Sunday 30 June 2013

திருமணக் கடனாளிகள் .


இன்றைய நகரமயமான வாழ்க்கையில் திருமணச் சடங்கள் எல்லாம் பொருளாதாரத்தை மட்டுமே மையப்படுதியே நடந்து வருகின்றன .

30 வயதுக்கு மேலாகியும் திருமணம் நடக்காமல் ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஏராளம் இருக்கிறார்கள் .

உரிய வயதைக் கடந்தவுடன் திருமணமாகாத பிள்ளைகள் வீட்டில் 
இருப்பது, கிராமங்களில் பெறும் மானப்பிரட்சனையாக இருக்கும் .

மூத்த பெண்ணைத்தொடர்ந்து , நான்கைந்து பிள்ளைகள் இருந்தால் , அது இன்னும் சிக்கல் . அதில் தாயோ -  தந்தையோ , யார் ஒருவர் இல்லாமலும், இயலாமலும் இருந்தால் , அந்தக் குடும்பத்தில் குழந்தைகள் பிறந்ததே சாபமாக இருக்கும் .

கருப்பாகவோ , ஒச்சமாகவோ , இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணைக் கரை சேர்க்க முடியாமல் பெற்றோர்கள் தவிப்பார்கள் .

ஒவ்வொரு முறை மாப்பிள்ளை வரும் போதெல்லாம் , டீ வாங்கிக் கொடுத்து , பெண்ணின் கையால் தண்ணீர் கொடுத்து நிற்கச் செய்வது பெறும் சலிப்பாகவும் வேதனையாகவும் இருக்கும் . மாப்பிள்ளை கொஞ்சம் அழகாக இருந்தால் பெண் வீட்டாருக்கு பயம் வந்து விடும் . “இந்தத் தடவையாவது , சம்மந்தம் கூடி வராதா …! என்றேங்கும் குடும்பங்கள் இயலாமையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

தோஷம் , சனி என்று ஜாதக் கோளாறுகளைக் காரணம் காட்டி பிழைக்கும் கூட்டம் இதில் புகுந்து சமத்தான லாபம் பார்க்கிறது .
அறிவிலிகளாக வாழ்ந்து கடக்கும் மக்கள் என்ன செய்வார்கள் …? மன திருப்திக்காகக் கண்டதைச் சொல்லிக் கேட்பதை ஆறுதலாக நினைக்கிறார்கள் .

அப்படிப் பார்த்தால் , கிராமத்து மக்களுக்குத் தான் இந்த கதியென்றால் …. நகரமக்களுக்கு திருமணங்களால் வரும் பிரட்சனைகள் முழுக்க முழுக்க பொருளாதாரத்தை மையப்படுத்தியே இருக்கிறது.
கிராமத்து வீட்டு வாசல்களில்  50 பேர் வரை, படுத்துறங்கும் வசதியெல்லாம் இன்றும் இருக்கிறது . ஆனால் நகரங்களில் வாசல் கூட இருப்பதில்லை .

புறாக் கூண்டுகளைப் போல நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வரும் நகரமக்கள் தங்கள் சொந்த வீட்டையே வாடகைக்கு விட்டு , பெரிய வீடுகளில் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள் .

கேட்டால் , வீட்டில் இருக்கும் மகளைப் பெண் கேட்டு வருபவர்களுக்குப் பெரிய வீடாக இருந்தால் தான் பிடிக்குமாம் . அதனால் தான் பெரிய வீடுகளைக் காட்டி திருமண்ததை முடிக்க ஏற்பாடு செய்து காத்திருக்கிறார்கள் .

அதுவும் திருமணத்தை வீட்டில் பந்தி வைத்து நடத்தும்  இடவசதி யெல்லாம் நகரத்தில் எந்த வீட்டிலும் இல்லை . அப்படியே இருந்தாலும் முகவரி கண்டுபிடித்து வருவதற்குள் கல்யாணம் முடிந்து பந்தியும் தீர்ந்து விடும் . [வேறென்ன, ரோட்ல ஒதுங்கவா முடியுது .]
திருமண மண்டபங்களின் வாடகை விலை யேற்றமெல்லாம் நடுத்தர மக்களுக்கு , சக்திக்கு மீறியதாக இருந்து வருகிறது . உறவுகளையும் – நண்பர்களையும் திருப்திபடுத்தவே , சம்மந்தப்பட்டவர்கள் படாத பாடுபடுகிறார்கள் . 

தங்கள் கௌரவத்தைக் காட்டவே இப்படிப்பட்ட கல்யாணக் காது குத்துகளை, மஹால்களில் நடத்தும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதனால் , பல வருடங்கள் கடனாளியாக வாழ வேண்டியிருக்கிறது .
வரதட்சனையின் அளவில் தங்கத்தின் மதிப்பை ஈடு செய்ய முடியாமல் பெற்றோர்கள் ,பெண் பிள்ளைகளுக்காவே உழைத்து ஓய்ந்து விடுகிறார்கள். பருவம் எய்தியவுடன் , நகை சேர்க்க ஆரம்பிக்கிறார்கள் .

அதிலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் , தங்கள் திருமணங்களைத் தாங்களே முடித்து கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் .

“வீட்டைக் கட்டிப்பார், கல்லயாணத்தை முடித்துப் பார் - என்று ஒரு பழமொழி சொல்வார்கள் . இரண்டுமே நிறைவேறுவதற்குள் வாழ்க்கையில் பாதி முடிந்து விடுகிறது .

அரசு வேலை – எதிப்பார்ப்புகள் என்று , பேஜ்சுலர்களுக்கும் , முதிர் கன்னிகளுக்கும் ஏற்பட்ட முடிச்சுகளை அவிழ்ப்பது அவ்வளவு சுலபமானதல்ல .

நமது மூத்த பழங்கால திருமணச் சடங்கு சம்பிரதாயங்கள் எப்படி இருந்தது என்பதை எப்படி புரிய வைக்க முடியும் ….? யார் ஏற்றுக் கொள்வார்கள் …?
நெல்லும் , பூவும் சேர்த்து முடிந்து தாளியாகக் கோர்த்து திருமணம் நடத்துவார்கள் .  வீரம் – உழைப்பு மட்டும் நம்பி இருப்பார்கள் .  
பெண்கள் முன்னிலைப் படுத்தப்பட்டார்கள் . அதற்காக இப்போது இருக்கும் நடைமுறையைப் போல , வரனுக்குத் தட்சணை கொடுத்ததாகத் தெரியவில்லை .

காலம் மாறிவிட்டது . மதிப்பீடுகள் சிதைந்து விட்டது .
மானம் – கௌவரம் என்று பணத்திற்காகவும் அழகிற்காகவும் , கடைசி வரைக்கும் வாழமுடியாமல் அலைகிறார்கள் .


-         சந்திரபால் .

No comments:

Post a Comment