுகளைக் கொடுத்து குறும்பட இயக்குநர்களைக் கௌவரப்படுத்துகிறார்கள் . 

வளரும் இயக்குநர்கள் , தங்கள் முதல் இரண்டு மூன்று படங்களை வெற்றிப்படங்களாகக் கொடுத்து விட்டு அதன் பிறகு வரும் படங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறார்கள் . அதற்குக் காரணம் பல நாள் உழைத்து முழு திறமையும் போட்டு எடுத்த தொடக்க கால படங்களைப் போல , வளரந்த பிறகு எடுத்த திரைப்படங்களை அமைந்து விடுவதில்லை .


பசியில் இருக்கும் பார்வையாளன் , கிடைத்ததைச் சாப்பிட நினைக்கும் தருணங்ரகளில் சுவையற்ற சில படங்களும் வெற்றிப்படங்களாகப் பார்க்கப்படுகின்றன .

இந்தக் குறும்படங்களின் மூலம் திரை உலகில் அடியெடுத்து வைக்கும் இயக்குநர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது . மேலும் "எதார்த்த மீறல்கள்" கொண்ட படங்கள் தோலிவியைத் தழுவி நிற்கின்றன .
வெறும் நடப்பிலை மட்டுமே மையப்படுத்தி இயக்கப்படும்  படங்களும் , முழு நேரப் படங்களாக எடுப்பட்டுத் தோல்வியடைகின்றன .

மேற்கத்திய மரபைத் தழுவி முழுக்க முழுக்க கற்பனையில் படமெடுக்க இங்க முதற்கட்ட முயற்சிகள் கூட இன்னும் எடுக்காதது தான் வருத்தம் .
குறும்படங்கள் இயக்குநராக வருவதற்கு ஒரு சாட்சி சொல்கின்றன , அதுவே நிரந்தரத் தீர்வாகவாகிவிடாது .

       சந்திரபால் .

No comments:

Post a Comment