Monday 17 June 2013

கடந்த காலம் கடந்து விடவில்லை .



 அவள் சகாராவை விட்டு எங்கு போனாள்…

இனி எத்தனை நூற்றாண்டுகள் அழ வேண்டும்…

சாபமிட்ட விதூசகம் கழுத்தைப் பிடித்து கடித்து விட்டது…

உயிரை மட்டும் எடுக்க மறுத்து விட்டது…

அழுது அழுது சிவந்தன இமையடிகள்.

சளியும் கண்ணீராகச் சிந்தியது.

நெஞ்சைக் கூறு போட்டுக் கொத்தும் பருந்துகள் முன்னால்
எச்சில் விழுங்க நின்றான்…

நாத்திகமானவன் .

சடங்குகளின் நெறுக்கம் அவள்.

உயிரே ஏலம் போகும் போது
தன்னை விற்றக்கவும் அவன் தயக்கவில்லை.

அவள் எனக்கானவள்….

கண்ணீரையும் ரத்தத்தையும் என் வேருக்கடியில் வைத்தவள்…

ஒரு முன்னிரவில் இது காறும் எண்ணத்தில் மட்டும் இருந்ததை
பக்குவம் சொல்லி ஒரு வார்த்தையில் சரிதம் செய்தவள்…

வலி தாங்கி பிறவிப் பயனை சிந்தி பருகியவள்….

நான் குழைத்த அந்தரங்கத்தை வீதியெங்கும் வாரியிறைத்தவள்…

சில நிமிடங்களும் கதைகளாகும்….

சொற்கள் அனைத்தும் தத்துவங்கள்.

சகாராவில் அறியாமையில் வாழ்ந்தவன்.

ஏதொன்றுக்கும் மாதக்கணக்கில் மன்னிப்புக் கேட்டவன்.

சகாராவுக்குள் வந்தவர்களில் இவனும் உண்மையானவன்.

இருவரும் குற்றவாளியாக இருந்தாலும்
ஒருவர் மற்றவரை ஞாயப்படுத்தத் தெரிந்தவர்கள், பிரிந்தார்கள்…

காலம் ஒன்றை மட்டும் பல டிகிரியில் வரைந்தது.

சகாராவில் ரத்தம் காய்ந்த போதெல்லாம்
கண்ணீர் காயாமல்.

- சந்திரபால் .

No comments:

Post a Comment