Wednesday 26 June 2013

நான்கு தக்காளியும் இரண்டு பெல்லாரி வெங்காயமும் !



மாதக்கடைசிகளாக மாறி விட்ட பலருக்கும் தங்கள் நேரம் தங்களுடையதாக இருப்பதில்லை .

ஹோட்டல்களில் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டு காலம் தள்ளுவதே எதார்த்தமாக ஆகிவிட்டது .

தெருவோர ‘ஆயா கடைகளில் நாளு இட்லி ,கொஞ்சம் சட்டினிக்காகப் பள்ளிக் குழந்தைகள் நின்றிருப்பதை தினமும் பார்த்து வருகிறேன் .

சென்னை , கோயமுத்தூர் , திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வேலைக்கு வந்த பேஜ்சுலுர்கள் குறைந்த விலைக் கையேந்தி பவான்களே சரியாக இருக்கும்.

சில நேரங்களில் , ஒரே உணவைச் சாப்பிடும் நிலை சலிப்பை ஏற்படுத்துகிறது . அதிலும் , வீட்டில் அசைவம் சாப்பிட்டு பழகியவர்கள் குடும்பத்தை விட்டு வந்து சரியாக சாப்பிட முடியாமல் பல எதிர்பார்ப்புகளோடு வாழ்கிறார்கள் .

இருக்கும் இடத்திலே நன்றாக சமைத்து சாப்பிடும் வசதியிருந்தாலும் , சோறு- குழம்பு என்று வைப்பதற்குச் சோமேரித்தனப் பட்டு , தெருக்கடைகளில் திருப்தியில்லாமல் சாப்பிட்டு வருகிறார்கள் . கேட்டால் , சமைப்பதற்கெல்லாம் நேரம் எங்கிருக்கிறது …..? என்று சொல்கிறார்கள் .

வயிற்று உணவுக்குக் கூட நேரம் ஒதுக்க முடியாத இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது ….?

பணம் – காசு – சம்பளம் இது மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டு வாழ்க்கை நகர்கிறது . அப்படி பார்த்தால் , ஏழைகளுக்கு மட்டுமல்ல , கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களுக்கும் இதே பிரட்சனை தான் .
வாழ்க்கையைக் கலையாகவும் , அழகியலாகவும் கொண்டு வாழ்பவர்கள் இதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் .

சமைப்பது ஒரு கலை . சமைக்கும் போது இருக்கும் மனநிலையைப் பொறுத்து சுவை வரும் என்கிறார்கள் .

ஆண்மீகத்தில் உணவு பிரதானமாகப் பேசப்படுகிறது .எந்த நேரத்தில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தனித்த வரைமுறைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு தாவரத்திற்கும் தனிப்பட்ட சக்தி இருக்கிறது . உணவே மருந்தாக இருக்க வேண்டிய நிலை மாறி , மருந்தை உணவாக சேர்க்கும் நிலை அறியாமை தான். தெரிந்தும் அல்லது வழியில்லாத நிலை தான் .

சில குடும்பங்களில் ஆண்கள் பிரமாதமாக சமைப்பதைப் பார்த்திருக்கிறேன் . அவ்வளவு அருமையாக சுடச் சுட தோசை வரும் . அதற்காவே அங்கு போகத் தோன்றும் .

நான்கு தக்காளி இரண்டு பல்லாரி வெங்காயத்தை தாளித்துச் சுவைபட வைக்கும் சட்டினிக்கு எச்சில் ஊறும். தேவையான அளவுக்குக் காய்களை வாங்கி வைத்துக் கொண்டு சிக்கனமாகச் சமைக்கும் நண்பர்கள் , சாப்பாட்டுக்குப் பிரட்சனையில்லை என்கிறார்கள் .

சமைத்துச் சாப்பிட வழியில்லாதவர்கள் , எவ்வளவு தான் சம்பாரித்தாலும் வயிற்றுக்குப் போதவில்லை என அழுத்துக் கொள்கிறார்கள் .
எவ்வளவு வருமானம் வந்தாலும் அதற்கேற்ப தேவைகளும் ஆடம்பரச் செலவுகளும் வரிசையில் வந்து நிற்கும் .

வருமானம் போதுமான அளவுக்கு இருக்கும் - இல்லையென்பதல்லாம் , செலவையும் தேவைகளையும் குறைக்கும் சாமர்த்தியத்தில் தான் இருக்கிறது . அதோடு , முடிந்தளவுக்குச் சமைச்சு சாப்பிடுங்க …!

       சந்திரபால் .

No comments:

Post a Comment